சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 77 வது பிறந்த நாளை முன்னிட்டு, போயஸ் கார்டனில் உள்ள அவரது இல்லத்தில் நடிகர் ரஜினிகாந்த் மரியாதை செலுத்தினார்.
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ரெக்கை கட்டி பறந்த ஜெயலலிதா தமிழக அரசியலிலும் வரலாற்று சாதனை படைத்த ஒப்பற்ற தலைவியாக வீறு நடை போட்டவர். இவர் தமிழகத்தில் எதிர்க்கட்சித் தலைவராகவும், 6 முறை முதலமைச்சராகவும் இருந்தவர். தாலிக்கு தங்கம், அம்மா உணவகம், தொட்டில் குழந்தை திட்டம், பெண் சிசுக்கொலை, 69 சதவிகித இட ஒதுக்கீடு, அனைத்து மகளிர் காவல் நிலையம் என்ற சிறப்பான பல திட்டங்களால் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். யாருக்கும் பயப்படாமல் தவறு என்றால் யாராயிருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள் என்ற கர்ஜனையான பேச்சால் இரும்புக்கரம் கொண்டு அடக்கும் சிறந்த பெண்மணி. இதனால் இவரை இரும்புப் பெண்மணி எனவும் மக்கள் அழைத்தனர். மக்களால் நான் மக்களுக்காகவே நான் என்ற சூளுரையால் தமிழக மக்களின் மனதில் ஒலித்துக் கொண்டே இருக்கும் வகையில் அசைக்க முடியாத சாம்ராஜியத்தை கட்டி காத்தவர். இதனால் மக்கள் அம்மா என்று அன்புடன் அழைத்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் 77வது பிறந்தநாள் இன்று.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 77வது பிறந்தநாளை முன்னிட்டு இன்று காமராசர் சாலையில் உள்ள அவரது நினைவிடத்தில், தமிழக அரசின் சார்பில் அவரின் திருவுருவச் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
அதே சமயத்தில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அலுவலகத்தில் அமைந்துள்ள ஜெயலலிதாவின் திருவுருவச் சிலைக்கு, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார். பிறகு அதிமுக கட்சி கொடியினை ஏற்றி வைத்து இனிப்பு வழங்கி, ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழா சிறப்பு மலரையும் வெளியிட்டார். அதன்பின்னர், 77 கிலோ கேக் வெட்டி தொண்டர்களுக்கு வழங்கினார். இதனைத் தொடர்ந்து அக்காட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் என அனைவரும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினர்.
இந்த நிலையில், மறந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று போயஸ் கார்டனில் உள்ள அவரது இல்லத்தில் நடிகர் ரஜினிகாந்த் மரியாதை செலுத்தினார்.
பல வருடங்களுக்குப் பிறகு போயஸ் கார்டனில் உள்ள மறைந்த ஜெயலலிதாவின் இல்லத்திற்கு நடிகர் ரஜினிகாந்த் சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இத்தனை காலமாக ஜெயலலிதாவின் வீட்டுக்குச் சென்று அஞ்சலி செலுத்தாத நடிகர் ரஜினிகாந்த் இந்த முறை சென்றது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
விஜய்யின் ‘ஜனநாயகன்’ பட வழக்கு: நாளை காலை 10.30 மணிக்கு தீர்ப்பு
ஜனநாயகன் பட விவகாரம்... விஜய்க்கு ஆதரவாக.. சினிமா, அரசியல் துறையில் உரத்து ஒலிக்கும் குரல்கள்!
மிரட்டல் அரசியல் தமிழ்நாட்டில் பலிக்காது...ஜனநாயகனுக்கு ஆதரவாக குரல் கொடுக்கும் காங்கிரஸ்
தவெக தனித்து போட்டியா? கூட்டணியா?... ரகசியத்தை உடைத்த கிரிஷ் சோடங்கர்
அமலாக்கத்துறை ரெய்டு என்ற பெயரில் டேட்டாக்களை திருடுகிறார்கள்...மம்தா பகீர் குற்றச்சாட்டு
'பழைய ஓய்வூதிய திட்டமே நிரந்தர தீர்வு': தமிழக அரசுக்கு டிடிவி தினகரன் கோரிக்கை
சோனியா காந்தி டெல்லி மருத்துவமனையில் அனுமதி: உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை தகவல்
தமிழக சட்டசபை தேர்தல் 2026...நாம் தமிழர் கட்சிக்கு டஃப் கொடுக்க போவது யார்?
கூட்டணி அமைப்பதற்கே திண்டாட்டம்...அதிமுக கூட்டணி பற்றி திருமாவளவன் கிண்டல்
{{comments.comment}}