கோவை: கோவை உள்ள ஈஷா யோகா மையத்தில் நடந்த மஹா சிவராத்திரி விழாவில் கலந்து கொண்ட தமன்னா மற்றும் சந்தானம் ஆகியோர் அழுத கண்களுடன் உருக்கமாக பங்கேற்றனர்.
மகா சிவராத்திரி என்றாலே சிவ பெருமானை நினைத்து விரதம் இருந்து, இரவு முழுவதும் கண் விழித்து, சிவன் கோவில்களில் இரவு முழுவதும் நடக்கும் சிவ பூஜையில் பங்கேற்க வேண்டும். அன்று நாள் முழுவதும் உணவு உண்ணாமலும், உறங்காமலும் இருக்க வேண்டும். இடைவிடாது சிவ மந்திரங்களை உச்சரித்தபடி சிவ சிந்தனையிலேயே ஆழ்ந்திருக்க வேண்டும். மாலையில் சிவன் கோவில்களில் நடக்கும் பிரதோஷ பூஜையில் கலந்து கொள்ள வேண்டும்.

மொத்தம் நான்கு கால பூஜைகள் நடைபெறும். இதில் முதல் காலத்தில் பிரம்மாவும், 2ம் காலத்தில் விஷ்ணுவும், 3ம் காலத்தில் அம்பிகையும், 4ம் காலத்தில் தேவர்களும் ரிஷிகளும் சிவபெருமானை வழிபட்ட காலமாகும். இந்த நான்கு கால பூஜை முடிந்த பிறகு கோவில்களில் தரப்படும் பிரசாதத்தை சாப்பிட்டு, பட்டினி விரதத்தை நிறைவு செய்ய வேண்டும். அதற்கு பிறகு மார்ச் 09ம் தேதி பகல் முழுவதும் தூங்காமல், மாலை வீட்டில் விளக்கேற்றி சிவனை வழிபட்ட பிறகு, இரவு 7 மணிக்கு பிறகே தூங்க செல்ல வேண்டும்.
மூன்றாம் கால பூஜையான இரவு 11.45 முதல் 12.15 வரை நடைபெறும் பூஜையின் போது கண்டிப்பாக கண் விழித்து சிவ வழிபாடு செய்ய வேண்டும். அடி முடி காண முடியாத லிங்கோத்பவராக சிவபெருமான் காட்சி தந்த காலமாகும். இந்த நேரத்தில் கண்டிப்பாக கண்விழித்து பூஜை செய்தால், மகாசிவராத்திரி அன்று இரவு முழுவதும் கண் விழித்து சிவனை வழிபட்ட பலனை பெற்று விடலாம்.
ஒவ்வொரு ஆண்டும் இந்த விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் கோவை வெள்ளியங்கிரியில் உள்ள ஈஷா யோகா மையத்தில், சற்குரு தலைமையில் சிறப்பு தியான நிகழ்ச்சி நடைபெற்றது. இவ்விழாவில் பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், நடிகர், நடிகைகள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஷங்கர் மஹாதேவன் இசை நிகழ்ச்சி நடத்தினார்.
நடிகை தமன்னா மனம் உருகி சிவனை வழிப்பட்டார். நடிகர் சந்தானம் மனம் உருகி கண்ணீர் விட்டு வேண்டிகொண்டார். தமன்னா மற்றும் சந்தானம் கலந்து கொண்டு சிவபெருமானை உருகி வேண்டிய வீடியோக்கள் தற்பொழுது இணைய பக்கங்களில் வைரலாக பரவி வருகிறது.
டிட்வா புயலுக்குப் போட்டியாக விறுவிறுன்னு ஏறி வரும்.. தங்கம் விலை.. அம்மாடியோவ்!
அரசியல் சாசனத்தின் மீது ஆணையாக.. வித்தியாசமான உறுதிமொழி எடுத்து திருமணம்!
மசாலா பாண்டு விவகாரம்...கேரள முதல்வருக்கு அமலாக்கத்துறை சம்மன்
டிசம்பர் மாதம் வந்தாச்சு.. களை கட்டும் விழாக்கள்.. என்னெல்லாம் இருக்கு பாருங்க!
நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் இன்று துவக்கம்...புயலை கிளப்ப எதிர்க்கட்சிகள் திட்டம்
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் டிசம்பர் 01, 2025... இன்று நன்மைகள் அதிகரிக்கும்
முன்னாள் புயல் டிட்வா.. இன்னும் சில நாட்கள் கடலோரமாகவே சுத்திருட்டிருக்குமாம்.. மழை நீடிக்கும்!
கைத்தட்டல்.. தட்டுங்கள்.. தட்டத் தட்ட ஊக்கம்தான்!
நாணலையே நாணச்செய்யும் இளந்தென்றல் வீசயிலே...!
{{comments.comment}}