சென்னை: விடுதலை 2 நாளை வெளியாகவுள்ள நிலையில், படம் குறித்த சில தகவல்களை படத்தின் இயக்குனர் வெற்றிமாறன் வெளியிட்டுள்ளார். கூடவே திருப்தியையும் வெளியிட்டுள்ளார்.
கடந்த ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற படங்களில் ஓன்று தான் விடுதலை. இந்த படத்தில் சூரி, விஜய்சேதுபதி, கவுதம் மேனன், இளவரசு,ராஜிவ் மேனன், சேத்தன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். படத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா இசையமைத்திருந்தார். முதல் பாகம் வெற்றி பெற்றதை தொடர்ந்து நாளை இப்படத்தின் 2ம் பாகம் வெளியாகிறது. இந்த இரண்டாம் பாகத்தில் கூடுதலாக மஞ்சு வாரியர், அனுராக் காஷ்யப், கென் கருணாஸ் ஆகியோர் நடித்துள்ளனர்.
சமீபத்தில் தான் விடுதலை 2 படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. குறிப்பாக, ட்ரெய்லரில் வெளியான வசனங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. இப்படத்தின் முதல் பாகத்தில் பாடல்கள் ஹிட் அடித்த நிலையில், தற்போது விடுதலை 2ம் பாகத்தின் பாடல்களும் வெளியாகி ட்ரெண்டாகியுள்ளன. சென்சார் செய்யப்பட்ட இப்படத்திற்கு ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. படம் குறித்த எதிர் பார்ப்பு ரசிகர்களிடையே தற்போது அதிகரித்துள்ளது.

இந்த பிண்ணணியில் படம் குறித்த தனது கருத்துக்களை வெற்றிமாறன் பகிர்ந்து கொண்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
விடுதலை 2 படத்தின் வேலைகள் தற்போது தான் முடிந்துள்ளன. ரொம்ப எக்ஸ்டன்சிவ்வான எக்சாஸ்டிங்கான வேலை. கடைசி நிமிடத்தின் லென்த்தை படத்தில் இருந்து 8 நிமிடங்கள் ரெடியூஸ் பண்ணி இருக்கோம். படத்தில் இருந்த எல்லாருக்கும் இது ஒரு லேர்னிங் எக்பீரியன்ஸ். இந்த ஜர்னியே ஒரு பெரிய ஜர்னி. படத்தை எல்லாருடைய பங்களிப்பும் சேர்ந்துதான் உருவாக்கி இருக்கு. இந்த மாதிரியான படத்தை சப்போர்ட் பண்ணி கூடவே இருந்த எல்லாருக்கும் நன்றி.
ஒரு படமா எப்படி வந்து இருக்குனு ஆடியன்ஸ் தான் சொல்லனும். இந்த படத்தில் எங்களுக்கு நிறைய அனுபவங்கள் கிடைச்சு இருக்கு. நாங்க இந்த படத்திற்காக கடினமாக உழைத்திருக்கோம் நன்றி என தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
ஒரே சூரியன் .. ஒரே சந்திரன்.. ஒரே திமுக... பாட்ஷா ஸ்டைலில் அதிரடி காட்டிய முதல்வர் மு.க.ஸ்டாலின்
முதல்வர் மு.க.ஸ்டாலின் இடத்துக்கு நிச்சயமாக உதயநிதி வருவார்: துரைமுருகன் புகழாரம்!
இளைஞர்களை ரவுடிகளாக்க எதிர்க்கட்சிகள் முயற்சி...பிரதமர் கடும் குற்றச்சாட்டு
நடிகை கௌரி கிஷனின் உடல் எடை குறித்த கேள்வி... வருத்தம் தெரிவித்து யூடியூபர் வீடியோ வெளியீடு!
பார்லிமென்ட் குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் 1 முதல் ஆரம்பம்
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிலிருந்து.. வெளியேறுகிறாரா சஞ்சு சாம்சன்.. சிஎஸ்கேவுக்கு வருவாரா?
தமிழ்நாட்டில் இன்று 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு... சென்னை வானிலை மையம் தகவல்!
மனித நேயமும் மாற்றுத்திறனாளிகளும்.. தன்னம்பிக்கையும், தைரியமும் அவர்களை வழி நடத்தும்!
வாரத்தின் இறுதி நாளான இன்று தங்கம் விலை எவ்வளவு தெரியுமா? இதோ முழு விலை நிலவரம்!
{{comments.comment}}