உலக சாதனை நல்லாசிரியர் லதாவின் புயலில் மலரும் பூக்கள்.. அமைச்சர் கே.என். நேரு வெளியிட்டார்

Mar 12, 2026,04:02 PM IST

சென்னை: சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு பாரத் சேவா ரத்னா முனைவர்.கோ.லதா எழுதிய புயலில் மலரும் பூக்கள் நூலை அமைச்சர் கே. என். நேரு தனது இல்லத்தில் நடந்த நிகழ்வில் வெளியிட்டார்.


கல்வித்தூதர், பன்முக உலக சாதனையாளர், தமிழக அரசின் மாநில நல்லாசிரியர் விருதாளர், சென்னை மாநகராட்சி பள்ளியில் பணி புரியும் ஆசிரியர் என பன்முகம் படைத்தவர் லதா. இவர் 425 கவிதைகளை நான்கு நாட்களில் எழுதி இரு உலக சாதனை புத்தகத்தில் (பியூசபெலஸ் வேர்ல்ட் புக் ஆஃப் ரெகார்ட்ஸ் மற்றும் கின்னஸ் உலக சாதனை புத்தகத்திலும்) இடம் பெற்று  உலக சாதனை நூலாக தொகுத்து 322 பக்கங்களில் பள்ளி  மற்றும் நூலகங்களில் இடம்பெறக்கூடிய கவிதை நூலாக எழுதி ஊரகம் மற்றும் பொதுத்துறை அமைச்சர் மாண்புமிகு கே என் நேரு அவர்கள் இல்லத்தில்  வெளியிட்டுள்ளார். 


நூலினை நல்லாசிரியர் லதா வெளியிட ஊரகம் மற்றும் பொதுத்துறை அமைச்சர் மாண்புமிகு கே.என். நேரு மற்றும் திருச்சி மாவட்ட மேயர் மாண்புமிகு மு. அன்பழகன் நூலினை பெற்றுக் கொண்டனர். நல்லாசிரியர் லதா முதல் நூலாக 137 பக்கத்தில் திருக்குறள் கூறும் நன்னெறிகள் என்ற தலைப்பிலே தன்னுடைய முதல் நூலை வெளியிட்டுள்ளார். 




இரண்டாம் நூலாக தொல்காப்பியம் காட்டும் வாழ்வியல் தத்துவங்கள் என்ற தலைப்பிலே 132 பக்கங்களை உள்ளடக்கிய நூலாக வெளியிட்டுள்ளார். மூன்றாம் நூலாக புயலில் மலரும் பூக்கள் என்னும் தலைப்பில் 425 கவிதைகளை 322 பக்கங்களில் வெளியிட்டுள்ளார். 


பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களுக்கும் புயலில் மலரும் பூக்கள் புத்தகத்தை நல்லாசிரியர் லதா வழங்க வீரமங்கை 2026 விருதை மாண்புமிகு கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் திருகரங்களால் நல்லாசிரியர்  லதா பெற்றுக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 


தன்னுடைய மூன்று நூல்களையும் தன்னுடைய தாயார் திருமதி லீலாவதி கோவிந்தராஜ் அவர்களுக்கு அர்ப்பணம் செய்து ஆசீர்வாதத்தை  பெற்றுக்கொண்டார். கல்வியாளர்கள் மற்றும் அதிகாரிகள் பலரும் நல்லாசிரியர் முனைவர் கோ லதா அவர்களுக்கு  வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

பெண் என்பவள்

news

Short Story: நீக்கறதா.. வேண்டாமா?

news

பள்ளி மாணவர்களுக்கு சத்துணவில் வாரம் ஒரு நாள் சிக்கன் பிரியாணி

news

டெலிகிராம் நிறுவனர் பாவெல் துரோவுக்கு பிடிவாரண்ட்: தேடப்படும் குற்றவாளியாக அறிவிப்பு!

news

டாஸ்மாக் குடோன்கள் மற்றும் மதுபான ஆலைகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை

news

உன் ஞாபகங்கள் வலிக்கின்றது!

news

வாழ்க்கைக்கு வழிகாட்டும் குருமார்களைப் போற்றுவோம்.. குரு பூர்ணிமா சிறப்புகள்

news

பாமக தலைவராக மீண்டும் டாக்டர் அன்புமணி தேர்வு.. வடிவேல் ராவணன், திலகபாமாவுக்கும் மீண்டும் பதவி

news

முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி வீடு உட்பட 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி ரெய்டு!

அதிகம் பார்க்கும் செய்திகள்