சென்னை: சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு உலக செந்தமிழ் சங்கம் மற்றும் கின்னஸ் வேர்ல்ட் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் இணைந்து நடத்திய திருக்குறள் கவிதை எழுதும் நிகழ்வு நடத்தப்பட்டது.
திருக்குறளில் ஒரு அதிகாரத்திற்கு ஒரு பாடலாக 24 வரிகளில் 133 கவிதை எழுதி இரண்டு மணி நேரம் 30 நிமிடங்களில் நிகழ்த்திய சாதனையை கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் உலக சாதனையாக இடம்பெறச் செய்து உலக சாதனையாளர்களுக்கு உலக சாதனை சான்றிதழ் மெடல் கேடயம் போன்றவைகளை உலக செந்தமிழ் சங்கம் நிறுவனர் ஒருங்கிணைப்பாளர் பாரத் சேவா ரத்னா. முனைவர். கோ. லதா, கல்வித் தூதர், பன்முக உலக சாதனையாளர், தமிழக அரசின் மாநில நல்லாசிரியர் விருதாளர், சென்னை அவர்களால் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டது.

உலக செந்தமிழ் சங்கம் நிறுவனர் ஒருங்கிணைப்பாளரும் இதில் பங்கேற்று உலக சாதனை சான்றிதழ் பெற்றது குறிப்பிடத்தக்கது. கல்வியாளர்கள் பலரும் இதற்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர் .
உலக செந்தமிழ் சங்கத்தால் முதலாவது உலக சாதனை நிகழ்வாக திருவள்ளுவர் தினத்தன்று வைகை அணை ஆண்டிபட்டியில் 1330 திருக்குறளுக்கும் 1330 திருக்குறள் ஹைக்கூ கவிதைகளை ஒரு மணி நேரம் 15 நிமிடத்தில் 17 நபர்கள் பேனர் பர்மனன்ட் மார்க்கரில் எழுதி சாதனை செய்தது முதலாம் உலக சாதனையாக பதிவிடப்பட்டது.
இது உலக செந்தமிழ் சங்கம் நிறுவனத்தால் நடத்தப்பட்ட இரண்டாம் உலக சாதனை நிகழ்வு என்பது குறிப்பிடத்தக்கது.
Attention, Dear ’80s Trend Mongers! .. ரெட்ரோ மோகம் vs AI-ன் தாக்கம் பற்றி தெரிஞ்சுக்குங்க!
Short Story: "வெந்நீர் கொடுப்பாளா காவேரிக்கரையில?"
போதை உன்னை தொட்டவுடன் போற இடம் மறந்ததடா.... போதை விழிப்புணர்வுக் கவிதை!
Solomon Pappaiah: தமிழின் இனிமையை தன் நாவால் உலகறியச் செய்தவர்.. சாலமன் பாப்பையா!
வழிகாட்டி தேவதை.. ஒரு நிமிடக் கதை (16)
கடைசி வரை மூக்கு கண்ணாடியே கிடையாது.. ஸ்ரீ உ.வே. குப்புசாமி அய்யங்கார்!
பெருநம்பி குலச்சிறை தன் அடியார்க்கும் அடியேன்.. குலச்சிறை நாயனார் !
தமிழுக்கு ஓர் இழப்பு!
ரீல்ஸ் மோகம்!
{{comments.comment}}