- மயிலாடுதுறை த.சுகந்தி,M.Sc,B.Ed,B.A(Hindi)
சைபர் சென்சார்னா என்னனு தெரியுமா? வாங்க தெரிந்து கொள்வோம்.
உலக சைபர் சென்சார் எதிர்ப்பு தினம் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 12 அன்று கொண்டாடப்படுகிறது. இணையத்தில் கருத்து சுதந்திரத்தை பாதுகாக்க இந்த நாள் கொண்டாடப்படுகிறது.
பத்திரிகையாளர்கள் மற்றும் இணைய எழுத்தாளர்களின் உரிமைகளை பாதுகாக்க முக்கியமாக பயன்படுகிறது.
இந்த தினம் 2008 ஆம் ஆண்டு முதல் கடைப்பிடிக்கப்படுகிறது. Reporters Without Borders என்ற அமைப்பு இந்த தினத்தை முதன் முதலாக தொடங்கியது.
இணையத்தில் சுதந்திரமாக தகவல் பகிரும் உரிமை அனைவருக்கும் இருக்க வேண்டும். தகவல்கள் உண்மையானதாகவும், அடுத்தவர்களுக்கு பயன் தரக்கூடியதாகவும் இருக்க வேண்டும்.
சில நாடுகளில் இணையதளங்கள் மற்றும் சமூக ஊடகங்கள் தடை செய்யப்படுகின்றன. இதனால் மக்கள் உண்மையான தகவல்களை அறிய முடியாமல் போகிறது.

இணைய சுதந்திரம் ஒரு அடிப்படை மனித உரிமையாக கருதப்பட்டாலும் அதில் இருக்கும் தீமைகளை உணர்ந்து செயல்பட வேண்டும். பத்திரிகையாளர்கள் உண்மையை வெளிப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறார்கள்.
இந்த தினம் இணைய தளங்களில் இருக்கும் அனைத்து மக்களிடமும் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக கொண்டாடப்படுகிறது.
பல அமைப்புகள் கருத்து சுதந்திரத்தை ஆதரித்து குரல் கொடுக்கின்றன. இணையத்தில் பாதுகாப்பாகவும் பொறுப்புடன் தகவல்களை பகிர வேண்டும் என்பதை ஒவ்வொருவரும் உணர்ந்து செயல்பட வேண்டும். பொய்யான தகவல்களை பரப்பாமல் இருக்க வேண்டும்.மீறி பொய்யான தகவலை பரப்பினால் நாம் தண்டிக்கப்படுவோம் என்பதை மறந்துவிடக்கூடாது .
நமது கைப்பேசிக்கு ஏதேனும் புதிய எண்ணில் இருந்து லிங்குகள் வந்தால் நாம் அவற்றை பயன்படுத்தக் கூடாது என்பதை பொதுமக்கள் உணர வேண்டும். இதன் மூலம் நமது கைப்பேசியில் உள்ள அனைத்து டேட்டாக்களும் அவர்களுக்கு செல்கின்றன என்பதை உணர்ந்து பார்க்க வேண்டும்.
வருடப்பிறப்பு, தீபாவளி, பொங்கல் போன்ற நாட்களில் ஏதேனும் சிறப்பு சலுகை தருவதாக கூறி இந்த செய்தியை 20 நபர்களுக்கு அல்லது 50 நபர்களுக்கு அனுப்பினால் விலை உயர்ந்த பொருள் கிடைக்கும் என்ற செய்தியை நம்பி அடுத்தவர்களுக்கு இந்த செய்தியை Forward செய்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
எந்த நபரிடமும் நமது ஆதார் எண் மற்றும் OTP எண்கள் கூறுவதை தவிர்க்க வேண்டும். உலகம் முழுவதும் இணைய சுதந்திரத்தை பாதுகாக்க முயற்சிகள் நடைபெறுகின்றன. கைப்பேசி எப்பொழுது வேண்டுமானாலும் அதில் உள்ள டேட்டாக்கள் அழிந்து போவதற்கு காரணம் இருப்பதால் முக்கியமான தகவல்களை நாம் சேமித்து வைத்துக் கொள்வது நல்லது.
குழந்தைகளிடம் கைப்பேசிகளை கொடுக்கும் பொழுது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். சில இடங்களில் கவனக்குறைவால் கைப்பேசி மூலம் பல லட்சம் பணங்களை இழந்ததைப் பற்றி கேள்விப்பட்டிருப்போம்.அதனை உணர்ந்து விழிப்புணர்வோடு செயல்படுவோம்.
இணையம் அறிவை பரப்பும் முக்கியமான கருவியாக உள்ளது. தகவல் சுதந்திரம் சமூக முன்னேற்றத்திற்கு உதவுகிறது.இப்படி பல நன்மைகளை செய்தாலும் மனித உரிமைகளின் முக்கியத்துவத்தை உணர்ந்து செயல்படுவோம்.
இணையத்தில் சுதந்திரமும் பொறுப்பும் அவசியம் என்பதை உணர்த்து விழிப்புணர்வு பெற்றிடுவோம்.
(த.சுகந்தி, மயிலாடுதுறையைச் சேரந்தவர். அருள் தமிழ் இலக்கியம்,மயிலாடுதுறை அமைப்பை நடத்தி வருகிறார். ஆத்திச்சூடி 109, நாலடியார், திருக்குறள் போன்ற தொகுப்பு நூல்களில் சிறுகதை ஒன்று எழுதி உள்ளார். பாரதியார் நவீன ஆத்திச்சூடி எழுதி மகாகவி பாரதி விருது பெற்றுள்ளார். திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையத்தில் தலைமை ஒருங்கிணைப்பாளராகவும் இருக்கிறார்)
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் 2026 : நான்கு முனை போட்டி உறுதியானது
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் 2026 : திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு
‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டம் தள்ளிவைப்பு: அமைச்சர் அருண்ராஜ் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
இதுதான் சூப்பர் Couple Goal.. மனைவி மாநகராட்சி ஆணையர்.. கணவர் எஸ்.பி.. வேலூரில்!
சர்வதேச சுடோகு தினம் .. மூளைக்கு வேலை கொடுக்கும் புதிர் விளையாட்டு!
"லட்க்கி கொய்லா கொஞ்சம் கொடுப்பா".. நாக்பூரை பதற வைத்த மெட்ராஸ்!
சிந்தனைச் சிதறல்.. வடிப்பது சிற்பம் தான் என்றாலும்.. சிறுகச் சிறுக சிதைக்கும் உளிகள்!
சென்னையில் மிதமான மழைக்கு வாய்ப்பு: தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும் எச்சரிக்கை!
காலை உணவுத் திட்ட விரிவாக்கம்: நகராட்சி சார்பில் மாணவர்களுக்கு தட்டு, டம்ளர் வழங்கல்
{{comments.comment}}