சென்னை: மார்க் ஆண்டனி படத்தின் இந்திப் பதிப்புப் படத்தைப் பார்க்கவும், அதற்கு சான்றிதழ் தரவும் மும்பை சென்சார் போர்டு அதிகாரிகள் ரூ. 6.5 லட்சம் வாங்கியதாக நடிகர் விஷால் புகார் கூறியுள்ளார்.
விஷால், எஸ்.ஜே. சூர்யா நடிப்பில், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் வெளியாகி மிகப் பெரிய வெற்றி பெற்ற படம் மார்க் ஆண்டனி. இப்படத்தை இந்தியிலும் டப் செய்து வெளியிட்டுள்ளனர். இந்திப் படத்திற்கான சென்சார் சான்றிதழ் பெறுவதற்கு தான் லஞ்சம் கொடுக்கும் நிலை ஏற்பட்டதாக விஷால் பரபரப்பான புகாரைக் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக ஒரு வீடியோவை அவர் வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
சினிமாவில் ஊழலைக் காட்டினால் தவறில்லை. ஆனால் நிஜத்தில் ஊழல் நடப்பது தவறானது. அதை ஜீரணிக்கவே முடியவில்லை. குறிப்பாக அரசு அலுவலகங்களில். மும்பை மத்திய திரைப்படத் தணிக்கை அலுவலகத்தில் நடப்பது மிகவும் மோசமானது. மார்கா ஆண்டனி இந்திப் பதிப்புக்காக நான் ரூ. 6.5 லட்சம் லஞ்சம் தர நேரிட்டது.
2 முறை இந்தப் பணத்தை நாங்கள் கொடுத்தோம். படத்தைப் பார்ப்பதற்காக ரூ. 3 லட்சம், படத்திற்கு சான்றிதழ் பெறுவதற்கு ரூ. 3.5 லட்சம் என கொடுத்தோம். எனது வாழ்க்கையில் இப்படி ஒரு அனுபவத்தை நான் சந்தித்ததே இல்லை. படம் திரைக்கு வந்தாக வேண்டிய நிலையில் இருந்ததால், வேறு வழியில்லாமல் பணத்தை மீடியேட்டர் மேனகா மூலம் கொடுக்க வேண்டியதாயிற்று.
மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே மற்றும் எனது பிரதமர் நரேந்திர மோடி ஆகியோரின் கவனத்திற்கு இதைக் கொண்டு வருகிறேன். எதிர்காலத்தில் தயாரிப்பாளர்களுக்கு இதுபோல நடக்கக் கூடாது என்பதற்காக இந்த ஊழலை அம்பலப்படுத்தியுள்ளேன். கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் பணத்தை இப்படி ஊழலுக்காக வீணடித்தது வேதனையாக உள்ளது. ஆதாரங்களையும் நான் இணைத்துள்ளேன். சத்தியம் வெல்லும் என்று நம்புகிறேன் என்று விஷால் கூறியுள்ளார்.
யாருக்கு பணம் கொடுக்கப்பட்டது, எவ்வளவு பணம் தரப்பட்டது, எந்த வங்கிக் கணக்கில் அந்தப் பணம் போடப்பட்டது போன்ற விவரங்களையும் தனது டிவீட்டில் தெரிவித்துள்ளார் விஷால். நடிகர் விஷாலின் இந்தப் புகார் திரையுலகில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!
இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி
மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!
ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு
கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)
ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்
{{comments.comment}}