சென்னை: நடிகை கீர்த்தி சுரேஷ் தனது 15 வயது வருட நண்பரை, அதாவது காதலரை தனது ட்விட்டர் பக்கத்தில் அறிமுகம் செய்துள்ளார். இதையடுத்து அவருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வரும் கீர்த்தி சுரேஷ், தயாரிப்பாளரும் நடிகருமான சுரேஷ் மற்றும் நடிகை மேனகாவின் இளைய மகள். இவர் தமிழில் முதல் முதலாக இது என்ன மாயம் என்ற திரைப்படம் மூலம் அறிமுகமானார். இதனை தொடர்ந்து பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து பைரவா, ரஜினிமுருகன், ரெமோ, சர்க்கார், மாமன்னன், சண்டைக்கோழி 2 உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்து ரசிகர்களின் மனதை வென்றவர்.

தமிழில் மட்டுமல்லாமல் ஹிந்தி மற்றும் தெலுங்கிலும் அவ்வப்போது நடித்து வரும் கீர்த்தி சுரேஷ் நடித்து வெளியான ரகு தாத்தா திரைப்படம் பல்வேறு தரப்பிலும் நல்ல வரவேற்பை பெற்றது. அதேபோல் நடிகை சாவித்திரி கதையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள நடிகையர் திலகம் படத்தில் நடித்து பல்வேறு தரப்பிலும் பாராட்டை பெற்றவர். இப்படத்தில் சிறந்த நடிப்பிற்காக கீர்த்தி சுரேஷுக்கு தேசிய விருதும் கிடைத்தது என்பது நினைவிருக்கலாம்.
இதற்கிடையே கீர்த்தி சுரேஷ் தனது பள்ளி காலத்திலிருந்து நீண்ட நாட்களாக காதலித்து வந்த ஆண்டனி தட்டில் என்பவரை விரைவில் திருமணம் செய்ய இருப்பதாக கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது. நடிகை கீர்த்தி சுரேஷ் 15 வருடமாக காதலித்து வந்த ஆண்டனியை அறிமுகப்படுத்தி, தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்தப் பதிவு தற்போது வைரலாகி வருவதுடன் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
நடிகைகள் திரிஷா, ஹன்சிகா மோத்வானி, ராசி கண்ணா உள்ளிட்ட பல்வேறு நடிகைகளும் ஹார்ட்டின் விட்டு வாழ்த்தியுள்ளனர். நடிகை கீர்த்தி சுரேஷ் 15 வருடமாக காதலித்து வரும் ஆண்டனி தட்டில், கேரளாவின் கொச்சியைச் சேர்ந்தவர். அங்கும், துபாயிலுமாக அவர் பல்வேறு தொழில்களை நடத்தி வருகிறார். இவர்களுக்கு வருகிற டிசம்பர் மாதம் திருமணம் நடைபெறவுள்ளதாகவும் தகவல்கள் பரவியுள்ளது என்பது நினைவிருக்கலாம்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
Assembly By Election: நாளை மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் 2026: அனைத்து ஏற்பாடுகளும் தயார்
சென்னை பட்டினப்பாக்கம் புதிய தலைமைச் செயலக வழக்கு: வழக்கறிஞர் தாக்கல் செய்த மனு வாபஸ்
தென்தமிழ் தலையங்கம்: Celluloid World to St Geroge Fort..கோட்டையைப் பிடிக்கத் துடிக்கும் கோடம்பாக்கம்
குலுக்கி சர்பத்: தூக்கிப் போட்டு குலுக்கி எடுத்து கிளாஸில் ஊற்றிக் குடிச்சா.. ஆஹா என்ன சுகம்!
தலைமை தேர்தல் ஆணையர் விவகாரம்: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
2026-ஆம் ஆண்டின் மருத்துவத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு: 3 விஞ்ஞானிகளுக்கு விருது!
Evening Snacks Time: டேஸ்ட்டியான சேமியா பால் பாயாசம் செய்து சாப்பிடலாமா?
சென்னையில் புறநகர் மின்சார ரயில் தடம் புரண்டு விபத்து: ரயில் சேவைகள் பாதிப்பு!
எனக்கு ஆசை.. உனக்கு ஆசை.. உன்னை நான் நேசிப்பதும்.. என்னை நீ நேசிப்பதும்!
{{comments.comment}}