ட்ரெய்லர் மட்டுமே பார்த்துவிட்டு.. இதுதான் என யூகிக்க வேண்டாம்.. விடாமுயற்சி நடிகை.. ஓபன் டாக்..!

Feb 05, 2025,10:19 AM IST

சென்னை: டிரெய்லர் மட்டுமே வைத்து என்னுடைய கதாபாத்திரம் இப்படித்தான் இருக்கும் என யூகிக்க வேண்டாம். என்னுடைய கதாபாத்திரத்திற்கு பல லேயர்கள் உண்டு. திரையரங்கில் பார்வையாளர்கள் என் கதாபாத்திரத்தை நிச்சயம் ரசிப்பார்கள் என விடாமுயற்சி  நடிகை ரெஜினா கூறியுள்ளார்.


இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடித்துள்ள திரைப்படம் தான் விடாமுயற்சி. நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் நடிகை திரிஷா அஜித் உடன் இணைந்து நடித்துள்ளார். அதேபோல் ரெஜினா காசண்ட்ரா நெகடிவ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர்களுடன் நடிகர் அர்ஜுன், ஆரவ்  உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அதிரடி ஆக்சன் நிறைந்த விறுவிறுப்பான  திரைக்கதையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படத்தை லைக்கா புரொடக்சன்ஸ் தயாரித்துள்ளது. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.




அஜித் குமார் நடிப்பில் கடைசியாக கடந்த 2023 ஆம் ஆண்டு துணிவு படம் வெளியாகி இரண்டு ஆண்டுகள் ஆகி உள்ள நிலையில், தற்போது விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி படத்தில்  அஜித்  நடித்து முடித்துள்ளார். இதில் விடாமுயற்சி திரைப்படம் பொங்கல் அன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் சில பணிகளில் தாமதம் ஏற்பட்டதால் ரிலீஸ் தேதி தள்ளிப்போனது. இதனால் அஜித்  ரசிகர்கள் மத்தியில் கடும் அதிருப்தி நிலவியது. இதனால் ரசிகர்களை மகிழ்விக்க இப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் சவதீகா என்ற பாடல் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. 


இந்த நிலையில் படம் வருகின்ற பிப்ரவரி 6ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் படத்தின் வெளியீட்டிற்காக ரசிகர்கள் மத்தியில் எக்கச்சக்க எதிர்பார்ப்பு வலுத்துள்ளது. இதற்கிடையே தமிழகத்தில் விடாமுயற்சி திரைப்படம் சுமார் 1000 திரையரங்குகளில் வெளியிட இருப்பதால் இப்படத்திற்கான ப்ரீ புக்கிங் கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.




இப்படத்தை தொடர்ந்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள குட் பேட் அக்லி திரைப்படம் வரும் ஏப்ரல் பத்தாம் தேதி வெளியாக தயாராக இருக்கிறது என்பது நினைவிருக்கலாம்.


இந்த நிலையில் இப்படத்தில் நடிகை ரெஜினா காசண்ட்ரா தன்னுடைய கதாபாத்திரம் பற்றி பேசியதாவது,  டிரெய்லர் மட்டுமே வைத்து என்னுடைய கதாபாத்திரம் இப்படித்தான் இருக்கும் என யூகிக்க வேண்டாம். என்னுடைய கதாபாத்திரத்திற்கு பல லேயர்கள் உண்டு. திரையரங்கில் பார்வையாளர்கள் என் கதாபாத்திரத்தை நிச்சயம் ரசிப்பார்கள்.




தன் அர்ப்பணிப்பிற்காக பெயர் பெற்றவர் ரெஜினா. இந்தப் படத்திற்காக, இன்னும் கடுமையாக உழைத்திருக்கிறார். இந்தப் படத்தில் வேறொரு கதாபாத்திரத்தில் நடிப்பதற்குதான் மகிழ் சார் என்னை அழைத்தார். ஆனால், ஒருவாரம் கழித்து இப்போது நான் நடித்திருக்கும் கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக அவரது அலுவலகத்தில் இருந்து அழைப்பு வந்தது.

 

அஜர்பைஜானில் மலை உச்சியில் படப்பிடிப்பு நடத்தியபோது சரியான நேரத்தில் மாலைக்குள் எல்லாம் நடக்க வேண்டும் என்பதில் நாங்கள் கவனமாக இருந்தோம்.  மகிழ் சார் மற்றும் ஒட்டுமொத்த குழுவும் சரியாக திட்டமிட்டு அதை முடித்தோம். 




படத்தில் மூன்று ஜார்ஜியன் ஸ்டண்ட்ஸ் மேனுடன் ஒரு ஆக்‌ஷன் சீக்வன்ஸ் உண்டு. அதற்கான இன்புட்ஸை படப்பிடிப்புத் தளத்தில் ஸ்டண்ட் மாஸ்டரிடம் கேட்டுவிட்டு ஒரே டேக்கில் அந்த காட்சியை அர்ஜூன் சார் செய்து முடித்தார். அந்த ஸ்டண்ட் மேன்ஸ் அவரது ஆக்‌ஷன் மற்றும் வயதை கேட்டு ஆச்சரியத்தில் வாயடைத்துப் போய்விட்டனர். 


நடிகர் அஜித்  பார்ப்பதற்கு அமைதியாக இருந்தாலும் செட்டில் பயங்கர எனர்ஜியுடன் இருந்தார். முதல் நாளில் இருந்து படப்பிடிப்பின் கடைசி நாள் வரை நட்புடன் எங்களுடன் பழகினார் என கூறியுள்ளார்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

India win Women's world cup: அபார பீல்டிங்.. அட்டகாச பவுலிங்.. இந்திய மகளிருக்கு முதல் உலகக் கோப்பை!

news

SIR பணிகளை நிறுத்த வேண்டும்.. இல்லாவிட்டால் வழக்குத் தொடர்வோம்.. அனைத்துக் கட்சிக் கூட்டம் தீர்மானம்

news

தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலை சீர்குலைக்கும் முயற்சியே SIR.. விசிக தலைவர் திருமாவளவன் பேச்சு

news

அடிப்படை ஜனநாயக உரிமையைக் கேள்விக்கு உள்ளாக்கும் சிறப்புத் தீவிரத் திருத்தம்.. தவெக

news

SIR-க்கு எதிராக ஒருங்கிணைந்து குரல் கொடுக்க வேண்டியது நமது கடமை.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

தமிழகத்தில் இன்று முதல் நவம்பர் 7ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம்!

news

ஸ்ரீகாகுளம் கோவில் நிர்வாகம் அனுமதி வாங்கவில்லை...விசாரணைக்கு ஆந்திர முதல்வர் உத்தரவு

news

அரசின் தோல்விக்காக.. ஆசிரியர்கள் மற்றும் கல்வி அதிகாரிகளை கையேந்த வைப்பது கண்டிக்கத்தக்கது: அன்புமணி

news

மத்திய அரசு பள்ளிகளில் இந்தியை திணிக்கிறது...சித்தராமைய்யா காட்டம்

அதிகம் பார்க்கும் செய்திகள்