சென்னை: இயக்குநர் ஆர்.கே. செல்வமணியின் பிறந்தநாளை கேக் வெட்டி குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் கொண்டாடியுள்ளார் ஆந்திர மாநில அமைச்சரும், ஆர். கே. செல்வமணியின் மனைவியுமான நடிகை ரோஜா.
இயக்குநர் ஆர்.கே.செல்வமணி, மறைந்த இயக்குநர் மணிவண்ணனிடம் உதவியாளராக இருந்து பின்னர் இயக்குநரானவர். இவர் இயக்கிய முதல் படமான புலன் விசாரணை மிகப் பெரிய ஹிட்டடித்தது. இது ஆட்டோ சங்கர் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக வைத்து எழுதப்பட்ட கதையாகும். முதல் படமே ஹிட்டானதால் அனைவராலும் பார்க்கப்படும் இயக்குநராக மாறினார் ஆர்.கே. செல்வமணி. தொடர்ந்து கேப்டன் பிரபாகரன் மிகப் பெரிய பிளாக்பஸ்டர் படமாக மாறியது. அதன் பிறகு செம்பருத்தி என்ற வித்தியாசமான காதல் கதையைப் படமாக்கினார் ஆர்.கே.செல்வமணி. இதில்தான் தனது காதல் மனைவி ரோஜாவை நடிகையாக அறிமுகம் செய்தார்.
தொடர்ந்து அரசியல், காதல் என்று மாறி மாறி டிராவல் செய்து வந்த அவர் கடைசியாக 2015ம் ஆண்டு புலன் விசாரணை 2 படத்தை இயக்கினார். இடையில் ஒரு படத்தில் நடிக்கவும் செய்தார். இன்று ஆர்.கே. செல்வமணிக்கு 57வது பிறந்த நாள் ஆகும். இதையொட்டி அவரது மனைவி ரோஜா தடபுடலான பிறந்த நாள் பார்ட்டிக்கு ஏற்பாடு செய்திருந்தார். பிரமாண்ட கேக் வெட்டி குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் கொண்டாடினார்.
ஆர்.கே.செல்வமணி - ரோஜா தம்பதிக்கு 2 பிள்ளைகள் உள்ளனர். ரோஜா, ஆந்திர மாநில அரசியலில் முக்கியமான ஒரு பிரமுகராக வலம் வருகிறார். ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏவான அவர் அமை்சசராகவும் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!
கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!
இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?
உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?
விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி
கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்
Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்
ருத்ர தாண்டவம் (சிறுகதை)
உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!
{{comments.comment}}