திருவண்ணாமலை: 3வது முறையாக எம்எல்ஏ வாக வெற்றி பெற வேண்டும் என்று நான் ஐய்யாவையும் அம்மாவையும் வேண்டிக்கிறேன் என்று திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் சாமி கும்பிட்ட பின்னர் தெரிவித்தார் நடிகையும் ஆந்திர மாநில அமைச்சருமான ரோஜா.
ஆந்திர மாநிலம் நகரி சட்டசபைத் தொகுதியில் நடிகையும், அமைச்சருமான ரோஜா 3 வது முறையாக போட்டியிடுகிறார். இங்கு கடந்த 13ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இந்நிலையில் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்று பல்வேறு கோவில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்து வரும் ரோஜா இன்று திருவண்ணாமலையில் சாமி தரிசனம் செய்தார்.

கோவில் நிர்வாகம் சார்பில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டு மாலை அணிவிக்கப்பட்டது. சாமி தரிசனத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார் ரோஜா. அப்போது அவர் பேசுகையில், அண்ணாமலை ஈஸ்வரரை தரிசனம் செய்துவிட்டு, அம்மா தரிசனம் செய்துவிட்டு, அவர்களின் ஆசிர்வாதத்தோட ஜனங்களுக்கு சேவை செய்வதற்கு நான் முன்னுக்கு போயிட்டே இருக்கேன். மறுபடியும் இந்த வருஷம் நேற்று கிரிவலம் சுத்திட்டு வந்தோம். இன்று அண்ணாமலையார், அம்மாவின் அபிஷேகம் பார்த்தது ரொம்ப சந்தோஷமாக இருக்கு.
அவங்களுடைய ஆசிர்வாதம் எனக்கு எப்பவும் இருக்கனும். என் மூலம் ஜனங்களுக்கு நல்லது செய்யனும்னு நினைக்கிறேன். எங்களுடைய லீடர் ஜெகன்மோகன் ரெட்டி. ஜனங்களை நேசிக்கும் லீடர். சோ அவர் 2வது முறை சிஎம் ஆகனும்னு மனப்பூர்வமா வேண்டிக்கிறேன். நான் 3வது வாட்டி எம்எல்ஏவா வெற்றி பெறனும்னு ஐய்யாவையும் அம்மாவையும் வேண்டிக்கிறேன் என்றார் ரோஜா.
தெய்வமாய்த் தெரியும் தேவதை போல் ஒரு ஆருயிர் நீ எனக்கு!
மாமன் காரன் பெத்த புள்ளே மனசைத் தொறந்து பேசும் புள்ளே!
சென்னையில் இன்று முதல்வர் விஜய்யை சந்திக்கிறார் ராகுல் காந்தி
மன்னித்து அருளக் கூடியவர் அன்னூர் மன்னீஸ்வரர்!
நீங்கா நினைவுகள்
பஞ்சர் தாத்தா.. இளநீர் தாத்தா.. கூழ் பாட்டி மற்றும் தேன் வாழைப்பழம்!
அரட்டை அரங்கம் விசு.. மறக்க முடியாத மீனாட்சிசுந்தரம் ராமஸ்வாமி விஸ்வநாதன்!
புராணம் அறிவோம்.. நவராத்திரி ஏன் 9 நாட்கள் கொண்டாடப்படுகிறது?
Thentamil Editorial: மனதை நேசிப்போம், நிம்மதியாய் வாழ்வோம்.. உலக மனநல நாள் பிரகடனம்
{{comments.comment}}