வணங்கான் படத்தில் நடித்த பிறகுதான்.. என் மீது வெளிச்சமே விழுந்தது.. நாயகி ரோஷினி ஓபன் டாக்!

Jan 09, 2025,07:19 PM IST

சென்னை: இதுவரை மூன்று மொழிகளிலும் பல படங்களில் நடித்திருந்தாலும் வணங்கான் படம் எனக்கு ரொம்பவே ஸ்பெஷல். இந்த படத்தில் நடிப்பதற்கு முன்பு வரை என்னை அவ்வளவாக யாருக்கும் தெரியாது. இந்த படத்தில் நடிக்க ஆரம்பித்த பின்பு தான் என்னைப் பற்றி ஓரளவுக்கு வெளியே தெரிய ஆரம்பித்தது என வணங்கான் பட நாயகி ரோஷினி பிரகாஷ் வெளிப்படையாக பேசியுள்ளார்.


இயக்குனர் பாலா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் தான் வணங்கான். இப்படம் சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் ப்ரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ளது. இதில் நடிகர் அருண் விஜய் நாயகனாகவும், ரோஷினி பிரகாஷ் நாயகியாகவும் நடித்துள்ளனர். இப்படம்  பொங்கல் பண்டிகை முன்னிட்டு வரும் ஜனவரி பத்தாம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. இதற்காக ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்து வருகின்றனர்.




பொதுவாகவே தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களின் திரைப்படங்களில் நடித்து வரும் பல்வேறு கதாநாயகிகள் உச்சம் பெற்று வருகின்றனர். அந்த வரிசையில் தற்போது இயக்குனர் பாலா இயக்கத்தில் நடித்துள்ள ரோஷினி பிரகாஷ் புகழின் உச்சத்திற்கு சென்றுள்ளார். அதாவது இப்படத்தில்  கமிட்டான நாளிலிருந்து  நடிகை ரோஷினி பிரகாஷ்  ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். 


இவர் தமிழ் தெலுங்கு கன்னடம் என மும்மொழிகளில் நடித்து வருகிறார். குறிப்பாக கடந்த மாதத்தில் கன்னட மொழியில் வெளியான மார்ஃபி திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. அதேபோல் தமிழில் ஜடா திரைப்படத்திலும், கன்னடத்தில் மறைத்த நடிகர் புனித் ராஜ்குமாரின் கடைசியாக நடித்த லக்கி மேன் திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.


இந்த நிலையில் வணங்கான் திரைப்படம் திரைக்கு வர சில நாட்களே உள்ள நிலையில் இப்படத்தின் அனுபவம் குறித்து நடிகை ரோஷினி பிரகாஷ் மனம் திறந்து பேசி உள்ளார். அவர்  கூறியதாவது: 




வணங்கான் படத்திற்காக இன்ஸ்டாகிராமில் எனது ப்ரொபைல் பார்த்து எனக்கு ஆடிசனில் கலந்து கொள்ள அழைப்பு வந்தது. அங்கே போனதும் சில காட்சிகளை கூறி எனது கதாபாத்திரம் பற்றி சொல்லி நடித்துக் காட்டச் சொன்னார்கள். அங்கேயே உடனே ஓகேயும் சொல்லிவிட்டார்கள். 


பொதுவாகவே பாலா சார் படப்பிடிப்பில் கடுமையாக நடந்து கொள்வார் என்பது போன்று சில செய்திகள் கேள்விப்பட்டிருந்தேன். ஆனால் படப்பிடிப்பிற்கு சென்றபோது தான் அது எதுவுமே உண்மை அல்ல என்பதைப் புரிந்து கொள்ள முடிந்தது. அந்த அளவிற்கு தனக்கு என்ன தேவையோ அதை அழகாக நம்மிடம் விளக்கி அவருக்கு வேண்டிய நடிப்பை பெற்றுக் கொள்வார்.




பாலா சாரின் படங்களில் நடிக்கும் அனைவருக்குமே மிக முக்கியத்துவம் கொடுக்கப்படும். நான் இந்த படத்தில் நடித்துள்ள கதாபாத்திரம் எனது திரையுலகப் பயணத்தில் இதுவரை நான் நடித்ததிலேயே கடினமான ஒன்று. இந்த கதாபாத்திரத்தில் நடித்த பிறகு இனி அடுத்து எந்த படம் வந்தாலும் எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் நடிக்கக்கூடிய துணிச்சலை இந்த படம் கொடுத்துள்ளது. 


அதேபோல காட்சிகளில் சிறப்பாக நடித்தால் தட்டிக்கொடுத்து பாராட்டவும் தயங்க மாட்டார். முதல் கட்ட படப்பிடிப்பை திட்டமிட்டதற்கு மூன்று நாட்கள் முன்கூட்டியே முடித்தபோது அந்த அளவிற்கு சந்தோஷப்பட்டார் இயக்குநர் பாலா. அது மட்டுமல்ல அவரிடம் நாம் துணிந்து நமக்கான சந்தேகங்களைக் கேட்டு அதன்படி நடிக்க முடியும்.  அதேசமயம் அவர் நம்மிடம் இருந்து நடிப்பை வாங்கும் விதத்தைப் பார்க்கும் போது தான் நமக்குள்ளேயே இவ்வளவு நடிப்புத் திறன் இருக்கிறதா என்பது தெரிய வரும். அந்த வகையில் அவர் எனக்கு ஒரு குருநாதர்.




நாயகன் அருண்விஜய்யும் நானும்  ஒரு காட்சியில் இணைந்து நடிக்கும் போது அவரிடம் நான் நடிப்பதற்கான ஒரு ஸ்பேஸ் வேண்டும் எனக் கேட்டால் அதை அழகாக உள்வாங்கிக் கொண்டு உதவி செய்வார். இயக்குநர் பாலா என்ன சொல்கிறாரோ அதை அழகாக உள்வாங்கிக் கொண்டு எவ்வளவு கடினமான காட்சி ஆனாலும் அதை உடனே செய்து காட்டுவார் அருண் விஜய்.


இயக்குநர்கள் சமுத்திரக்கனி, மிஸ்கின், ஏ எல் விஜய் என மிகப் பெரிய ஜாம்பவான்கள் இயக்குநர்களுடன் சேர்ந்து பணியாற்றியதால் வணங்கான் படத்தின் படப்பிடிப்பு எனக்கு ஒரு மாஸ்டர் கிளாஸ் போல தான் இருந்தது. இவர்களுடன் இணைந்து நடிக்கும்போது தங்களை ஒரு பெரிய இயக்குநர்களாகவோ நடிகர்களாகவோ அவர்கள் ஒருபோதும் நினைத்துக் கொள்வதில்லை. புதியவர் தானே என யாரையும் நினைக்காமல் அவர்களுக்கு வேண்டியதையும் கற்றுக் கொடுக்கிறார்கள். இப்படி நான்கு இயக்குநர்களுடன் சேர்ந்து ஒரே படத்தில் பணியாற்றுவது என்பது ரொம்பவே அரிதாக கிடைக்கக்கூடிய வாய்ப்பு. அது எனக்கு கிடைத்திருக்கிறது.


அதேபோல நடிகை வரலட்சுமி சரத்குமாரின் தாயார் சாயாதேவி அம்மா இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அவருடன் காட்சிகளில் நடித்ததை விட செட்டில் அவருடன் இருந்த சமயத்தில் அவர் மீது எனக்கு நெருங்கிய பிணைப்பு உருவானது.  




கன்னியாகுமரி போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்ற போது அவருக்கு படப்பிடிப்பு இல்லை என சில நேரங்களில் கிளம்பி ஊருக்கு சென்று விட்டால் அவர் திரும்பி வரும் வரை ஏதோ மிஸ் பண்ணியது போன்று இருக்கும். அவருடன் அமர்ந்து பேசும்போது எனக்கு என் வீட்டாருடன் இருப்பது போன்ற ஒரு உணர்வு கிடைத்தது.


ஒரு படப்பிடிப்பு தளத்தில் எப்படி ஒரு கட்டுப்பாடாக, ஒழுக்கமாக நடந்து கொள்ள முடியும் என்பது பாலா சாரின் படப்பிடிப்பில் அவ்வளவு தெளிவாக தெரிந்தது.  இதுவரை மூன்று மொழிகளிலும் பல படங்களில் நடித்திருந்தாலும் ‘வணங்கான்’ படம் எனக்கு ரொம்பவே ஸ்பெஷல். இந்த படத்தில் நடித்ததன் மூலம் சினிமாவில் அடுத்து நான் பயணிக்க வேண்டிய பல விஷயங்களை இதில் கற்றுக் கொள்ள முடிந்தது.




வெளிப்படையாகவே சொன்னால் இந்த படத்தில் நடிப்பதற்கு முன்பு வரை என்னை அவ்வளவாக யாருக்கும் தெரியாது. இந்த படத்தில் நடிக்க ஆரம்பித்த பின்பு தான் என்னைப் பற்றி ஓரளவுக்கு வெளியே தெரிய ஆரம்பித்தது. அந்த வகையில் இது ஒரு அதிர்ஷ்ட வாய்ப்பு என்று தான் சொல்வேன் என கூறியுள்ளார்.


அனைவரும் எதிர்பார்க்கும் வணங்கான் படம் பொங்கலையொட்டி திரைக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

ஆபரேஷன் சிந்து தொடர்கிறது.. ஈரானிலிருந்து இதுவரை 517 இந்தியர்கள் தாயகம் திரும்பினர்

news

93 ஆண்டுகளில் இல்லாத வரலாறு.. சதம் போடுவதில் அசகாய சாதனையைப் படைத்த.. ஜெய்ஸ்வால்!

news

போர்களும், மோதல்களும் சூழ்ந்த உலகம்.. யோகா அமைதியைக் கொண்டு வரும்.. பிரதமர் மோடி நம்பிக்கை

news

பாதுகாப்பான Iron Dome தகர்ந்ததா.. ஈரானின் அதிரடியால் இஸ்ரேல் மக்கள் அதிர்ச்சி + பதட்டம்!

news

புதிய பொலிவுடன் வள்ளுவர் கோட்டம்: நாளை திறந்து வைக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!

news

முதல்வர் மருந்தகத்தில் மாவு விற்பனை: முன்னாள் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் எக்ஸ் தள பதிவு!

news

கருவறை முதல் கல்லறை வரை... அலட்சியமும் ஊழலும் மலிந்து போன திமுக அரசு: தவெக

news

ஸ்வஸ்திக் சின்னம்.. அதிர்ஷ்டம், மங்கலம் மற்றும் செழிப்பின் அடையாளம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்