உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு.. ஷாலினி பகிர்ந்த க்யூட் லவ் போட்டோ

Apr 25, 2023,02:43 PM IST

சென்னை : நடிகையும், நடிகர் அஜித்தின் மனைவியுமான ஷாலினி, தங்களின் 23 வது திருமண நாளை கொண்டாடும் விதமாக தனது கணவர் அஜித்தை கட்டி அணைத்தபடி இருக்கும் க்யூட்டான போட்டோ ஒன்றை சோஷியல் மீடியாவில் பகிர்ந்துள்ளார். இதற்கு தற்போது வரை வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

கோலிவுட்டின் மிக பிரபலமான, அழகான காதல் ஜோடிகளில் அஜித் - ஷாலினியும் ஒருவர். டைரக்டர் சரண் இயக்கிய அமர்க்களம் படத்தில் இணைந்து நடித்த போது இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டது. அமர்க்களம் படம் ரிலீசான சமயத்திலேயே இருவரும் காதலிப்பதாக கிசுகிசுக்கள் பரவியது. ஆனால் அதற்கு இருவரின் தரப்பிலும் எந்த மறுப்போ, பதிலோ தெரிவிக்கவில்லை. கடைசியாக 2000 ம் ஆண்டு, இருவரின் குடும்பத்தினரும் சந்தித்து பேசி முடிவு செய்த பிறகு, திருமணத்தை அறிவித்தனர்.



2000 ம் ஆண்டு ஏப்ரல் 24 ம் தேதி அஜித் - ஷாலினி திருமணம் நடைபெற்றது. தமிழ், மலையாள சினிமாக்களில் பல படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்த ஷாலினி, திருமணத்திற்கு பிறகு சினிமாவில் இருந்து விலகி, குடும்பத்தை கவனித்து கொள்வதில் அக்கறை செலுத்தினார். இந்த அழகான காதல் தம்பதிக்கு அனோஷ்கா, ஆத்விக் என இரண்டு குழந்தைகள் உள்ளனர். 

சமீப ஆண்டுகளாக சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வரும் ஷாலினி, தனது கணவர் அஜித் மற்றும் குழந்தைகளுடன் இருக்கும் போட்டோக்களை அடிக்கடி சோஷியல் மீடியாவில் வெளியிட்டு லைக்குகளை அள்ளி வருகிறார். இந்நிலையில் நேற்கு தங்களின் 23 வது திருமண நாளை கொண்டாடும் விதமாக கணவர் அஜித்தை இறுக்கமாக கட்டி பிடித்தபடி இருக்கும் போட்டோ ஒன்றை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து, 23 வருடங்கள் என ஹார்ட் எமோஜிக்களுடன் பதிவிட்டுள்ளார். 

இதனையடுத்து பிரபலங்கள், ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் சோஷியல் மீடியாவில் அஜித் - ஷாலிக்கு திருமண நாள் வாழ்த்துக்கள் பதிவிட துவங்கினர். ட்விட்டர், இன்ஸ்டாகிராம் என அனைத்திலும் ஷாலினி பகிர்ந்த போர்ட்டோ தீயாய் பரவியதால், ட்விட்டரில் #ShaliniAjithkumar என்ற ஹோஷ்டேக் நேற்று முதல் தொடர்ந்து டிரெண்டிங்கில் இருந்து வருகிறது.

சமீபத்திய செய்திகள்

news

ஜெம் கிரானைட்ஸ் வீரமணி வழக்கில் லஞ்சம் வாங்கிய அதிகாரிகள் யார்? விசாரிக்க சிறப்பு குழு அமைப்பு!

news

"நிர்வாக அறிவு இருக்கிறதா?" – தவெக அரசை கடுமையாக விமர்சித்து மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை!

news

குற்றவாளிகள் ஒருவரையும் விடக்கூடாது: ஜெம் கிரானைட்ஸ் வீரமணி விவகாரத்தில் முதல்வர் அதிரடி உத்தரவு

news

ஜெம் கிரானைட் வீரமணி விவகாரம்: தவெக-திமுக இடையே முற்றும் மோதல்

news

ஆளுக்கு 8 ஓட்டு.. 9 மாத மழலை எடுத்துக் கொடுத்த சீட்டு.. கலகலப்பாக முடிந்த பள்ளித் தலைவர் தேர்தல்!

news

நடிகை அம்பிகா மீது சகோதரி ராதா பரபரப்பு புகார்: ரூ.46 கோடி மோசடி செய்ததாக போலீசில் புகார்

news

வங்கக்கடலில் தீவிரமடையும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி: இந்திய வானிலை மையம் எச்சரிக்கை!

news

ஏகாந்தம்.. அழகிய முழு நிலவொளியில் ஆனந்த ராகம் பாடி!

news

Short Story: காணாமல் போன கண்ணன்

அதிகம் பார்க்கும் செய்திகள்