கம்பை கையில் எடுத்து.. சுத்தி சுத்தி அடிக்கும் ஸ்ருதி ஹாசன்.. கூலி படப்பிடிப்பு தளத்திலும்..அசத்தல்

Aug 31, 2024,03:10 PM IST

சென்னை: கூலி படத்தில் நடிகை ஸ்ருதிஹாசன் ப்ரீத்தி என்ற கதாபாத்திரத்தில் நடிப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு நேற்று வெளியான நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு தளத்திலும் ஸ்ருதிஹாசன் தற்காப்பு கலை பயிற்சியில் ஈடுபட்டு வரும் வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

ஞானவேல் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வேட்டையன் படத்தில் நடித்த முடித்துள்ளார். இப்படம் வரும் அக்டோபர் 10ஆம் தேதி வெளியாக தயாராக உள்ளது. இதனைத் தொடர்ந்து சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தனது அடுத்த படமான கூலி திரைப்படத்தில் கமிட்டாகி உள்ளார் ரஜினிகாந்த். இப்படத்தை பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். இப்படத்திற்கு கிரீஸ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்ய அனிருத் இசையமைக்கிறார். 

இந்த நிலையில் கூலி படத்தின் கதாபாத்திரங்கள் குறித்த அப்டேட்கள் இந்த வாரம் முழுவதும் அடுத்தடுத்து அடுத்தடுத்து வெளியாகி வருகிறது. அதன்படி மலையாள நடிகர் சோபீன், தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா நடிக்க இருப்பதாக அறிவிப்புகள் வெளியானது. அதனை தொடர்ந்து உலக நாயகன் கமல்ஹாசனின் மகளான ஸ்ருதிஹாசன்  கூலி படத்தில் பிரீத்தி என்ற கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக படக்குழு நேற்று அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியிட்டது.



இந்த நிலையில், நடிகை ஸ்ருதிஹாசன் உடலில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக சமீப காலமாக கம்பு சுத்தும் தற்காப்பு கலைகளை கற்று வருகிறார். தற்போது கூலி படத்தின் படப்பிடிப்பு தளத்தில் இருந்தாலும் கூட தற்காப்பு பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார். ஸ்ருதி ஹாசன் தொடர்ந்து தற்காப்பு பயிற்சியில் ஈடுபட்டு வரும் வீடியோ தற்போது  இணையத்தில்  வைரலாகி வருவதுடன் தற்காப்பு கலையை கையில் எடுக்கும் சுருதிஹாசன் கூலி படத்தில் ஆக்சன் ரோலில் நடிக்கிறாரா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். 

அதற்கு நடிகர் ஸ்ருதிஹாசன் எனது தந்தையும் நடிகருமான கமலஹாசன் தேவர்மகன் படத்தில் நிகழ்த்திய அதே தற்காப்பு கலையை தான் நான் பயிற்சி செய்து வருகிறேன் எனவும் தெரிவித்துள்ளார். படப்பிடிப்பு தளத்திலும் தன்னுடைய உடற்பயிற்சி முறையில் எந்த சமரசமும் செய்து கொள்ளாமல் அவரின் முயற்சியும் அசைக்க முடியாத நம்பிக்கையையும் பிரதிபலிக்கிறது.

தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை ஸ்ருதிஹாசன் பிரபாஸ் உடன் இணைந்து சலார் 2 படத்திலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

முப்படை தளபதிகளுடன் பிரதமர் மோடி அவசர ஆலோசனைக் கூட்டம்

news

பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில்.. காஷ்மீரில் 22 பேர் உயிரிழப்பு.. பீதியில் உறைந்த மக்கள்‌‌..!

news

ரஜினியின் ஜெயிலர் 2 படத்தில் இவரா?...செம சம்பவம் காத்திருக்கு போலவே

news

இந்திய-பாகிஸ்தான் எல்லையில் படப்பிடிப்பு நடத்த வேண்டாம்...aicwa அறிவுறுத்தல்

news

தமிழ்நாட்டில் அடுத்த 6 நாட்களுக்கு மிதமான மழை.. 13, 14 ஆம் தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு..!

news

ராணுவத்திற்கு உதவ தயார்... சண்டிகரில் குவிந்த வரும் இளைஞர்கள்!

news

அறத்தின் அடிப்படையில் தான் பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல் நடத்துகிறது: அண்ணாமலை!

news

விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வா? பிசிசிஐ சொல்வது என்ன?

news

சித்திரை திருவிழாவின் முத்திரை நிகழ்வு... அழகர் கோவிலில் இருந்து.. இன்று கள்ளழகர் புறப்பாடு..!

அதிகம் பார்க்கும் செய்திகள்