- மீனாட்சி
சென்னை: சிலருக்குத்தான் புன்னகை வெகு இயல்பாக, அழகாக, அற்புதமாக இருக்கும்.. கே.ஆர். விஜயா அந்தக் காலத்தில் அப்படிப்பட்ட மாயச் சிரிப்பழகியாக வலம் வந்தார். புன்னகை அரசி என்றே அவருக்குப் பெயர். அவருக்குப் பிறகு அந்தப் பெருமை கிடைத்தது சினேகாவுக்கு மட்டுமே.
புன்னகை இளவரசியாக அவரை ரசிகர்கள் வரித்துக் கொண்டனர். ஆனால் புன்னகை பேரரசியாக தனது சிரிப்பால் ரசிகர்களை கவர்ந்து முன்னணி நாயகியாக வலம் வந்தவர் நடிகை சினேகா. இவரது அழகான புகைப்படம் ஒன்றை தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் சினேகா. அடடா நம்ம சினேகாவா என்று ரசிகர்கள் வியந்தும் மகிழ்ந்தும் அந்தப் படத்தைப் பார்த்து கமெண்ட் போட்டுக் கொண்டுள்ளனர்.
மீண்டும் சின்ன சின்னதாக நடித்துக் கொண்டிருக்கிறார் சினேகா. அவரது முந்தையப் படங்களை யாராலும் மறக்க முடியாது.. சுகாசினி என்ற இயற்பெயர் கொண்ட சினேகா, 2001ம் ஆண்டு என்னவளே படத்தின் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானவர். உன்னை நினைத்து, வசீகரா,வசூல்ராஜா எம்பிபிஎஸ், ஆட்டோகிராப், புதுப்பேட்டை, ஏப்ரல் மாதத்தில், காதல் சுகமானது, புன்னகை தேசம், போன்ற எண்ணற்ற பாடங்களில் நடித்தவர்.
நடிகர் பிரசன்னாவைக் காதலித்து மணம் புரிந்து பின்னர் சினிமாவிலிருந்து விலகியிருந்தார்.அடுத்தடுத்து இரண்டு அழகான குழந்தைகளும் பிறந்தன. திருமணம் ஆகி குழந்தைகள் பெற்ற பின்பும் கூட ரசிகர்கள் மனதில் நிலையான இடத்தை பிடித்துள்ளார் சினேகா. அதற்கு காரணம் மாறாத அவரது புன்னகையும், அந்த பாந்தமான அழகும்தான்.
அவ்வப்போது போட்டோ சூட் செய்து சோசியல் மீடியாவில் அவரது புகைப்படங்களை வெளியிடுவதை சினேகா தொடர்கிறார்.. சினிமாவுடனான தொடர்பையும் பராமரிக்கிறார்.. வழக்கம் போல விளம்பரங்களில் தொடர்ந்து நடிக்கிறார். நடிப்பு, விளம்பரம், குடும்பம், குழந்தைகள் என்று பிசியாக இருந்தாலும், சோசியல் மீடியாவிலும் ஆக்டிவாக இருக்கிறார் சினேகா.
சினேகாவின் ஒவ்வொரு புகைப்படத்திற்கும் லட்சக்கணக்கில் லைக்குகளை அள்ளி குவித்து வருகின்றனர். தற்பொழுதுள்ள இளம் நடிகைகளுக்கே டப் கொடுக்கும் அளவிற்கு அழகில் தேவதையாக வலம் வருவதுடன், ஒரு காலகட்டத்தில் ரசிகர்களின் கனவுக்கன்னியாக திகழ்ந்தவர். சூர்யா - ஜோதிகா, அஜித் - ஷாலினிக்கு பிறகு தமிழ் சினிமாவில் அதிகமான ரசிகர்களால் ரசிக்கப்படும் காதல் தம்பதி என்றால் அது சினேகா - பிரசன்னா ஜோடி தான்.
தொடர்ந்து புன்னகை பூத்தபடி ரசிகர்களை மகிழ்வித்திருங்கள் எங்கள் புன்னகை பேரரசியே.. நீங்களும் மகிழ்ந்திருங்கள்!
11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!
இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி
மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!
ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு
கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)
ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்
{{comments.comment}}