லக்னோ: உத்தரப் பிரதேச காவல்துறை ஆளெடுப்பு தேர்வுக்கான, நுழைவுச் சீட்டில் (ஹால் டிக்கெட்) கவர்ச்சி நடிகை சன்னி லியோன் படம் இடம் பெற்றது அந்த மாநிலத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
அட்மிட் கார்டில் சன்னி லியோன் படம் இடம் பெற்றது தொடர்பாக விரிவான விசாரணைக்கு யோகி ஆதித்யநாத் அரசு உத்தரவிட்டுள்ளது.
உத்தரப் பிரதேச காவல்துறையில், காவலர் பணிக்கான ஆளெடுப்புத் தேர்வு நடைபெற்றது. இதற்கான ஹால் டிக்கெட் ஒன்றுதான் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகை சன்னி லியோன் புகைப்படத்துடன் அந்த ஹால் டிக்கெட் உள்ளது.
சன்னி லியோன் என்ற பெயரிலேயே அந்த ஹால்டிக்கெட் உள்ளது. சமூக வலைதங்களில் இது பெரும் பரபரப்பையும், விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேச காவல் ஆளெடுப்பு மற்றும் பதவி உயர்வு வாரியத்தின் இணையதளம் மூலம் இந்த ஹால் டிக்கெட் பெறப்பட்டுள்ளது. நேற்று இந்த வாரியத்தின் சார்பில் 75 மாவட்டங்களில் 2385 மையங்களில் காவலர் ஆளெடுப்புத் தேர்வு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
கன்னாஜ் மாவட்டத்தின் தீர்வா தாலுகாவில் உள்ள திருமதி சோனிஸ்ரீ நினைவு மகளிர் கல்லூரியில் தேர்வு எழுதுவதற்கான ஹால் டிக்கெட்தான் சன்னி லியோன் பெயரில் இருந்தது. கன்னாஜ் சைபர் கிரைம் போலீஸார் தற்போது இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். அரசு இணையதளத்திலிருந்து இப்படி ஒரு குழப்பம் நடந்திருப்பது உ.பி. அரசுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து விரிவான விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
நேபாளத்தில் வெடித்த பெரும் கலவரம்.. பின்வாங்கிய பிரதமர்.. நீங்கிய சமூக வலைதள தடை!
புஷ்பா 3 நிச்சயம் உண்டு.. துபாயில் வைத்து ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ் சொன்ன சுகுமார்!
குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்.. தொடங்கியது வாக்குப் பதிவு.. முதல் ஓட்டைப் போட்ட பிரதமர் மோடி
கடலும் கடலின் ஒரு துளியும்!
இளையராஜா போட்ட வழக்கு.. குட் பேட் அக்லி-யை ஓடிடி தளத்திலிருந்து நீக்குமா நெட்பிளிக்ஸ்?
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் செப்டம்பர் 09, 2025... நல்ல காலம் பிறக்குது
ஜிஎஸ்டி வரிக் குறைப்பால்.. அதிரடியாக விலையைக் குறைத்த ஆடி கார் நிறுவனம்.. 10% குறைந்தது
11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!
{{comments.comment}}