சென்னை: நடிகர் மன்சூர் அலிகானை மன்னித்து விட்டதாக நடிகை திரிஷா கூறியுள்ளார்.
லியோ படம் தொடர்பாக நடிகர் மன்சூர் அலிகான் பேட்டி அளிக்கப் போக அவர் கூறிய வார்த்தைகள் சலசலப்பைக் கிளப்பி விட்டன. இதுகுறித்து நடிகை திரிஷா வேதனை தெரிவித்து டிவீட் போட்டிருந்தார். அதைத் தொடர்ந்து கண்டனங்கள் குவிந்து விட்டன. கூடவே வழக்கும் வந்து சேர்ந்தது.
இந்த நிலையில் நேற்று ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு விசாரணைக்குச் சென்ற நடிகர் மன்சூர் அலிகான் தான் உள்நோக்கத்துடன் பேசவில்லை என்று விளக்கியிருந்தார்.
இந்த நிலையில் இன்று திரிஷாவே என்னை மன்னித்து விடு.. உன் திருமணத்தின்போது மாங்கல்யம் வைத்த தேங்காய்த் தட்டு வலம் வரும்போது அதைத் தொட்டு உன்னை ஆசிர்வதிக்கும் பாக்கியம் எனக்குக் கிடைக்கட்டும் என்று நெகிழ்ச்சியாக கூறியிருந்தார்.
இந்த நிலையில் தற்போது திரிஷாவும், மன்சூர் அலிகானை மன்னித்து விட்டதாக டிவீட் போட்டுள்ளார். அதில், தவறு செய்வது மனித இயல்பு.. மன்னிப்பது தெய்வ குணம் என்று கூறியுள்ளார் திரிஷா.
இனியாவது மன்சூர் அலிகான் பொது வெளியில் பேசும்போது தனது வார்த்தைகளில் கவனமாக இருப்பார் என்று நம்புவோம்.. அவர் மட்டுமல்ல.. எல்லோருமே கவனமாக பேசுவது நல்லது!
இத்தோடு எல்லாம் முடிந்தது.. எல்லோரும் அவரவர் வேலையைப் பார்ப்பார்கள் என்று நம்பலாம்.!
எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!
கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!
இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?
உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?
விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி
கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்
Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்
ருத்ர தாண்டவம் (சிறுகதை)
உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!
{{comments.comment}}