ADMK loses another MLA: அதிமுக எம்எல்ஏ. பதவியை ராஜினாமா செய்தார் சி.விஜயபாஸ்கர்

Jun 16, 2026,04:47 PM IST

சென்னை : அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தனது விராலிமலை தொகுதி எம்எல்ஏ.,பதவியை ராஜினாமா செய்துள்ளார். விரைவில் அவர் அதிமுக.,வில் இருந்து விலகி, தவெக.,வில் இணையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


அதிமுக ஆட்சி காலத்தில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தவர் சி.விஜயபாஸ்கர். புதுக்கோட்டை அதிமுக மாவட்ட செயலாளராக இருந்த இவர், வழக்கமாக புதுக்கோட்டை தொகுதியில் தான் போட்டியிடுவார். ஆனால் இந்த முறை விராலிமலை தொகுதியில் போட்டியிட்டு வெற்றியும் பெற்றார். அதிமுக.,வில் நீண்ட காலமாக இருந்து வரும் சி.விஜயபாஸ்கர், தேர்தல் ஆட்சிக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மீது அதிருப்தி மனநிலையில் இருந்த எஸ்.பி.வேலுமணி தரப்பில் இருந்து வந்தார். 


கடந்த மாதம் சட்டசபையில் நடைபெற்ற தவெக அரசு மீதான நம்பிக்கை ஓட்டெடுப்பின் போது அதிமுக கொறடாவின் உத்தரவை மீறி, தவெக அரசுக்கு ஆதரவாக ஓட்டளித்தார். இதனால் புதுக்கோட்டை மாவட்ட செயலாளர் பதவியில் இருந்து சி.விஜயபாஸ்கர் நீக்கப்பட்டார். அதற்கு பிறகு கடந்த இரண்டு நாட்களாக எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக மிக கடுமையான விமர்சனங்களை முன் வைத்து வந்தார். இந்நிலையில் இன்று தனது விராலிமலை எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துள்ளார்.




சட்டசபை சபாநாயகர் பிரபாகரனை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை இவர் அளித்துள்ளார். சி.விஜயபாஸ்கர் ராஜினாமா கடிதம் அளித்த சில நிமிடங்களிலேயே அவரது ராஜினாமா ஏற்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் அறிவித்துள்ளார்.  ஏற்கனவே அதிமுக.,வை சேர்ந்த 4 எம்எல்ஏ.,க்கள் தங்களின் பதவியை ராஜினாமா செய்து விட்டு, தவெக.,வில் சென்று இணைந்துள்ளனர். இந்த சமயத்தில் 5வதாக சி.விஜயபாஸ்கரும் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதனால் சட்டசபையில் அதிமுக.,வின் பலம் தொடர்ந்து குறைந்து வருகிறது.


இந்நிலையில் எம்எல்ஏ., பதவியை ராஜினாமா செய்துள்ள சி.விஜயபாஸ்கர், விரைவில் அதிமுக.,வில் இருந்து விலகி தவெக.,வில் இணைவதற்கு அதிக வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.


சி. விஜயபாஸ்கரைத் தொடர்ந்து விரைவில் சி.வி.சண்முகமும் பதவி விலகலாம் என்ற பேச்சும் அடிபடுகிறது. அதேபோல எம்.ஆர். விஜயபாஸ்கர் பெயரும் அடிபட்டது. ஆனால் அதை அவர் மறுத்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

அன்பில் மகேஸ் பொய்யாமொழி ரெய்டு: மற்றுமொரு அரசியல் பழிவாங்கல்.. மு.க.ஸ்டாலின்

news

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் எப்போதுமே முதல் பூஜை யாருக்கு தெரியுமா?

news

ரெஸ்ட்டில் இருக்கிறேன்.. உடல்நலம் குறித்து விசாரித்த அனைவருக்கும் நன்றி.. மு.க.ஸ்டாலின்

news

ஈரான் போர் எதிரொலி: ஆசியாவுக்கான எண்ணெய் கப்பல் போக்குவரத்து செலவு புதிய உச்சம்!

news

"ஜெயா, நீ இல்லாத ஊருக்கு இலுப்பைப் பூ".. மறக்க முடியுமா? (2)

news

ஆவியைப் பத்தி சொல்லுங்க.. எங்கே நைஸா ஓடப் பாக்கறீங்க.. வாங்க இங்க..!

news

MS Subbulakshmi: மகாராணி மீனாட்சியின் மதுரையில் அவதரித்த.. கர்நாடக இசையின் ராணி!

news

இது லண்டனா இல்லை சென்னையா.. விஜய்யைப் பார்க்க கூடிய பெரும் கூட்டம்.. சந்திப்பு ரத்து!

news

வாஸந்திக்குப் பிடித்த பாஸந்தி!

அதிகம் பார்க்கும் செய்திகள்