சென்னை: கரூர் சம்பவத்திற்குப் பிறகு திமுக அரசு முற்றிலும் சீர்குலைந்துள்ளது. மக்கள் பிரதிநிதிகள் இருக்கும்போது ஐஏஎஸ் அதிகாரியை வைத்து விளக்கம் அளிப்பது ஏன் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கேட்டுள்ளார்.
இதுதொடர்பாக எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவு:
கரூர் துயரச்சம்பவத்துக்குப் பிறகு ஸ்டாலின் அரசு முற்றிலும் சீர்குலைந்த நிலையில் உள்ளது. மக்களைப் பாதுகாப்பதில் ஏற்பட்ட தங்களின் தோல்வியை விரைவாக மறைத்து, இந்த விபத்திற்கான காரணத்தை பிறர்மீது சுமத்த வேண்டும் என்பதே அரசின் நோக்கமாகத் தெரிகிறது.
தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள், அமைச்சர்கள் போன்றோர் இருக்கும்போது, வருவாய் செயலாளர் ஊடகங்களுக்கு பேட்டி அளிப்பதன் அவசியம் என்ன?

ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி திருமதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஏற்கனவே ஒரு விசாரணைக்குழு நியமிக்கப்பட்டு, அது பணியைத் தொடங்கிய நிலையில், அரசின் பேச்சாளர் என்ற வகையிலும் கூட ஒரு செயலாளர் இதுபோன்ற விஷயங்களைப் பேசுவதன் அவசியம் என்ன?
இது, அந்தக் குழுவின் கருத்துக்களை பாதிக்கும் வகையிலும், நீதியிலான அவமதிப்பாகவும் கருதப்பட வேண்டியதல்லவா?
ஆனால் ஸ்டாலின் அரசுக்கு எந்த விதமான நெறிமுறைகளும், ஒழுக்கமும் இல்லை; அவர்களுக்கு முக்கியமானது இந்த 41 அப்பாவி மக்கள் உயிரிழந்த இந்தக் கொடூரச் சம்பவத்துக்கான பொறுப்பில் இருந்து தப்பித்துக் கொள்வதுதான்.மேலும் உண்மை சம்பவத்தை மறைப்பதற்கு இப்படிப்பட்ட நாடகத்தை இந்த அரசு அரங்கேற்றி இருப்பது மக்களிடேயே மிகப்பெரிய சந்தேகத்தை ஏற்படுத்துகிறது என்று அவர் கூறியுள்ளார்.
தமிழகத்தின் 4 மாவட்டங்களுக்கு நாளை 'ஆரஞ்சு அலர்ட்': வானிலை மையம் எச்சரிக்கை
மாறிப் போன வாழ்க்கை.. கடந்து போன வயது.. It changed my life
கூட்டணிக்கு வர விஜய்யிடம் காங்கிரஸ் வைத்த டிமாண்ட்...ஆடிப்போன தவெக
தவெக தேர்தல் அறிக்கை தயாரிக்க 12 பேர் கொண்ட குழு...பட்டியலை வெளியிட்ட விஜய்
வானுலகின் பேரொளியில், ஒரு பொக்கிஷம்.. Divine Gift!
மலை போல வந்ததா? மழை போல வந்ததா? .. ஒரு மொழித் தேடல்!
வேகம் விவேகமானதா..?
செம்மையாக வாழ வேண்டும்.. எப்படி தெரியுமா.. ஸ்டீபன் ஹாக்கிங் போல!
ஜனநாயகன் இழுபறி தொடர்கிறது.. பாரசக்திக்கு யுஏ கிடைத்தது.. திட்டமிட்டபடி நாளை ரிலீஸ்!
{{comments.comment}}