சென்னை: தமிழ்நாட்டின் காவிரி நதிநீர் உரிமையை நிலைநாட்டியது அஇஅதிமுக.
அதனை விட்டுக்கொடுக்கத் துணிவது திமுக. காவிரி நதிநீர் பற்றி பேச பொம்மை முதல்வருக்கு துளியும் அருகதை இல்லை என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்ட எக்ஸ் தள பதிவில், இருமாநில உறவுகளை மேம்படுத்தியும், சட்டப் போராட்டத்தில் தமிழ்நாடு அரசை இணைத்தும், காவிரி நீர் முறையாகக் கிடைக்கச் செய்தவர் மாண்புமிகு புரட்சித்தலைவர் எம்ஜிஆர்.
புரட்சித் தலைவரின் சட்டப்போராட்டத்தைத் தொடர்ந்து, அதில் வெற்றிகண்டு, அத்தீர்ப்பை அரசிதழில் வெளியிட்டவர் மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா.

காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்க, கழக எம்.பி.க்கள் மூலம் 22 நாட்கள் நாடாளுமன்றத்தை முடக்கி, ஆணையம் அமைய வழிவகுத்ததோடு, காவிரி மற்றும் அதன் துணை ஆறுகளை சுத்தப்படுத்தும் கனவுத் திட்டமான "நடந்தாய் வாழி காவிரி" திட்டத்தினை துவக்கி, அதற்கு மத்திய அரசிடம் பேசி நிதியைப் பெற்றவர் இபிஎஸ் அவர்கள்.
நீங்களும் உங்கள் தந்தையும் காவிரி விவகாரத்தில் செய்தது என்ன?
காவிரி ஒப்பந்தத்தை Renewal செய்யாமல் ஒட்டுமொத்த காவிரி நதிநீர் பிரச்சனைக்கும் மூலக்காரணமாக இருந்தவர் கருணாநிதி.
காவிரி நீரைத் தர மாட்டோம், மேகதாதில் அணை கட்டுவோம் என்று இன்றுவரை பேசிக் கொண்டிருக்கும் கர்நாடக காங்கிரஸ் அரசோடு ஒட்டி உறவாடிக் கொண்டிருப்பவர் நீங்கள்.
தமிழ்நாட்டின் காவிரி நதிநீர் உரிமையை நிலைநாட்டியது அஇஅதிமுக.
அதனை விட்டுக்கொடுக்கத் துணிவது திமுக. எனவே, காவிரி நதிநீர் பற்றி பேச பொம்மை முதல்வருக்கு துளியும் அருகதை இல்லை! என்று தெரிவித்துள்ளார்.
ரீல்ஸ்க்காக மட்டுமே பேச்சு...சபாநாயகர், முதல்வர் மீது உதயநிதி கடும் விமர்சனம்
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை FIR பதிவு
அலை ஓடியே போனாலும் கரை கொண்ட நுரையழகு!
Letter to my favourite toy as a kid
Day of celebrating the selfless service
சிறுகதை: இதுதான் ட்ரெண்ட்!
மக்கு மக்கு நான் மட்டும் .. ஒனக்கு ரொம்ப தொக்கு தொக்கு!
என்னை நேசிப்பவளுக்கு!
அறிவின் ஒளியே எங்கள் ஆசான்
{{comments.comment}}