சென்னை: அதிமுக ஐடி விங் இணைச்செயலாளர் நிர்மல்குமார் மற்றும் ஆதவ் அர்ஜூனா ஆகியோர் இன்று முறைப்படி தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் இணைந்தனர்.
கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கினார் விஜய். தற்போது இக்கட்சி தொடங்கி ஓர் ஆண்டு ஆகியுள்ள நிலையில், கட்சியின் வளர்ச்சிப் பணிகளில் தவெக தலைவர் விஜய் தீவிரமாக செயல்பட்டு வருகிறார். வருகிற 2026ம் ஆண்டு நடைபெற உள்ள தேர்தலை மையமாக வைத்து அனைத்து பணிகளையும் விஜய் செய்து வருகிறார். சட்டப்பேரவை தொகுதிகளை 120 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டு, மாவட்ட செயலாளர்கள் பட்டியல்கள் தற்போது 2 கட்டங்களாக வெளியிட்டுள்ளார் விஜய்.
இந்நிலையில், சமீபத்தில் விசிக கட்சியின் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து வெளியேறிய ஆதவ் ஆர்ஜூன தவெக கட்சியில் இணைய உள்ளதாகவும், அவருக்கு முக்கிய பதவி விஜய் வழங்க உள்ளதாகவும், வாய்ஸ் ஆப் காமன் என்ற நிறுவனத்தை நடத்திவரும் ஆதவ் அர்ஜூனா விஜய்யின் தமிழக வெற்றிக் கழக கட்சியில் இணைந்து அரசியல் ஆலோசகராக செயல்பட இருப்பதாகவும் தகவல் வெளியாகின. அதேபோல சி.டி. நிர்மல்குமார் பெயரும் அடிபட்டது. அவர், தமிழக பாஜகவின் மாநில தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகங்களின் மாநில தலைவராக இருந்தவர். கடந்த ஆண்டு மார்ச் மாதம் பாஜகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தார். அதிமுகவில் இணைந்த அவர் அதிமுகவின் தகவல் தொழில்நுட்ப பிரிவு இணைச்செயலாளராக இருந்து செயல்பட்டு வந்தார்.
இந்நிலையில், இந்த இருவரும் இன்று தவெகவில் இணைந்தனர். நிர்மல் குமார் தனது சமூக வலைதள பக்கங்களில் அதிமுக குறித்த பதிவுகளையும் தற்போது நீக்கி விட்டார். இன்று பனையூர் அலுவலகம் வந்த ஆதவ் அர்ஜூனா மற்றும் நிர்மல்குமார் இருவரும் முறைப்படி தவெகவில் இணைந்து கொண்டனர்.
இவர்களைத் தொடர்ந்து நாம் தமிழர் கட்சி சார்பில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டவரும், நல்ல பேச்சாளராக அறியப்படும் காளியம்மாளும் தவெகவில் இணைய உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. தவெகவில் இப்போதுதான் முக்கியமான, முகங்கள் இணையத் தொடங்கியுள்ளன. இதனால் அக்கட்சியினர் உற்சாகமாகியுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
விஜய் வேஷம் கலைந்து விட்டது... விரைவில் காலி பெருங்காய டப்பா போல் ஆகி விடுவார்: அமைச்சர் சேகர்பாபு
திமுக-அதிமுக...எத்தனை இடங்களில் போட்டியிட்டால்.. கூட்டணி ஆதரவு இல்லாமல் ஆட்சி அமைக்கலாம்?
சொந்தமாக தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய நடிகர் ரவி மோகன்... இயக்குனராகவும் அவதாரம்!
அது என்ன 39% ஓட்டுக் கணக்கு.. அமைச்சர் அமித்ஷா சொன்னது இதைத் தானா?
வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த தருணம்.. காலை உணவுத் திட்ட விரிவாக்கம்.. முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
பிள்ளையார் பிள்ளையார்.. பெருமை வாய்ந்த பிள்ளையார்.. விநாயகர் சதுர்த்தி சிறப்புகள்!
குருதிப்பூக்கள் (சிறுகதை)
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு.. தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வு!
வந்துருச்சு "பிள்ளையார் சதுர்த்தி".. பூரண கொழுக்கட்டை பண்ணலாமா?
{{comments.comment}}