தேர்தல் முடிந்து சென்னை திரும்பும் மக்கள்: உச்சம் தொட்ட விமானக் கட்டணம்

Apr 27, 2026,01:54 PM IST

சென்னை: தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு முடிந்துள்ள நிலையில், சொந்த ஊர்களுக்குச் சென்று விட்டு மீண்டும் சென்னை திரும்பும் மக்களின் கூட்டத்தால் விமானக் கட்டணங்கள் வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளன. குறிப்பாக மதுரையிலிருந்து சென்னை வருவதற்கு விமானக் கட்டணம் 6 மடங்கு வரை அதிகரித்துள்ளது பயணிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


ஏன் இந்த திடீர் உயர்வு?


தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 23-ம் தேதி சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது. இதற்காக சென்னையில் வசிக்கும் லட்சக்கணக்கான மக்கள் தங்களது சொந்த ஊர்களான மதுரை, திருச்சி, கோவை, தூத்துக்குடி போன்ற நகரங்களுக்குப் பயணம் மேற்கொண்டனர். வாக்குப்பதிவு முடிந்து வார இறுதி நாட்களும் முடிந்த நிலையில், இன்று திங்கட்கிழமை பணிக்குத் திரும்ப வேண்டிய கட்டாயத்தில் மக்கள் உள்ளனர். ரயில் மற்றும் பேருந்துகளில் பல வாரங்களுக்கு முன்பே முன்பதிவு முடிந்துவிட்ட நிலையில், கடைசி நேரத்தில் சென்னை திரும்ப முயன்றவர்கள் விமானங்களை நாடினர். பயணிகளின் அதீத தேவையால் , 'டைனமிக் ப்ரைசிங்' முறையில் கட்டணங்கள் கிடுகிடுவென உயர்ந்துள்ளன.


தலைசுற்ற வைக்கும் கட்டண விவரம்:




வழக்கமான நாட்களில் தென் மாவட்டங்களில் இருந்து சென்னை வர வசூலிக்கப்படும் கட்டணத்தை விட, தற்போது பல மடங்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.


மதுரை - சென்னை: வழக்கமாக ரூ. 5,000 ஆக இருந்த ஒரு வழிப் பயணக் கட்டணம், நேற்று இரவு ரூ. 32,508 ஆக உயர்ந்தது. இது சாதாரணக் கட்டணத்தை விட 6 மடங்கு அதிகம்.


தூத்துக்குடி - சென்னை: ரூ. 5,354 ஆக இருந்த டிக்கெட் விலை தற்போது ரூ. 17,089 ஆக அதிகரித்துள்ளது.


கோவை - சென்னை: தொழில் நகரமான கோவையிலிருந்து சென்னை வர ரூ. 11,149 வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது.


பயணிகள் அவதி:


விமானக் கட்டண உயர்வு ஒருபுறம் இருக்க, பெரும்பாலான விமானங்களில் டிக்கெட்டுகள் முழுமையாக விற்றுத் தீர்ந்துவிட்டன. அவசரத் தேவைகளுக்காக சென்னை வர வேண்டிய நடுத்தர வர்க்கத்தினர், இந்த திடீர் விலையேற்றத்தால் செய்வதறியாது திகைத்துப் போயுள்ளனர். "தேர்தல் போன்ற முக்கிய நேரங்களில் ஆம்னி பேருந்துகளைப் போல விமான நிறுவனங்களும் தன்னிச்சையாகக் கட்டணத்தை உயர்த்துவதைக் கட்டுப்படுத்த மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனப் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அடுத்த சில நாட்களுக்கு இதே நிலை நீடிக்கும் என்பதால், சென்னை திரும்பும் பயணிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

DMK Introspection: தேர்தலில் தோற்றது ஏன்? .. திமுக கள ஆய்வு ரிப்போர்ட் தந்த அதிர்ச்சி தகவல்

news

எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில்.. கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் முதல்வர் விஜய் சுவாமி தரிசனம்!

news

தகுதி நீக்கமா? ராஜினாமா செய்த 4 எம்எல்ஏ.,க்களுக்கு சபாநாயகர் நோட்டீஸ்!

news

ஸ்டிக்கர் ஒட்டிய சோஃபா மாடல் அரசு - முதல்வர் விஜய் மீது உதயநிதி ஸ்டாலின் கடும் தாக்கு

news

தமிழ்நாடு எம்எல்ஏக்களுக்கு 2 நாள் பயிற்சி வகுப்பு: சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் அறிவிப்பு!

news

அரசு நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு!

news

ஆளே இல்லாத கடையில டீ ஆத்துவது போல...தமிழக அரசை விமர்சித்த திமுக தலைவர் ஸ்டாலின்

news

பைக் டாக்ஸி: தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு என்ன? உயர்நீதிமன்ற கிளை கேள்வி!

news

அரசியலுக்கு வரவா? வேண்டாமா?.. நீங்களே சொல்லுங்க பார்ப்போம்.. மக்களிடம் கேட்கும் ராகவா லாரன்ஸ்!

அதிகம் பார்க்கும் செய்திகள்