திருநெல்வேலி : ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு திருநெல்வேலி அருகே உள்ள மேலப்பாளையம் ஆட்டு சந்தையில் 3 கோடிக்கு ஆடு விற்பனை அமோகமாக நடைபெற்றுள்ளது. இதனால் வியாபாரிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர்.
ரம்ஜான் பண்டிகை என்றாலே பாய் வீட்டு பிரியாணி தான். அதுவும் கறி இல்லாத பிரியாணி இருக்குமா. இதனால் ஒவ்வொரு வருடமும் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு ஆட்டு சந்தைகளில் இஸ்லாமியர்களின் கூட்டம் அலைமோதும். இப்போதும் ரம்ஜான் நெருங்கி விட்டதால், ஆட்டு விற்பனையும் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது. ஆட்டு சந்தைகளில் ஆடுகள் விற்பனை அதிகரிக்க ஆரம்பித்துள்ளது.
நெல்லை மாவட்டத்தில் மிகவும் பிரபலமான மேலப்பாளையம் ஆட்டுச் சந்தை உள்ளது. இங்கு ஒவ்வொரு வாரத்திலும் வரும் செவ்வாயன்று நெல்லை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து வியாபாரிகள் ஆடுகளை கொண்டு வந்து இங்கு விற்பனை செய்வது வழக்கம். இங்கு நாட்டு ஆடுகள், வெள்ளாடு, கிடாய் போன்ற பலரக ஆடுகள் விற்பனை செய்யப்படுகின்றன.

இந்த நிலையில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு இந்த ஆண்டு மேலப்பாளையம் ஆட்டுச் சந்தையில் நிறைய ஆடுகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இன்றும் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வியாபாரிகள் இங்கு வந்து ஆயிரக்கணக்கான ஆடுகளை விற்பனை செய்துள்ளனர். ஒரு ஆட்டின் விலை குறைந்தபட்சம் ரூபாய் பத்தாயிரம் முதல் விற்பனையானது. இதையடுத்து கொங்கு ரக கிடாக்களும் சுமார் 60 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டது. இதுவரை இந்த சந்தையில் மூன்று கோடி ரூபாய் வரை ஆடுகள் விற்பனை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு மேலப்பாளையம் ஆட்டுச் சந்தையில் நிறைய ஆடுகள் விற்பனையானதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்ததுடன், ரம்ஜான் பண்டிகையும் களைகட்ட ஆரம்பித்துள்ளது.
2026 சட்டசபைத் தேர்தலில் புதுச்சேரி மாநிலத்திலும் தவெக கொடி பறக்கும்...விஜய் அதிரடி பேச்சு
நாகப்பட்டினத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்!
சென்னையில் நாளை கூடுகிறது.. அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு.. முக்கிய முடிவு எடுக்கப்படுமா?
எனது கையெழுத்தை போலியாக போட்டுள்ளனர்: அன்புமணி மீது ராமதாஸ் பரபரப்பு குற்றச்சாட்டு!
TVK Vijay.. விஜய்யின் தமிழ்நாடு பிரச்சார பேச்சு Vs புதுச்சேரி பேச்சு... எது பெஸ்ட்?
லக்னோவில் நடந்த ஸ்கவுட் நிகழ்ச்சியில்.. ஜொலித்த தமிழ்நாடு மாணவி!
Most Searched Athlete: அதிரடி காட்டிய இந்திய வீரர் அபிஷேக் ஷர்மா.. பாகிஸ்தானில் காட்டிய எழுச்சி
எடப்பாடியார் அதிரடி.. கேஏ செங்கோட்டையனின் அண்ணன் மகனை இழுத்த அதிமுக!
முதல் மாதத்தில் உடையவனே தஞ்சம்.. பத்தாம் மாதத்தில் அழகான குழந்தை.. தாய்மையின் பேரழகு!
{{comments.comment}}