இந்தியா-பாகிஸ்தான் போர் பதற்றம்.. ஏர் இந்தியா விமான சேவை ரத்து.. பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை!

May 07, 2025,10:59 AM IST

டெல்லி: பஹல்காம் தாக்குதலை அடுத்து, இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் பதற்ற சூழல் உருவாகியுள்ள நிலையில், அப்பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல்  ஏர்  விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.



காஷ்மீரில் உள்ள பைசரன்  பள்ளத்தாக்கு பகுதிகளில் கடந்த 22 ஆம் தேதி பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு இந்தியா பதிலடி கொடுத்து வருகிறது . அதன்படி இந்தியா பாகிஸ்தான் எல்லைப் பகுதிகள் மூடப்பட்டு, சிந்து நதி ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது. இந்தியாவில் தங்கி இருக்கும் பாகிஸ்தானியர்கள் உடனடியாக இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் என கெடு விதிக்கப்பட்டது.அதேபோல் எல்லை தாண்டி தாக்குதல்கள் அதிகரிப்பதை தடுக்கும் வகையில் பாகிஸ்தானில் இருந்து வரும் இறக்குமதி பொருள்களுக்கு தடை விதிக்கப்பட்டது. மேலும் இந்திய துறைமுகங்களில் பாகிஸ்தான் கொடி ஏந்திய கப்பல்களுக்கு தடை விதிக்கப்பட்டது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையேயான உறவு  மோசமடைந்தது. 


இதற்கிடையே பொதுமக்கள் மற்றும் மாணவர்களுக்கு பாதுகாப்பு ஒத்திகை குறித்த பயிற்சி அளிக்க இன்று 244 இடங்களில் போர்க்கால ஒத்தி நடத்தப்படும் என்று அனைத்து மாநிலங்களுக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.




இந்த நிலையில் பஹல்காம் தாக்குதலைக்கு பதிலடியாக பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்திய ராணுவம் அதிரடி தாக்குதலை நடத்தியுள்ளது. இந்திய நேரப்படி நள்ளிரவு 1:44 மணி அளவில் பாகிஸ்தானில் உள்ள ஒன்பது தீவிரவாத முகாம்கள் மீது இந்திய ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் மூன்று பேர் உயிரிழந்தனர். 12 பேர் படுகாயம் அடைந்தனர்.  இதனையடுத்து இந்த தாக்குதல் பாகிஸ்தான் ராணுவத்தை குறிவைத்து நடத்தவில்லை. நீதி நிலை நாட்டப்பட்டது. ஜெய்ஹிந்த் என இந்திய ராணுவம் விளக்கம் அளித்துள்ளது. 


இந்தியா-பாகிஸ்தான் இடையே ஏற்பட்டுள்ள போர் பதற்ற சூழல் காரணமாக, இன்று ஏர் இந்தியா விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதன்படி, ஜம்மு, ஸ்ரீநகர், லே, ஜோத்பூர், அமிர்தசரஸ், ஜாம்நகர், சண்டிகர், ராஜ்கோட், உள்ளிட்ட இடங்களில் ஏர் இந்திய விமான சேவைகள் இன்று பிற்பகல் வரை ரத்து செய்யப்பட்டுள்ளன. 


மேலும், ஜம்மு, சம்பா, கத்வா, ரஜோரி பூஜ்ச் பகுதிகளில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ‌

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

பணி நிரந்தரம் கோரி போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்கள் கைதுக்கு ஈபிஎஸ் கண்டனம்

news

Coolie Movie Review: ரஜினியின் "கூலி" படம் எப்படி இருக்கு.. தியேட்டர் அதிருதா.. இல்லை..?

news

ஆபரணத் தங்கத்தின் விலை இன்று எவ்வளவு தெரியுமா?

news

79வது சுதந்திர தினம்.. தாய்த் திருநாட்டின் தியாகிகளுக்கு சல்யூட்.. பாரத அன்னைக்கு வணக்கம்!

news

சச்சின் டெண்டுல்கருக்கு மருமகள் வரப் போகிறார்.. தொழிலதிபர் மகளை மணக்கிறார் மகன் அர்ஜூன்!

news

செப்டம்பர் மாதம் வெளிநாடு செல்கிறேன்.. களப் பணிகளுக்குத் தயாராகுங்கள்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தூய்மை பணியாளர்களை அப்புறப்படுத்த ஹைகோர்ட் உத்தரவு

news

மதுரை சொத்து வரி முறைகேடு வழக்கில் இருவர் கைது: பிரேமலதா விஜயகாந்த் பாராட்டு!

news

கத்திக் குத்து, அரிவாள், கல்லூரிக்குள் நாட்டு வெடிகுண்டு... இது தான் திமுக அரசு: எடப்பாடி பழனிச்சாமி

அதிகம் பார்க்கும் செய்திகள்