எதிர்பாராத ட்விஸ்ட்... அனைத்து எக்சிட் போல் கணிப்புக்களையும் பொய்யாக்கிய லோக்சபா தேர்தல் ரிசல்ட்!

Jun 04, 2024,12:57 PM IST

டில்லி :  எக்சிட் போல் கருத்து கணிப்புகள் அத்தனையையும் பொய்யாக்கும் விதமாக 2024 லோக்சபா தேர்தல் முடிவுகள் வந்து கொண்டிருக்கிறது. இது அரசியல் கட்சிகளுக்கு மட்டுமின்றி எக்சிட் போல் முடிவுகளை வெளியிட்ட மீடியாக்களுக்கும் அதிர்ச்சி அளிப்பதாகவே அமைந்துள்ளது.


நடந்து முடிந்த லோக்சபா தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் என சமீபத்தில் பல்வேறு மீடியாக்கள், exit poll வெளியிட்டன. இதில் சொல்லி வைத்தது போல் அனைவரும் தேசிய அளவில் பாஜக கூட்டணி 350 சீட்களுக்கு மேல் வெற்றி பெறும். இந்தியா கூட்டணி 150 முதல் 170 இடங்களை மட்டுமே கைப்பற்றும் என சொல்லப்பட்டது. ஆனால் இந்த முறை தேர்தல் முடிவுகள் யாரும் கணிக்க முடியாததாக இருந்து வருகின்றன. நொடிக்கு நொடி முன்னிலை நிலவரங்கள் மாறி வருகின்றன.




இந்தியா கூட்டணி 200 சீட்களை கூட பிடிக்காது என பலரும் அடித்து கூறி வந்தனர். ஆனால் கருத்து கணிப்புகள் அனைத்தையும் பொய்யாக்கும் விதமாக இந்தியா  கூட்டணி 228 க்கும் அதிகமான இடங்களில் முன்னிலையில் இருந்து வருகிறது. ஒருவேளை தேர்தல் முடிவுகள் இறுதி நிலவரம் வெளியான பிறகு இந்த எண்ணிக்கை அதிகரிக்கவோ அல்லது குறையவோ வாய்ப்பு ஏற்படலாம். அப்படியே குறைந்தாலும் அதிகபட்சம் 10 முதல் 15 இடங்கள் மட்டுமே குறைய வாய்ப்புள்ளது. எப்படி பார்த்தாலும் இந்தியா கூட்டணிக்கு 200 இடங்களுக்கும் அதிகமாகவே வெற்றி கிடைக்க வாய்ப்புள்ளது.


அதே போல் பாஜக கூட்டணிக்கு தமிழ்நாட்டில் 3 சீட்டும், தேசிய அளவில் 350 அதிகமான சீட்டுகளும் வரும் என்று சொல்லப்பட்ட கருத்து கணிப்புகளும் பொய்யாகி உள்ளது. தமிழகத்தில் ஒரு இடம் கூட அக்கூட்டணிக்கு கிடைக்காத நிலையே உள்ளது. தர்மபுரியில் பாமக முன்னிலை வகித்து வந்தது. தற்போது அதுவும் போய் விட்டது. இந்த முறை இந்தியா கூட்டணி, தேசிய ஜனநாயக கூட்டணிக்கு கடும் நெருக்கடியை கொடுத்துள்ளதால் பாஜக கூட்டணி மொத்தமாக 300 சீட்களைத் தொடுவதே சிரமமாக இருக்கும் நிலையே உள்ளது.


ஓட்டு எண்ணிக்கை துவங்கி, இரண்டு மணி நேரம் வரை பிரதமர் மோடியே பின்னடைவை சந்தித்து வந்தது. அதிக ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட பாஜக ஸ்டார் வேட்பாளர்கள் பலரும் தற்போது வரை பின்னடைவை சந்தித்து வருவது, காங்கிரஸ் மற்றும் அதன்  கூட்டணியில் வெற்றி பெற வாய்ப்பே இல்லை என சொல்லப்பட்ட பல வேட்பாளர்கள் அதிக ஓட்டு வித்தியாசத்தில் முன்னிலையில் இருந்த வருவதும் யாரும் எதிர்பாராத ட்விஸ்டாக அமைந்துள்ளது.


எக்சிட் போல்கள் அனைத்தும் பொய்யானவை, கோடி மீடியா போல்கள் அவை.. நிஜமான ரிசல்ட் ஜூன் 4ம் தேதிதான் தெரியும் என்று நேற்று ராகுல் காந்தி அதிரடியாக கூறியிருந்தார். அது தற்போது உண்மையாகியுள்ளது. பாஜக கூட்டணியாக ஆட்சியை மீண்டும் பிடிக்க வாய்ப்புகல் இருந்தாலும் கூட கடந்த காலங்களைப் போல அந்த ஆட்சி செயல்பட முடியாத நிலையே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்திய செய்திகள்

news

எந்த ஷா வந்தாலென்ன?.. தமிழ்நாடு என்றைக்குமே டெல்லிக்கு Out of Control தான்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

கூட்டணி குறித்த முடிவுக்கு இபிஎஸ்சுக்கே அதிகாரம்..அதிமுக பொதுக்குழுவில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றம்

news

2026 சட்டசபைத் தேர்தலுக்கு முன் கூட்டணி விரிவாக்கம்.. ராஜ்யசபா தேர்தலை உற்று நோக்கும் தி.மு.க

news

விஜய்யின் பேச்சு அரசியல் முதிர்ச்சியின்மையை காட்டுகிறது:புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம்

news

தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 7 நாட்கள் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

news

அனைத்து ரேஷன் அட்டை தாரர்களுக்கும் பொங்கல் பரிசு: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு

news

ஆஸ்திரேலியாவில்.. 16 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சமூக ஊடகத் தடை.. எந்தெந்த செயலிகளுக்கு ஆப்பு?

news

தவெகவுடன் கூட்டணி வருமா?.. பதிலளிக்காமல் தவிர்த்த புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி

news

12 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நடிக்க வரும் அப்பாஸ்.. படம் பேரு என்ன தெரியுமா?

அதிகம் பார்க்கும் செய்திகள்