அமர்நாத் யாத்திரைக்கான.. முன்பதிவு தொடங்கியது.. 533 வங்கிக் கிளைகளில் சிறப்பு ஏற்பாடு

Apr 15, 2025,04:39 PM IST
டெல்லி:  புகழ் பெற்ற அமர்நாத் யாத்திரைக்கான முன்பதிவு நாடு முழுவதும் தொடங்கியுள்ளது. முன்பதிவு செய்வதற்கு வசதியாக 533 வங்கிக் கிளைகளில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

புனித அமர்நாத் யாத்திரை மேற்கொள்ள விரும்பும் பக்தர்களுக்கு ஒரு நற்செய்தி வந்துள்ளது. இந்த ஆண்டுக்கான யாத்திரைக்கான முன்பதிவு நடைமுறைகள் இன்று முதல் (ஏப்ரல் 15, 2025) நாடு முழுவதும் உள்ள 533 வங்கிக் கிளைகளில் தொடங்கியுள்ளன. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் அமைந்துள்ள இந்த புனித யாத்திரைக்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

இந்த முன்பதிவு வசதியானது நாட்டின் முன்னணி வங்கிகளான பஞ்சாப் நேஷனல் வங்கி, பாரத ஸ்டேட் வங்கி (ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா), ஜம்மு & காஷ்மீர் வங்கி மற்றும் யெஸ் வங்கி ஆகியவற்றின் 533 கிளைகளில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. யாத்திரை செல்ல விரும்புவோர், தங்களுக்கு அருகாமையில் உள்ள இந்த வங்கிக் கிளைகளை அணுகி தங்களது பெயர்களைப் பதிவு செய்து கொள்ளலாம்.



இந்த ஆண்டுக்கான அமர்நாத் யாத்திரை வரும் ஜூலை மாதம் மூன்றாம் தேதி ஒரே சமயத்தில் இரண்டு வழிகளில் தொடங்கவுள்ளது. தெற்கு காஷ்மீரில் உள்ள அனந்த்நாக் மாவட்டத்தில் இருக்கும் பாஹல்கம் மற்றும் மத்திய காஷ்மீரில் உள்ள காந்தர்பால் மாவட்டத்தில் அமைந்திருக்கும் பாட்டல் ஆகிய இரு மலைப்பாதைகள் வழியாகவும் பக்தர்கள் புனித யாத்திரை மேற்கொள்வார்கள். இந்த ஆன்மிகப் பயணம் ஆகஸ்ட் மாதம் ஒன்பதாம் தேதி, அதாவது ரக்ஷா பந்தன் திருநாளன்று நிறைவு பெறும்.

யாத்திரைக்கான விதிமுறைகள் குறித்து பேசிய அதிகாரிகள், ஒவ்வொரு பக்தரும் தங்களது உடல் தகுதி குறித்த மருத்துவச் சான்றிதழை கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். மேலும், கர்ப்பிணிப் பெண்கள், 13 வயதுக்கு குறைவான குழந்தைகள் மற்றும் 70 வயதைக் கடந்த மூத்த குடிமக்கள் ஆகியோர் இந்த யாத்திரையில் பங்கேற்க அனுமதி இல்லை என்றும் அவர்கள் திட்டவட்டமாக கூறியுள்ளனர். 

அமர்நாத் குகையில் வீற்றிருக்கும் பனிலிங்கத்தை தரிசிக்க ஆவலோடு காத்திருக்கும் பக்தர்கள், இந்த வாய்ப்பை பயன்படுத்தி தங்களது முன்பதிவை விரைந்து செய்து கொள்ளலாம்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

World Daughters Day: இரவில் நீலாம்பரியாய் தாயாகி தாலாட்டுபவள் அவள்!!

news

சர்வதேச மகள்கள் தினம்.. மகாலட்சுமியின் ரூபமே பெண் குழந்தைகள்!

news

மகள் இல்லாக் குறையைப் போக்க வந்த மருமகள்!

news

தென்தமிழ் தலையங்கம்: சுற்றுலா.. மனிதத்தையும் தேசத்தையும் இணைக்கும் பாலம்!

news

மகாளயபட்சம்.. முன்னோர்களுக்குத் தர்ப்பணம், அன்னதானம் செய்வது சிறப்பு!

news

முதல்வர் ரிவ்யூ கூட்டம் நடத்தவில்லை; Reels தான் எடுத்துள்ளார்! - மு.க.ஸ்டாலின் கடும் தாக்கு

news

ஜெம் வீரமணி போக்சோ வழக்கு: சாந்தி மற்றும் கணவருக்கு ஜாமீன் வழங்க காவல்துறை எதிர்ப்பு

news

மின்சாரத் துறை அமைச்சர் நிர்மல் குமார் கலந்து கொண்ட விழாவில் மின்தடை

news

தென்தமிழ்த் தலையங்கம்: உலகம் இதற்கு முன்பு எதைப் பார்த்தெல்லாம் பயந்திருக்கிறது?

அதிகம் பார்க்கும் செய்திகள்