டெல்லி: 2024ம் ஆண்டிற்கான மக்களவைத் தேர்தலில், குஜராத் காந்திநகர் தொகுதியில் அமித்ஷா முன்னிலையில் உள்ளார். உ.பி.அமேதி மக்களவை தொகுதியில் பாஜக வேட்பாளர் ஸ்மிருதி ரானி பின்னிலையில் உள்ளார்.
குஜராத் மாநிலத்தில் உள்ள காந்திநகர் மக்களவை தொகுதியில் பாஜக சார்பில் மத்திய உள்துறை அமைச்சரான அமித்ஷா போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து காங்கிரஸ் கட்சி சார்பில் சோனால் ராமன்பாய் பட்டேல் போட்டியிட்டுள்ளார். இந்த தொகுதியில் 12 பேர் களத்தில் இருந்தாலும் அமித்ஷா, சோனால் பட்டேல் இடையே தான் கடும் போட்டி நிலவுகிறது.
கடந்த 1989 ஆம் ஆண்டு முதல் காந்திநகர் தொகுதி பாஜகவின் கோட்டையாகவே உள்ளது. முன்னாள் துணை பிரதமரான எல்.கே.அத்வானி உள்ளிட்ட பாஜக தலைவர்கள் போட்டியிட்டு வென்ற தொகுதி இது. கடந்த 2019ல் நடைபெற்ற மக்களவை தேர்தலில் காந்திநகர் தொகுதியில் அமித்ஷா போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்நிலையில், குஜராத்தின் காந்தி நகர் கொகுதியில் 72,437 வாக்குகள் வித்தியாசத்தில் அமித்ஷா முன்னிலையில் உள்ளார்.
இந்நிலையில், உ.பி.அமேதி மக்களவை தொகுதியில் பாஜக வேட்பாளர் ஸ்மிருதி ரானி பின்னடைவு. காங்கிரஸ் வேட்பாளர் கிஷோரி லால் 3000க்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை. மொத்தமுள்ள 80 தொகுதிகளில் 40க்கும் மேற்பட்ட இடங்களில் காங்., கூட்டணி முன்னிலையில் உள்ளது.
எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!
கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!
இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?
உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?
விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி
கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்
Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்
ருத்ர தாண்டவம் (சிறுகதை)
உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!
{{comments.comment}}