மும்பை: பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனுக்கு மும்பை மருத்துவமனையில் ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. சிகிச்சைக்குப் பின்னர் அவர் வீடு திரும்பினார்.
சிறந்த நடிப்பாலும், கம்பீரமான குரல் வளத்தாலும் இன்றும் கூட பிசியாக வலம் வருபவர் அமிதாப் பச்சன். இவருக்கு வயது 81. தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் வேட்டையன் படத்தில் நடித்து வருகிறார். 33 ஆண்டுகளுக்கு பிறகு ரஜினியுடன் மீண்டும் அமிர்தாப் பச்சன் இணைந்துள்ளார் என்பதால் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு உள்ளது.

அதேபோல கல்கி 2898 ஏடி என்ற படத்திலும் நடித்து வருகிறார். இதில் கமல்ஹாசன், தீபிகா படுகோனே, பிரபாஸ், திஷா பதானி ஆகியோர் நடிக்கின்றனர். நாக் அஸ்வின் இயக்கிய ஏவடே சுப்ரமண்யம் படத்திலும் நடிக்கிறார்.
இந்த நிலையில் உடல்நலக் குறைவால் அவர் மும்பையில் உள்ள கோகிலாபென் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு ஆஞ்சியோ செய்து பார்க்கப்பட்டது. ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை என்பது ரத்த நாளத்தை விரிவடைய செய்யும் பலூன் சிகிச்சை.
இந்த சிகிச்சைக்குப் பின்னர் அமிதாப் பச்சன் நலமாக இருப்பதாக டாக்டர்கள் கூறியதைத் தொடர்ந்து அவர் வீடு திரும்பினார்.
சிறுகதை: இதுதான் ட்ரெண்ட்!
மக்கு மக்கு நான் மட்டும் .. ஒனக்கு ரொம்ப தொக்கு தொக்கு!
ரீல்ஸ்க்காக மட்டுமே பேச்சு...சபாநாயகர், முதல்வர் மீது உதயநிதி கடும் விமர்சனம்
என்னை நேசிப்பவளுக்கு!
அறிவின் ஒளியே எங்கள் ஆசான்
இந்தப் பூ நிலா! ஒரு பொன் நிலா! வா நிலா! என் தேன் நிலா!
இனிப்புடன் வந்தார்.. ஆசி பெற்றார்.. முன்னாள் மாணவர் குறித்து நெகிழ்ந்த ஆசிரியர்!
சிந்தனைச் சிதறல்.. உள்ளிருந்து முந்தி உந்தும் எந்த ஒன்றும் நம்மை முன்னோக்கி உயர்த்தும்!
கைப்புடிச்ச கண்ணாளா காலத்துக்கும் வருவீகளா!
{{comments.comment}}