- கவிஞாயிறு இரா.கலைச் செல்வி
அன்பென்னும் உணர்வில்தான் அகிலமே சுழல்கிறது .!!
அனைத்து உயிர்களின் உன்னததேவையே அன்புதான்.!!
அன்புதான் மனித வாழ்வின் ஆதாரத்தேவை..!!
அன்பை விதைத்து அன்பையே அறுவடை செய்வோம்..!!
அன்பு நிறைந்த இதயத்தில் ஒழுக்கம் நிலைத்திருக்கும்.!!
அன்பு குடியிருந்தால் ஆணவம் அழிந்துபோகும்..!!
அன்பே சிவம்என அறிந்திடுங்கள் அனைவரும்..!!
அன்பிற்க்கும் மூன்றெழுத்து ,சிவமிற்கும் மூன்றெழுத்து..!!
அன்பை சிறுதுளி விதைத்தால், பெருந்துளியாகும்..!!
அன்பின்வழி நின்றோரை அகிலமும் போற்றும்..!!
அன்பே அனைத்து உயிரினத்திற்கும் அருமருந்து..!!
அன்பைவிதைத்து அன்பையே அறுவடை செய்வோம்..!!

அன்பு உலகையே மாற்றும் உன்னதசக்தி..!!
அன்பு மனித குலத்தின் உயிர் மூச்சு. !!
அன்பை அன்போடு விதைத்துப் பாருங்கள்..!!
அபரிமிதமான மகிழ்ச்சியும் நிம்மதியும் கிட்டும்..!!
அன்பு கொடுக்கின்கூடும், பெற்றால் பெருகும்.!!
ஆயுள் வரை , நிலையில்லா இவ்வாழ்வில் ,
அன்பை விதைத்து செல்வோம்.உங்கள்சந்ததிகள்.!!
அன்போடு அறுவடை செய்து கொள்வார்கள்..!!
மதத்தின் பெயரால் மோதல்கள் வேண்டாம்..!!
கடவுளின் பெயரால் கலவரங்கள் வேண்டாம்..!!
மனிதனை மனிதன் மதித்து நடத்திட வேண்டும் ..!!
மனிதம் போற்றி அன்பினை அறுவடை செய்வோம்..!!
(எழுத்தாளர் பற்றி... சிவகங்கையைச் சேர்ந்த எழுத்தாளர் இரா. கலைச்செல்வி, சென்னையில் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலகத்தில் பல்வேறு துறைகளில் பணியாற்றி ஓய்வு பெற்ற அரசு உயர் அதிகாரி ஆவார். கணவர் மத்திய அரசில் பணியாற்றி ஓய்வு பெற்ற தலைமை விஞ்ஞானி. எழுத்தின் மீதும், வாசிப்பின் மீதும் தீராக் காதல் கொண்ட எழுத்தாளர் இரா. கலைச்செல்வி, நீண்ட காலமாக எழுதி வருகிறார். அகில இந்திய வானொலியில் இவரது பல கதைகள் ஒலிபரப்பாகியுள்ளன. சொந்தக் குரலிலேயே தனது கதைகளை அவர் வாசித்துள்ளார். கதைகள் தவிர, கவிதைகளையும் அதிகம் எழுதி வருபவர், யோகா உள்ளிட்ட பல்வேறு கலைகளையும் கற்றுத் தெளிந்தவர். உளவியலில் முதுகலைப் பட்டமும் பெற்றவர். சாதனைப் பெண், தங்கத் தாரகை, கவிஞாயிறு உள்ளிட்ட பல்வேறு விருதுகளையும் அவர் பெற்றுள்ளார்.)
மனிதா நீ மட்டும் ஏன் இன்னும் களிமண்ணாய்..!
பொம்மிக்குட்டி.. ஒரு நிமிடக் கதை (23)
விரதம் என்னும் பயிற்சி
அன்பான “கூகுள் டிரான்ஸ்லேட் குடும்பத்தினர்” மற்றும் ஜூனூன் தமிழ் ரசிகர்களே!
பொய் ஆயின எல்லாம் போய் அகல வந்து அருளி - சிவபுராணம் (தொடர்ச்சி)
சமையல் With ஸ்வர்ணா: கருப்பு உளுந்து (Black urad dal ) + மல்லி சட்னி!
பன்னாட்டு மொழிபெயர்ப்பு நாள்.. புரிந்து கொள்ளவும், ஒன்றிணைக்கவும் உதவும் பாலம்!
மகா கந்த சஷ்டி விரதம் 2026: முருகனே செந்தில் முதல்வனே.. மாயோன் மருகனே!
கடல் ஒரு கவிதை!
{{comments.comment}}