- ஸ்வர்ணலட்சுமி
திருப்பாவை பாசுரம் 29 :
சிற்றஞ்சிறுகாலே வந்துன்னைச் சேவித்துன்
பொற்றாமரையடியே போற்றும் பொருள்கேளாய்!
பெற்றம் மேய்த்துண்ணும் குலத்தில் பிறந்து நீ
குற்றேவல் எங்களைக் கொள்ளாமற் போகாது
இற்றைப் பறைகொள்வான் அன்றுகாண் கோவிந்தா!
எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன்தன்னோடு
உற்றோமே யாவோம் உனக்கேநாம் ஆட்செய்வோம்
மற்றை நம் காமங்கள் மாற்றேலோர் எம்பாவாய்.

பொருள் :
மார்கழி மாதத்தின் இந்த குளிர்ந்த காலை பொழுதில் தினமும் எழுந்து, நீராடி உன்னை போற்றி பாடி, உன்னுடைய அருளை பெறுவதற்காக சிறுமிகளாகிய நாங்கள் வந்து உன்னுடைய பொன் போன்ற மின்னும் திருவடிகளை வணங்கி நிற்கிறோம். நாங்கள் இப்படி வந்து நிற்பதற்கான காரணத்தை நீ கேட்க வேண்டும். பசுக்களின் பின்னால் சென்று அவற்றை மேய்த்து வாழும் ஆயர்குலத்தில் பிறந்த நீ, நாங்கள் ஒரு மாதமாக கடைபிடித்த விரதத்தில் குற்றம் குறை ஏதாவது இருந்தால் அதை பொறுத்துக் கொள்ள வேண்டும். அவற்றில் இருக்கும் குறைகளை பெரிதாக நினைத்து எங்களை கண்டு கொள்ளாமல், உன்னுடைய அருளை வழங்காமல் இருந்து விடாதே. நீ கொடுக்கும் சிறிய பரிசுப் பொருட்களுக்காக உன்னை போற்றி பாடி நிற்கவில்லை. எதிரிகளை வெற்றி கொள்ளும் பெருமை மிகுந்த கோவிந்தனே! இந்த பிறவியில் மட்டுமல்ல இன்னும் எத்தனை பிறவிகள் எடுத்தாலும் நீ எங்களின் குலத்தில் தோன்ற வேண்டும். உன்னுடைய உறவினர்களாக எங்களை ஏற்க வேண்டும்.
உனக்கு மட்டுமே தொண்டு செய்து வாழ்வது எங்களுக்கு அனுமதி வழங்க வேண்டும். உன் மீதான பக்தியை தவிர மற்ற அனைத்து விதமான உலக இன்பங்களின் மீது ஏற்படும் பற்றுக்களை எங்களில் உள்ளங்களில் இருந்து அகற்றி விடு. உன்னுடைய அருளை மட்டுமே பெரிதாக எண்ணும் மனத்தை எங்களுக்கு அளித்திட வேண்டும்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
தமிழ்நாட்டில் இருந்து ஒலிக்கும் இந்திய விவசாயிகளுக்கான குரல்: முதல்வர் முக ஸ்டாலின்!
ஆஹா சூப்பர் ருசி -- மரவள்ளி கிழங்கு சுழியம்!
சுவையான மோர்க்குழம்பு.. வச்சு சாப்பிட்டுப் பாருங்க.. மறக்கவே மாட்டீங்க!
மாதவிடாய் வலியா.. இடுப்பு வலியா.. இருக்கவே இருக்கு பாரம்பரிய வைத்தியம்!
நன்றியுணர்வு மலரட்டும்.. Gratitude in Bloom: Don't Take Your Parents for Granted
வடதமிழகத்தில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு இருக்காம் மக்களே: வானிலை ஆய்வு மையம் தகவல்!
ரஷ்யா-உக்ரைன் போர் தீவிரம்.. புதிய தாக்குதலில் இறங்கிய ரஷ்ய ராணுவம்
அதிமுக எத்தனை இடங்களில் போட்டி? பாஜக., கேட்பது என்ன?...வெளியான சுவாரஸ்ய தகவல்
ராத்திரி 11 மணியானா போதும்.. இந்தியர்கள் அதிகமாக ஆர்டர் செய்வது இதைத்தானாம்!
{{comments.comment}}