திருப்பாவை பாசுரம் 15 :
எல்லே இளங்கிளியே! இன்னம் உறங்குதியோ ?
சில்லென் றழையேன்மின், நங்கைமீர்! போதர்கின்றேன்;
வல்லை, உன் கட்டுரைகள்! பண்டேஉன் வாயறிதம்!
வல்லீர்கள் நீங்களே, நானேதான் ஆயிடுக!
ஒல்லைநீ போதாய், உனக்கென்ன வேறுடையை?
எல்லோரும் போந்தாரோ? போந்தார், போந்து எண்ணிக்கொள்
வல்லானை கொன்றானை, மாற்றாரை மாற்றழிக்க
வல்லானை, மாயனைப் பாடேலோ ரெம்பாவாய்.

பொருள் :
அழகான கிளி போன்ற பெண்ணே, இன்னும் உறங்கிக் கொண்டிருக்கிறாயா? உனக்காக நாங்கள் காத்திருந்து இவ்வளவு நேரம் அழைத்தும் இன்னும் நீ தூங்கிக் கொண்டிருக்கிறாயா? என தோழி ஒருத்தி செல்ல கோபம் கொள்கிறாள். அதற்கு வீட்டிற்குள் இருக்கும் தோழி, சரி...சரி...என் மீது சிடுசிடுத்து கோவம் கொள்ளாதீர்கள். வந்து விடுகிறேன் என்கிறாள். அதற்கு வெளியில் நிற்கம் தோழி, நாங்கள் அனைவரும் முன்னமே எழுந்து வந்து தினமும் உனக்காக காத்திருக்க வேண்டுமா? அப்படி என்ன எங்களிடம் இல்லாத சிறப்பு உனக்கு உள்ளது என கோபம் கொள்கிறாள்.
அதற்கு அந்த பெண், நான் மட்டும் எழாமல் தூங்கி விட்டதை போல பேசுகிறீர்களே எல்லோரும் வந்த விட்டார்களா? என வீட்டிற்குள் இருந்த படியே கேட்கிறாள். அதற்கு வெளியில் இருக்கும் தோழி, எல்லோரும் வந்து விட்டார்களா என்பதை நீயே வெளியில் வந்து எண்ணிப் பார்த்துக் கொள். வலிமை மிக்க குவலயாபீடம் என்னும் யானையை அடக்கியவனும், எதிரிகளை வேட்டையாடும் திறம் கொண்டவனுமாகிய மாயக் கண்ணனை வணங்கி மகிழ நாங்கள் புறப்பட்டு விட்டோம். நீயும் அவனை வணங்கி மகிழ எங்களுடன் வா என்கிறார்கள்.
விளக்கம் :
மற்றவர்கள் வந்து விட்டார்களா, பக்தி செய்கிறார்களா என வீணான பேச்சுக்களில், மற்றவர்களுடன் ஒப்பிட்டு பொழுதை வீணடித்துக் கொண்டிருக்காமல், இறைவனை பாடி வணங்கி, மகிழ வேண்டும் என தோழிக்கு கூறுவதை போல் நமக்கு அறிவுரை வழங்குகிறார் ஆண்டாள். கண்ணனை சிறு குழந்தை தானே என சாதாரணமாக நினைத்து இருந்து விட வேண்டாம். அவன் லீலை செய்து விளையாடுவதால், அவனை விளையாட்டுப் பிள்ளை என நினைக்காதீர்கள். அவன் மிகவும் வலிமை மிக்கவன் என்பதையும் ஆண்டாள் இந்த பாடலில் விளக்கி உள்ளார்.
Aliya Riaz: யார் இந்த அலியா ரியாஸ்.. ஏன் இப்படி திடீரென வைரலாகியுள்ளார்?
Singapen Helpline Number: பெண்களே.. 1091 என்ற எண்ணை அழைத்தால்.. சிங்கப்பெண் படை விரைந்து வரும்!
FIFA WorldCup 2026: உலகக் கோப்பை கால்பந்து.. அமெரிக்காவில் அசத்தும் ஈரான்.. டிரம்பை கலாய்த்து மீம்ஸ்
பிரிட்டன் அரசியல்: 10 டவுனிங் ஸ்ட்ரீட்டின் சுழலும் கதவு.. கீர் ஸ்டார்மரும் பதவி விலகல்!
கையடக்கத்தில் பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்.. அசத்தலாக சாதிக்கும் நெல்லை ஆசிரியர் பொன் ரேகா!
Chettinadu Recipes: செட்டிநாடு அடுப்படியில் அதிரடி ஸ்வீட்.. மணக்க மணக்க கோதுமை அல்வா!
Monday Motivation: வாழ்வித்த வாழ்த்துகள் (சிறுகதை)
Tamil Short Story: நிறைவேறாத கல்லூரிக்கனவு!
தில்லைக்கூத்தன் கோயில்.. சிதம்பரம் தில்லை நடராஜர் திருக்கோவில் சிறப்புகள்!
{{comments.comment}}