திருப்பாவை பாசுரம் 17 :
அம்பரமே, தண்ணீரே, சோறே அறஞ்செய்யும்
எம்பெருமான்! நந்தகோ பாலா! எழுந்திராய்;
கொம்பனார்க் கெல்லாம் கொழுந்தே! குலவிளக்கே!
எம்பெரு மாட்டி! யசோதாய்! அறிவுறாய்;
அம்பரம் ஊடறுத் தோங்கி உலகளந்த
உம்பர்கோ மானே! உறங்காது எழுந்திராய்;
செம்பொற் கழலடிச் செல்வா! பலதேவா!
உம்பியும் நீயும் உறங்கேலோ ரெம்பாவாய்.
பொருள் :
ஆயர்பாடியில் இருக்கும் அனைவருக்கும் தண்ணீரும், சோறும் அளவு இல்லாமல் கொடுத்து, தான தர்மம் பல செய்யும் எங்களுக்கு தலைவனாக இருக்கும் நந்தகோபாலரே எழுந்திருங்கள். வீரம் மிகுந்த குலத்தில் உதித்த குல விளக்கு போன்றளே. எங்களின் தலைவியாகிய யசோதையே எழுந்திருங்கள். மண்ணில் உள்ளனவர்களை வெற்றி கொண்டது மட்டுமின்றி விண்ணை சேர்த்து அளந்த தேவர்களுக்கு எல்லாம் தேவராக இருக்கக் கூடிய கண்ணனே உறங்காமல் எழுந்திருங்கள். தங்கத்தை போன்ற மின்னும், சிவந்த பாதங்களை உடைய பலராமரே நீங்களும் உங்கள் தம்பியும் இப்படி உறங்கிக் கொண்டிருப்பது சரியா? எழுந்திருங்கள். எழுந்து வந்து எங்களுக்கு அருள் செய்யுங்கள்.
விளக்கம் :
முதலில் ஆயர்பாடியில் இருக்கும் தோழிகளை எழுப்பி பாவை நோன்பு பற்றி கூறி, அதை எப்படி இருக்க வேண்டும் என்பதையும் கூறி, கண்ணனின் பெருமைகளை சொல்லி, கண்ணனை போற்றி பாட வாருங்கள் என அழைத்தாள் ஆண்டாள். தோழிகளை எழுப்புவதோடு நின்று விடாமல் கண்ணனின் வீட்டிற்கே சென்று, அங்குள்ள காலவாளியை எழுப்பி, வீட்டிற்கு சென்று, அங்கு தூங்கிக் கொண்டிருக்கும் நந்த கோபாலன், யசோதா, பலராமர், கண்ணன் என கண்ணனின் வீட்டில் உள்ள அனைவரையும் எழுப்புகிறாள். கண்ணனின் பெருமை பாடும் ஆண்டாள் தன்னுடைய திருப்பாவை பாடல்களில் திருமாலின் அவதாரங்களையும் போற்றி பாடி உள்ளார். திருப்பாவையின் 3 பாடல்களில் வாமன அவதாரத்தை போற்றி பாடி உள்ளார். திரிவிக்கிரமனாக உயர்ந்து மூன்று உலகங்களையும் அளந்தவனே என திருமாலை போற்றி பாடுகிறாள். பக்தியின் ஆணவம் இருக்கக் கூடாது என்பதை எடுத்துக் காட்டவே மாபலி சக்கரவர்த்திக்காக பெருமால் எடுத்த வாமன அவதாரத்தை ஆண்டாள் போற்றி பாடி உள்ளார்.
11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!
இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி
மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!
ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு
கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)
ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்
{{comments.comment}}