திருப்பாவை பாசுரம் 25 :
ஒருத்தி மகனாய் பிறந்து ஓரிரவில்
ஒருத்தி மகனாய் ஒளித்து வளர
தரிக்கிலா னாகித் தான்தீங்கு நினைந்த
கருத்தைப் பிழைப்பித்துக் கஞ்சன் வயிற்றில்
நெருப்பென்ன நின்ற நெடுமாலே! உன்னை
அருத்தித்து வந்தோம் பறைதருதி யாகில்
திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம்பாடி
வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்.
பொருள் :

தேவகிக்கு மகனாக இரவு நேரத்தில் சிறையில் பிறந்து, அதே இரவு நேரத்தில் மறைத்து வளர்ப்பதற்காக யசோதையிடம் சேர்க்கப்பட்டாய். நீ மறைந்து வளர்வதை அறிந்து, அதை தாங்கிக் கொள்ள முடியாத கம்சன் தீய எண்ணத்துடன் வயிற்றில் கடும் கோபம் எனும் நெருப்புடன் இருந்தான். அவனை வதம் செய்து, நீயே உயர்ந்தவன் என உலகிற்கு எடுத்துக் காட்டிய பெருமாளே! உன்னுடைய பெருமையை உணர்ந்து உனது அருளை பெறுவதற்காக நாங்கள் வந்திருக்கிறோம். நாங்கள் அறிந்த உன்னுடைய புகழையும், பெருமையையும் மற்றவர்களும் உணரும் படி செய்து, உனக்காக சேவை செய்ய வந்திருக்கிறோம். உன்னுடைய புகழினை பாடி இருந்தாலே துயரங்கள் அனைத்தும் நீங்கி, மகிழ்ச்சி வந்து விடும். அதனால் எங்களுக்கு உன்னுடைய அருளை தந்தருள வேண்டும்.
விளக்கம் :
கண்ணன் பிறந்தது, வளர்ந்தது, அவனுடைய வீரம், அவனுடைய பெருமை என அனைத்தையும் ஒரே பாடலில் விளக்கி உள்ளார் ஆண்டாள் நாச்சியார். இறதியாக கண்ணனின் புகழை பாடி, அவருக்காக சேவை செய்வதை தவிர வேறு எந்த செல்வமும் தங்களுக்கு வேண்டாம். இறைவனின் அருளாகிய செல்வம் மட்டும் போதும். இறைவனின் வழிபடக் கூட வேண்டாம். இறைவனை பற்றி பாடினாலே துன்பங்கள் அனைத்தும் நீங்கி, இன்பங்கள் கிடைத்து விடும் என்கிறாள் ஆண்டாள். திருப்பாவையின் முதல் 20 பாடல்களிலும் பாவை நோன்பு பற்றியும், அதை எப்படி இருக்க வேண்டும் என்றும், ஆயர்பாடியின் பெருமைகளையும், கண்ணனின் பெருமைகளை பாடி மற்ற தோழிகள் அனைவரையும் எழுப்பி, பிறகு கண்ணனின் வீட்டிற்கே சென்று அங்குள்ளவர்களை எழுப்பினாள். தற்போது கடைசி 10 பாடல்களில் கண்ணனின் அருளை வேண்டியும், அந்த அருளை பெறுவதற்கு நாம் என்ன செய்ய வேண்டும் என்பது பற்றியும் போற்றி பாடி வருகிறார் ஆண்டாள் நாச்சியார்.
நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!
"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!
"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!
பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வைக்கலாமா.. மெட்ரோவுக்கு சு. வெங்கடேசன் கேள்வி
முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை
மாணவர்கள் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் பேரான்மாக்கள்.. ஆசிரியர்கள்!
கல்வி என்னும் நறுந்தேனை.. சுவைக்கச் செய்யும் இளங்காற்று நாமே!
{{comments.comment}}