இந்த விருது என்னுடையது மட்டுமல்ல, நம்முடையது: கலைமாமணி விருது குறித்து அனிருத் நெகிழ்ச்சி பதிவு

Sep 26, 2025,03:24 PM IST

சென்னை: கலைமாமணி விருது குறித்து இசையமைப்பாளர் அனிருத் நெகிழ்ச்சி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.


தமிழில் வெளியான 3 திரைப்படத்தின் வாயிலாக இசையமைப்பாளராக அறிமுகமானவர் அனிருத். அதன்பின்னர் தமிழகத்தின் முக்கிய நட்சத்திரங்களுக்கு இசையமைத்தார். இவர் இசையமைத்த பெரும்பாலான பாடல்கள் சூப்பர் டூப்பர் கிட் அடித்தன. இதனால் இருவருக்கொன்று தனி ரசிகர்கள் உருவாகினர். அதன்பின்னர் முன்னணி இசையமைப்பாளராக வலம் வந்தார். தமிழ் மட்டுமின்றி, தெலுங்கு, ஹிந்தி படங்களுக்கும் இவர் இசையமைத்துள்ளார்.


சமீத்தில் இயல் இசை நாடகம் மன்றத்தால் கலைமாமணி விருதுகளை தமிழக அரசு அறிவித்திருந்தது. இந்த விருது பல ஆண்டுகளாக இயல், இசை, நாடகக் கலைக்கு சேவை செய்த கலைஞர்களின் பங்களிப்பை பாராட்டி வழங்கப்படுகிறது. அந்த வகையில், கடந்த 2021, 2022, 2023 என மூன்று ஆண்டுகளுக்கான கலைமாமணி விருது அறிவிக்கப்பட்டது. இந்த விருது நடிகர்கள் எஸ்.ஜே.சூர்யா, விக்ரம் பிரபு, மணிகண்டன், நடிகை சாய் பல்லவி, இயக்குநர் லிங்குசாமி, சண்டை பயிற்சியாளர் சூப்பர் சுப்பராயன், பாடகி ஸ்வேதா மோகன், பாடலாசிரியர் விவேகா, அனிருத் உள்ளிட்டோருக்கு இந்த விருது அறிவிக்கப்பட்டது.




இது குறித்து இசையமைப்பாளர் அனிருத் தனது எக்ஸ் தள பக்கத்தில் நெகிழ்ச்சியான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், 


மதிப்புமிக்க கலைமாமணி விருது எனக்கு வழங்கப்பட்டதை மிகுந்த தாழ்மையுடனும் பெருமையுடனும், ஏற்றுக்கொள்கிறேன். 


தமிழ்நாடு அரசு, மதிப்பிற்குரிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் மற்றும் இயல் இசை நாடக சங்கத்திற்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவிக்கிறேன்.


எனது அனைத்து இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், பாடகர்கள், பாடலாசிரியர்கள், எனது முழு இசை குழுவினர், அதைவிட முக்கியமாக எப்போதும் அன்பும் ஆதரவுமளித்து வரும் எனது ரசிகர்களுக்கும், இசை ரசிகர்களுக்கும் மனமார்ந்த நன்றி. 


இந்த விருது என்னுடையது மட்டுமல்ல, நம்முடையது. என்றும் நன்றியுடன் அன்புடன், அனிருத். என்று தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

வானிலை எச்சரிக்கை: இன்று 6, நாளை 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

news

நாளை கரூர், நாமக்கல்லில் விஜய் பிரச்சாரம்: தொண்டர்களுக்கு தவெக தலைமை அறிவுரை!

news

இந்த விருது என்னுடையது மட்டுமல்ல, நம்முடையது: கலைமாமணி விருது குறித்து அனிருத் நெகிழ்ச்சி பதிவு

news

தமிழகத்தின் புதிய டிஜிபி யார்.. டெல்லி யுபிஎஸ்சி இன்று ஆலேசானை!

news

தவெக கொடி விவகாரம்: விஜய் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

news

அதிமுக, திமுக கொள்கைகளை எடுத்து கொண்டு வந்துள்ளார் விஜய்: சீமான் காட்டம்!

news

சாதிவாரி கணக்கெடுப்பு சட்ட விரோதம் அல்ல..புரிய வேண்டியவர்களுக்கு இனியாவது புரியுமா? அன்புமணி ராமதாஸ்

news

நவராத்திரி சிறப்புகள்.. முப்பெரும் தேவியர் வழிபாடும், அதன் முக்கியத்துவமும்!

news

தொடர் உயர்வில் தங்கம் விலை... இன்றைக்கு சவரனுக்கு ரூ.320 உயர்வு

அதிகம் பார்க்கும் செய்திகள்