சென்னை: 2021,2022 மற்றும் 2023 ஆகிய 3 ஆண்டுகளுக்கான கலைமாமணி விருதுகள் மற்றும் பாரதியார், எம்.எஸ்.சுப்புலட்சுமி மற்றும் பாலசரசுவதி ஆகியோர் பெயரில் வழங்கப்படும் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசின் சார்பாக தமிழ்நாடு இயல் இசை நாடகம் மன்றத்தின் வாயிலாக பல்வேறு கலைப் பிரிவுகளைச் சேர்ந்த சிறந்த கலைஞர்களுக்கு கலைமாமணி விருதுகள் வழங்குவதுடன், பாரதியார், எம்.எஸ். சுப்புலட்சுமி பாலசரசுவதி ஆகியோர் பெயர்களில் அகில இந்திய விருதுகள் அறிவிக்கப்பட்டு வழங்கப்படுகிறது. அத்துடன் சிறந்த கலை நிறுவனத்திற்கு கேடயமும், சிறந்த நாடகக்குழுவிற்கு சுழற்கேடயமும் வழங்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், 2021,2022 மற்றும் 2023 ஆகிய 3 ஆண்டுகளுக்கான கலைமாமணி விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த விருது வாங்குபவர்களின் பெயர் பட்டியலை தமிழ்நாடு அரசு இன்று வெளியிட்டுள்ளது. அதில் விருது பெறும் கலைஞர்களுக்கு 3 சவரன் தங்கப்பதக்கம், விருது பட்டயம் வழங்கப்பட உள்ளது.
விருது வாங்குபவர்கள் பட்டியல்:
2021 - திரைப்பட இயக்குநருக்கான விருது லிங்குசாமிக்கு வழங்கப்படுகிறது.
2021 - திரைப்பட நடிகைக்கான விருது சாய்பல்லவிக்கு வழங்கப்படுகிறது.
2021- நாடக நடிகருக்கான விருது பூச்சி முருகனுக்கு வழங்கப்படுகிறது.
2022 - நடிகைக்கான கலைமாமணி விருது நடிகை ஜெயாவிற்கு வழங்கப்படுகிறது.
2022ம் ஆண்டிற்கான கலைமாமணி விருது விக்ரம் பிரபுவிற்கு வழங்கப்படுகிறது.
2022 - கலைமாமணி விருதை பாடலாசிரியர் விவேகா பெறுகிறார்.
2023 - திரைப்பட நடிகருக்கான விருது நடிகர் மணிகண்டனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
2023 - குணசித்திர நடிகருக்கான கலைமாமணி விருது ஜார்ஜ் மரியானுக்கு வழங்கப்படுகிறது.
2023- இசையமைப்பாளருக்கான கலைமாமணி விருதை பெறுகிறார் அனிருத்
2023 - நடன இயக்குநர் சாண்டிக்கு கலைமாமணி விருது வழங்கப்படுகிறது.
பின்னணி பாடகிக்கான கலைமாமணி விருதை ஸ்வேதா மோகன் பெறுகிறார்.
பாரதியார் விருது - முருகேச பாண்டியன்
எம்.எஸ்.சுப்புலெட்சுமி விருது - யேசுதாஸ்
பால சரஸ்வதி விருது - முத்து கண்ணம்மாள்
மேலும், எழுத்தாளர் க.திருநாவுக்கரசு, கவிஞர் நெல்லை ஜெயந்தா, சமயச் சொற்பொழிவாளர் எஸ்.சந்திரசேகருக்கு கலைமாமணி விருது வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வானத்தில் கார்மேகமாய் நீயே.. கண்ணா!!!
பெண் எனும் ஒளி சக்தி.. பெண் கல்வியின் மகாசக்தி.. சாவித்திரிபாய் புலே!
நாளை உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி... எங்கெல்லாம் கனமழை பெய்யும் தெரியுமா? வானிலை மையம் தகவல்!
நவராத்திரி சிறப்புகள்: நவராத்திரியில் பொம்மை கொலு ஏன் வைக்கப்படுகிறது?
பழங்குடியினருக்கு சாதி சான்றிதழ் வழங்க மறுப்பது சமூக அநீதி: டாக்டர் அன்புமணி ராமதாஸ்!
3 ஆண்டுகளுக்கான தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருதுகள் அறிவிப்பு!
இன்று நவராத்திரி 3ம் நாள்...அம்பிகை வழிபாட்டிற்கான கோலம், நிறம், பிரசாதம் முழு விபரம்
அதிரடியாக உயர்ந்து வந்த தங்கம் விலை இன்று சற்று குறைந்தது... எவ்வளவு தெரியுமா?
தீபாவளிக்கு விஜய் குரலில் தளபதி கச்சேரியா.. ஜனநாயகன் ஃபர்ஸ்ட் சிங்கிள் எப்ப ரிலீஸ்?
{{comments.comment}}