சென்னை: அஞ்சலையம்மாள் நினைவு நாளையொட்டி பனையூரில் உள்ள தவெக அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள அஞ்சலையம்மாள் சிலைக்கு தவெக தலைவர் விஜய் மரியாதை செலுத்தியுள்ளார்.
தவெகவின் கொள்கை தலைவர்களில் ஒருவரான அஞ்சலை அம்மாள் நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது. அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியுள்ளார் தவெக தலைவர் விஜய். விஜய்யின் தவெக கட்சிக்கு தமிழக மக்கள் மற்றும் ரசிகர்களிடையே மிகப்பெரிய ஆதரவு கிடைத்துள்ளது. அது மட்டும் இன்றி மக்கள் மத்தியில் கட்சி குறித்த எதிர்பார்ப்பும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. தவெக கட்சியின் உட்கட்டமைப்பு பணிகளை விறுவிறுப்பாக செய்து முடித்த விஜய் தற்போது மாவட்ட நிர்வாகிகளின் நியமனம் குறித்த பட்டியலையும் வெளியிட்டுள்ளார். இது ஒருபக்கம் நடக்க, மற்றொருபக்கம் தமிழ் சினிமாவில் விஜய்யின் கடைசி படமான ஜனநாயகன் படத்திலும் நடித்து வருகிறார்.

தமிழக வெற்றிக் கழக தொடங்கப்பட்டு, கடந்த பிப்ரவரி 2ம் தேதியுடன் ஓராண்டு நிறைவடைந்த நிலையில், ஓராண்டு நிறைவையொட்டி கட்சி அலுவலகத்தில் விஜய் கட்சி கொடியை ஏற்றி வைத்து கொள்கை தலைவர்களான அம்பேத்கர், பெரியார், காமராஜர், வேலுநாச்சியார், அஞ்சலையம்மாள் ஆகியோர்களின் சிலையையும் திறந்து வைத்தார். அதேபோல் கட்சி ஓராண்டு விழாவை கொண்டாடும் விதமாக இந்த மாதம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் நலத்திட்ட உதவிகளையும் செய்து வருகிறார்.
இந்நிலையில், சென்னை பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் உள்ள அஞ்சலையம்மாள் சிலைக்கு தவெக தலைவர் விஜய் மரியாதை செலுத்தியுள்ளார்.படப்பிடிப்புத் தளத்திலிருந்து மதிய உணவு இடைவெளியின் போது தவெக அலுவலகம் வந்த விஜய், அஞ்சலையம்மாள் சிலைக்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார். பிறகு மீண்டும் படப்பிடிப்பு தளத்திற்கு புறப்பட்டார். அஞ்சலையம்மாள் நினைவு நாளை முன்னிட்டு இன்று தவெக சார்பில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அன்னதானம் வழங்கப்பட்டது. ஏராளமான ஏழை மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு உணவுகளை வாங்கி சாப்பிட்டனர்.
இந்நிலையில், தவெக தலைவர் விஜய் வெளியிட்ட அறிக்கையில், நாட்டு விடுதலைக்காகவும், மக்களின் வாழ்வாதாரத்திற்காகவும் போராடிய எங்கள் கொள்கைத் தலைவர், விடுதலைப் போராளி, மக்கள் சேவகர் அஞ்சலை அம்மாள் அவர்களின் நினைவு தினத்தையொட்டி, பனையூரில் உள்ள கழகத் தலைமை நிலையச் செயலகத்தில், அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினேன்.
மக்கள் சேவகர் அஞ்சலை அம்மாள் அவர்களின் நினைவு தினத்தில், பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளின் நலன் மற்றும் உரிமைகளோடு, அவர்களின் பாதுகாப்பையும் மீட்டெடுக்க உறுதி ஏற்போம் என்று தெரிவித்துள்ளார்.
Assembly By Election: நாளை மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் 2026: அனைத்து ஏற்பாடுகளும் தயார்
சென்னை பட்டினப்பாக்கம் புதிய தலைமைச் செயலக வழக்கு: வழக்கறிஞர் தாக்கல் செய்த மனு வாபஸ்
தென்தமிழ் தலையங்கம்: Celluloid World to St Geroge Fort..கோட்டையைப் பிடிக்கத் துடிக்கும் கோடம்பாக்கம்
குலுக்கி சர்பத்: தூக்கிப் போட்டு குலுக்கி எடுத்து கிளாஸில் ஊற்றிக் குடிச்சா.. ஆஹா என்ன சுகம்!
தலைமை தேர்தல் ஆணையர் விவகாரம்: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
2026-ஆம் ஆண்டின் மருத்துவத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு: 3 விஞ்ஞானிகளுக்கு விருது!
Evening Snacks Time: டேஸ்ட்டியான சேமியா பால் பாயாசம் செய்து சாப்பிடலாமா?
சென்னையில் புறநகர் மின்சார ரயில் தடம் புரண்டு விபத்து: ரயில் சேவைகள் பாதிப்பு!
எனக்கு ஆசை.. உனக்கு ஆசை.. உன்னை நான் நேசிப்பதும்.. என்னை நீ நேசிப்பதும்!
{{comments.comment}}