சென்னை: பட்ஜெட் தொடர்பான முன்னோட்ட வீடியோவில் ரூபாய்க்கான குறியீட்டிற்கு ₹ பதில், தமிழ் எழுத்தான ரூ வை தமிழக முதல்வர் பயன்படுத்தியுள்ளார். இதற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
ரூபாய் என்பதை குறிப்பிட கடந்த 2010ம் ஆண்டு முதல் தேவநாகிரி எழுத்துரு ₹ பயன்படுத்தப்பட்டு வருகிறது. நாடு முழுவதும் இந்த குறியீடு புழக்கத்திலும் இருந்து வருகிறது. இந்நிலையில், 2025-26ம் நிதி ஆண்டிற்கான தமிழ்நாடு பட்ஜெட் நாளை தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், தமிழ்நாடு பட்ஜெட்டில் ரூபாயைக் குறிக்கும் தேவநாகரி எழுத்துருவான ₹ குறியீட்டிற்கு பதில், தமிழ் எழுத்தான ரூ வை முன்னிலைப்படுத்தும் வகையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவில் வெளியான குறியீடு மாற்றத்திற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடும் எதிர்ப்பு தெரிவித்து எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில், 2025-26ம் ஆண்டுக்கான திமுக அரசின் பட்ஜெட்டில், தமிழரால் வடிவமைக்கப்பட்ட ரூபாய் குறியீடு மாற்றப்பட்டு உள்ளது. இந்த குறியீடு, நாடு முழுவதும் ஏற்றுக் கொள்ளப்பட்டு ரூபாய் நோட்டிலும் இடம் பெற்றுள்ளது. இந்த சின்னத்தை வடிவமைத்தது உதயகுமார். இவர் திமுக முன்னாள் எம்.எல்.ஏ., வின் மகன் ஆவார் என்று தெரிவித்துள்ளார்.
உங்களுடன் ஸ்டாலின் திட்டம்.. இப்படித்தான் செய்யப் போகிறோம்.. அமுதா ஐஏஎஸ் விளக்கம்!
தமிழக அரசின் செய்தித் தொடர்பாளர்களாக மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்!
எம்ஜிஆர் சிவாஜி மட்டும் இல்லை.. விஜய் சூர்யாவுடனும் கலக்கிய சரோஜாதேவி!
எம்ஜிஆர் - சிவாஜி கணேசன்- ஜெமினி கணேசன்.. 3 ஸ்டார்களுடன் போட்டி போட்டு நடித்தவர் சரோஜா தேவி!
Sarojadevi is no more: "கன்னடத்து பைங்கிளி" நடிகை சரோஜா தேவி காலமானார்!
தமிழக வெற்றிக் கழகம்.. நடிகர் விஜய்யின் அரசியல் பாதை சரியாக போகிறதா?
"Crush" என்னும் ஆங்கில வார்த்தையின் அர்த்தம் புரியாத பருவத்தில் நாங்கள் ரசித்த சரோஜாதேவி!
சூதாட்ட நிறுவனங்கள் மீது திமுக அரசுக்கு பாசமா? டாக்டர் அன்புமணி ராமதாஸ் கேள்வி
காதல் கணவரைப் பிரிந்தார் சாய்னா நேவால்.. தனித் தனிப் பாதையில் செல்ல முடிவு என்று தகவல்!
{{comments.comment}}