ஆடு மாடுகளோடு நிம்மதியாக விவசாயம் பார்க்கிறேன்.. இப்படியே இருக்கப் போறேன்.. அண்ணாமலை

May 16, 2025,05:46 PM IST

திருவண்ணாமலை: ஆடு மாடுகளோடு நிம்மதியாக விவசாயம் பார்க்கின்றேன். புத்தகங்கள் படிக்க நிறைய நேரம் கிடைக்கிறது. வாழ்க்கையில் நிம்மதியாக இருக்கிறேன். இதிலேயே பயணிக்க வேண்டும் என விரும்புகிறேன் என்று முன்னாள் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.


பாஜக மாநில தலைவராக பெறுப்பேற்றதில் இருந்து தீவிரமாக கட்சி பணியாற்றியவர் அண்ணாமலை. இவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் பாஜக மாநில தலைவர் என்ற பெறுப்பில் இருந்து நீக்கம் செய்யப்பட்டார். அதன்பின்னர் தமிழக பாஜக மாநில தலைவராக நயினார் நாகேந்திரன் போட்டியின்று தேர்வு செய்யப்பட்டார். இதனை அக்கட்சியின் மத்திய உள்துறை அமைச்சர் தெரிவித்திருந்தார்.


இந்நிலையில், இன்று திருவண்ணாமலையில் சாமி தரிசனம் செய்தார் அண்ணாமலை. அதன்பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் பேசுகையில், நான் நன்றாக இருக்கின்றேன். குடும்பம், ஆடு, மாடுகள் உடன் நிம்மதியாக வாழ்ந்து வருகின்றேன். இந்த மாதிரி நேரம் கிடைத்தால் கோவிலுக்கு வருகிறேன். இந்தியா மற்றும் உலகம் முழுவதும் சுற்றுவாய்ப்பு தற்போது கிடைத்துள்ளது. கட்சி செல்லும் பணிகளை செய்கிறேன். தலைவராக இங்கு இருக்க வேண்டும் அங்கு இருக்க வேண்டும் என்பதை தவிர்த்து என்னுடைய வாழ்க்கையில் நிம்மதியாக இருக்கின்றேன். இதே பயணத்தை தொடரவும் விரும்புகின்றேன்.




மக்கள் பணி செய்கின்றேன். வீட்டிற்கு வெளியே மோர் வைத்து கொடுக்கின்றேன். தினமும் 2000 முதல் 3000 பேர் குடிக்கிறார்கள். நிறைய நேரம் கிடைத்து இருக்கிறது. குழந்தைகளோடு நேரம் செலவிடுகின்றேன்.  பெற்றோர்களுடனும் அமர்ந்து பேசுகிறேன். ஒரு தொண்டனாக பிரதமர் மோடிக்கு பணி செய்ய வேண்டும் என்பது எனது ஆசை. தமிழகத்தில் மாற்றம் வேண்டும் என்று நினைக்கக் கூடியவன். அதற்கான காலம் வரும். ஒரு தொண்டனாக பணி செய்து கொண்டு இருக்கின்றேன்.


ஓபிஎஸ்  அவர்களின் பத்திரிக்கையாளர் சந்திப்பை பார்த்தேன். அதற்கு எங்கள்  தலைவர்கள் பதில் சொல்வார்கள். எல்லோரும் எங்களுடன் தான் இருக்கிறார்கள். யாரும் பிரிந்து போகவில்லை. நமது கூட்டணி வலுவாக இருக்கிறது. நான் இன்று ஒரு தொண்டனாக பணி செய்து கொண்டு இருக்கின்றேன். தொண்டாக ஒதுங்கி நின்று பார்க்கின்றேன். கூட்டணி குறித்து எங்கள் தலைவர்கள் பேசுவார்கள். தமிழக முதல்வரை ஒரு சாமானியராக இருந்து கிரிட்டிசைஸ் பண்ண முடியும். எனக்கு கருத்து உரிமை இருக்கிறது. ஓபிஎஸ் அண்ணா எப்போதும் எங்களுடன் தான் இருக்கிறார். அவர் எங்களை விட்டு பிரிந்து போகவில்லை. பாரத பிதமர் நரேந்திர மோடி ஐயாவின் இதயத்தில் ஓபிஎஸ் அவர்களுக்கு தனியிடம் உண்டு. அதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

2026 தேர்தலுக்கு.. தவெக கேட்கப் போகும் சின்னம் என்னாவா இருக்கும்.. எதிர்பார்ப்பில் தொண்டர்கள்!

news

Roston Chase.. வெஸ்ட் இண்டீஸ் Test அணிக்கு புதிய கேப்டன்.. 2 வருட கேப்புக்குப் பிறகு விளையாடுகிறார்!

news

ஆபரேஷன் சிந்தூர் அதிரடி எதிரொலி.. பாதுகாப்புத்துறை பட்ஜெட் ரூ.50,000 கோடி அதிகரிக்க வாய்ப்பு

news

ஜூலை 4 முதல் 10ம் தேதி வரை துணைத்தேர்வுகள் நடைபெறும்: அரசுத் தேர்வுகள் இயக்கம்

news

இது வெறும் டிரெய்லர் தான்... ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை... மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்!

news

Maman movie: ஏண்டா தம்பிகளா, மண் சோறு சாப்பிட்டா எப்படிடா படம் ஓடும்.. நடிகர் சூரி ஆதங்கம்!

news

நிதி ஆயோக் கூட்டம்: மே 24 முதல்வர் மு.க.ஸ்டாலின் டெல்லி செல்லவுள்ளதாக தகவல்!

news

ஆடு மாடுகளோடு நிம்மதியாக விவசாயம் பார்க்கிறேன்.. இப்படியே இருக்கப் போறேன்.. அண்ணாமலை

news

தமிழகத்தில்.. பள்ளிகள் திறப்பு எப்போது..? தேதி அறிவித்த அமைச்சர் அன்பில் மகேஷ்!

அதிகம் பார்க்கும் செய்திகள்