- ஆனந்தி சத்யராஜ்
மஸ்கட்: எங்கும் நிறைந்திருக்கும் எம்பெருமான் முருகனின் அருளாசியுடன், முருகன் வழிபாடு மன்றம் முன்னெடுத்த தைப்பூச ஆன்மீகப் பெருவிழா, கடந்த பிப்ரவரி 20, 2026 அன்று ஓமான் தலைநகர் மஸ்கட் கிருஷ்ணர் கோவில் மண்டபத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
அயல்நாட்டில் வசித்தாலும், நம் மண்ணின் மணம் மாறாமல், பக்திப் பெருக்குடன் அரங்கேறிய இந்த நிகழ்வு ஒவ்வொரு பக்தரின் மனதிலும் நீங்காத இடம்பிடித்தது.

பக்தி மணம் கமழ விடியற்காலை காப்பு கட்டி பக்தர்கள் பரவசத்துடன் எடுத்த காவடி மற்றும் 153 பக்தர்கள் உணர்வு பூர்வமாக பால் காவடி சுமந்து, அவர்கள் கையாலே தன் குடும்பத்தினருடன் இறைவனுக்கு செலுத்தியது மிகவும் நெகிழ்வான தருணம். பெருங் கூட்டம் காரணமாக இப்போது எல்லாம் நமது சொந்த ஊரில் கூட இதுபோல பொறுமையாக குடும்பத்தினருடன் பங்குபெற முடியாது. ஆனால் அயல்நாட்டில் உங்கள் மூலம் நடப்பது பெரும் நிறைவாக உள்ளது .
செவிகளுக்கு விருந்தளித்த திருமதி சுசித்ரா பாலசுப்பிரமணியம் மற்றும் குழுவினரும் நிகழ்ச்சிக்கு சரியான தேர்வு. இரண்டு மணிநேர இசைக்கச்சேரி எனக்கு ஒரு மார்கழி மகா உற்சவத்தில் அமர்ந்திருப்பது போல் இருந்தது.
சுருதி சுத்தமாக பல கமகங்களுடன் விநாயகனே என தொடங்கி, முருகன், ஈசன், அம்பிகை, ஐயப்பன், திருமால் என்று அனைத்து தெய்வங்களின் பாடல்களுடன், நாம் தமிழர் கட்சி கொடிப் பாடலையும் கணீர் குரலுடன் பாடியது மெய்சிலிர்க்க வைத்தது.

முறையான விநாயகர் வழிபாட்டில் தொடங்கி, திருமஞ்சனம் மற்றும் வேல் வழிபாடுகள் என அனைத்தும் திருவாசகம், திருப்புகழ் மற்றும் தமிழ் மந்திரங்களுடன் மிகவும் நேர்த்தியாக செய்த இரு ஓதுவார் பெருமக்களும் போற்றுதலுக்கு உரியவர்கள். அங்கு கூடியிருந்த குழந்தைகள், பெரியவர்கள் என அனைவரும் ஈடுபாட்டுடன் கலந்து கொள்ளும் அளவிற்கு மிகச் சிறப்பாக நடத்தினார்கள்.
இறுதியாக அரங்கையே அதிரவிட்ட பறை இசையுடன் நடந்த தேரோட்டம் சென்ற ஆண்டு போல் இவ்வாண்டும் வெகு விமரிசையாக நடந்தேறியது. அங்கு கேட்ட அரோகரா சத்தம் அனைவரையும் நம் மண்ணில் உள்ள கோயில் தேரோட்டத்தில் பங்கு பெறுவது போல் உணர வைத்தது.
பக்தி பெருக்குடன் எல்லாம் மன நிறைவுடன் முடிய, அங்கு கூடியிருந்த அனைத்து பக்தர்களின் வயிறும் நிறையும் படி அருட்சோறு போதும் என்று சொல்லும் அளவிற்கு தாரளமாக வழங்கப்பட்டது. அந்த பெருங் கூட்டத்தில் வரிசையில் நின்று உணவு வாங்கியது உண்மையில் எதையோ சாதித்து போல் இருந்தது.
பெரியவர்களுக்கு இது சற்று சிரமம் தான், ஆனால் அங்கிருந்த சிறுவர்கள் தங்கள் நண்பர்களுடன் முகம் முழுக்க புன்னகையுடன் அவர்கள் வெற்றியைப் பற்றி பேசிக் கொண்டே உண்பதை கண்டு மகிழ்ந்தோம்.
இவ்வளவு வேலை சுமை நடுவிலும் மறக்காமல் உரியவர்களை மேடையேற்றி கௌரவித்தது எப்போதும் போல் குழுவின் தனிச்சிறப்பு.

இத்தகைய தெய்வீக நிகழ்வை ஒருங்கிணைத்து நடத்திய இக்குழுவில் உள்ள அனைவருக்கும் கந்தன் அருள் என்றென்றும் கிடைக்கட்டும்.
இதை தொடர்ந்து எல்லா ஆண்டும் இன்னும் பல நன் கொடையாளர்கள் ஆதரவுடன் யாருக்கும் எந்த குறையும் இல்லாமல் வெகு சிறப்பாக முருகப் பெருவிழா நடக்க வேண்டும் என்று அனைத்து பக்தர்களின் சார்பாக இறைவனை மனதார வேண்டுகிறேன்.
ஓர் நதி ஓர் பௌர்ணமி ஓர் ஓடம்!
Idli Podi: இட்லி பொடி.. சுவையான பாரம்பரிய முறையில் எப்படி தயாரிக்கலாம்?
நிழல் மறைந்த நாள்.. தேவகோட்டை மாணவர்கள் பொதுமக்களுக்கு ஏற்படுத்திய விழிப்புணர்வு!
வயதானாலும் நாங்களும் நல்லுள்ளங்களே!
Kalaiarasi Poem: ஆசை !
சிங்கப்பூரில் சிறப்பாக நடந்தேறிய பொழில் இலக்கியச் சங்கமம் 2026
ஒரு பக்க கட்டுரை.. முயற்சியின் மந்திரம்!
உலகக் கலை தினம்... World Art Day...!
மதுரை கிழவியை பெருமை செய்ய மண்ணை சுமந்தாய்!
{{comments.comment}}