சென்னை: லியோ படத்தில் நான் ரெடி தான் என்ற பாடலுக்கு நடனம் ஆடிய 1300 பேருக்கு சம்பளம் கொடுக்கவில்லையாம். இதுதொடர்பாக நடனக் கலைஞர்கள் குமுறல் வெளியிட்டுள்ளனர்.
விஜய், த்ரிஷா, நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் லியோ. இத் திரைப்படம் வெளிவருவதற்கு முன்னரே பல சிக்கல்களில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கிறது. இப்படம் அக்டோபர் 18ம் தேதி வெளிவரும் என்று கூறப்பட்ட நிலையில், தொடந்து சிக்கல் வந்த வண்ணம் இருப்பதினால் குறிப்பிட்ட தேதியில் படம் ரிலீஸ் ஆகுமா? ஆகாதா? என்ற சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
படத்தில் ஆபாச வசனங்கள், வன்முறைக் காட்சிகளை சென்சார் போர்டு நீக்கிய பின்னரும் விஜய் பேசிய டிரெய்லர் டைலாக்கில் கெட்டவார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது என்று சர்ச்சை எழுந்தது. ஆடியோ லான்ச் ரத்து செய்யப்பட்டதற்கும் பல காரணங்கள் கூறப்பட்ட நிலையில் அதுவும் சர்ச்சையில் சிக்கியது. இந்த நிலையில், லியோ படத்திற்கு தற்பொழுது புது சிக்கல் உருவாகி இருக்கிறது.
லியோ படத்தில், நான் ரெடி தான் என்ற பாடலுக்கு நடனம் ஆடிய 1300 பேருக்கு சம்பளம் பாக்கி உள்ளதாகவும், அதுதொடர்பாக ஆதாரத்துடன் நடனக்கலைஞர்கள் புகார் அளித்துள்ளதாகவும் தற்பொழுது புது சர்ச்சை கிளம்பி நெட்டிசன்கள் மத்தியில் பரபரப்பாகி வருகிறது.
உச்ச நடிகர்கள் படம் என்றாலே சின்னப் பிரச்சினை கூட பூதாகரமாகத்தான் பார்க்கப்படும். ஆனால் லியோ தொடர்பாக அடுத்தடுத்து சர்ச்சை வெத்து வருவதால் ரசிகர்கள் சற்றே அப்செட் ஆகியுள்ளனர். ஆனால் அதையும் தாண்டி படம் பிரமாண்ட வெற்றி பெறும் என்பதையும் அழுத்தம் திருத்தமாக ரசிகர்கள் சொல்கிறார்கள்.
மக்களின் வாழ்வாதாரமாக இருக்கும்.. சிந்து நதியை தடுத்து நிறுத்தும் முடிவை மாற்றுங்கள்.. சீமான்
வீடு கட்டும் ஜல்லி, எம் சாண்ட் விலை உயர்வால் கட்டுமான செலவு 30% அதிகரிப்பு!
கோவை வந்த விஜய்க்கு பிரம்மாண்ட வரவேற்பு... தொண்டர்களின் ஆரவாரத்தால் ஸ்தம்பித்தது கோவை!
வலுக்கட்டாயமாக கடன் வசூலித்தால் 3ஆண்டு வரை சிறை.. சட்டசபையில் புதிய மசோதா தாக்கல்..!
நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு!
கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி
India Vs Pakistan: இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?
ஆம்... மகளிருக்கு உரிமை வேண்டும்..!!
{{comments.comment}}