சென்னை: தென்மேற்கு வங்க கடலில் நாளை ரெமல் புயல் உருவாக உள்ள நிலையில், அரபிக்கடலில் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் கோடை மழை தீவிரமடைந்த நிலையில் பல்வேறு மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் தமிழகத்தில் உள்ள ஏரி குளம் அணைகள் வேகமாக நிரம்பி வருகிறது.

இந்த நிலையில், தென்மேற்கு வங்க கடல் பகுதியில் கடந்த 22ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக நேற்று மாறிய நிலையில், இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இதனைதொடர்ந்து இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை புயலாக உருவாகும். இந்த புயலுக்கு ரெமல் என பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இந்தப் புயல் வரும் ஞாயிற்றுக்கிழமை வடகிழக்கு திசையை நோக்கி நகர்ந்து வங்கதேசம் மற்றும் அதனை ஒட்டி உள்ள மேற்கு வங்க கடற்கரையில் தீவிர புயலாகவே கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இன்று கனமழை:
நெல்லை, கன்னியாகுமரி, தென்காசி, தேனி, திண்டுக்கல், ஆகிய ஐந்து மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும். இன்று 88 கிலோமீட்டர் வேகத்தில் வடகிழக்கு நோக்கி நகரும் இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேலும் வலுப்பெற்று காற்றின் வேகம் மணிக்கு 117 கிலோ மீட்டர் வேகத்திலும் வீச கூடும். இது தவிர புதுச்சேரியிலும் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் அறிவித்துள்ளது.
இந்த நிலையில் தென்கிழக்கு அரபிக் கடல் பகுதியில் கேரளா கடற்கரை ஒட்டி ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேலும் தீவிரமடையும் சாத்தியக்கூறுகள் இல்லை என கூறப்படுகிறது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெறுமா.. அல்லது கலைந்து செல்லுமா.. என்ற தகவல் இதுவரை வெளியாகவில்லை.
2026 சட்டசபைத் தேர்தலில் புதுச்சேரி மாநிலத்திலும் தவெக கொடி பறக்கும்...விஜய் அதிரடி பேச்சு
நாகப்பட்டினத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்!
சென்னையில் நாளை கூடுகிறது.. அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு.. முக்கிய முடிவு எடுக்கப்படுமா?
எனது கையெழுத்தை போலியாக போட்டுள்ளனர்: அன்புமணி மீது ராமதாஸ் பரபரப்பு குற்றச்சாட்டு!
TVK Vijay.. விஜய்யின் தமிழ்நாடு பிரச்சார பேச்சு Vs புதுச்சேரி பேச்சு... எது பெஸ்ட்?
லக்னோவில் நடந்த ஸ்கவுட் நிகழ்ச்சியில்.. ஜொலித்த தமிழ்நாடு மாணவி!
Most Searched Athlete: அதிரடி காட்டிய இந்திய வீரர் அபிஷேக் ஷர்மா.. பாகிஸ்தானில் காட்டிய எழுச்சி
எடப்பாடியார் அதிரடி.. கேஏ செங்கோட்டையனின் அண்ணன் மகனை இழுத்த அதிமுக!
முதல் மாதத்தில் உடையவனே தஞ்சம்.. பத்தாம் மாதத்தில் அழகான குழந்தை.. தாய்மையின் பேரழகு!
{{comments.comment}}