புதிய ஆப்பிள் ஐபோன் வாங்க நீண்ட வரிசையில் காத்திருந்த வாடிக்கையாளர்கள்!

Sep 19, 2025,03:20 PM IST
டெல்லி: இன்று ஆப்பிள் ஐபோன் 17 அறிமுகம்   அறிமுகமானது. இதனை வாங்க டெல்லி மற்றும் மும்பையில் மக்கள் நள்ளிரவு 12 மணி முதல் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் என்றாலே மக்கள் மத்தியில் ஒரு ஈர்ப்பு அன்று முதல் இன்று வரை இருந்து வருகிறது. எப்பொழுது ஆப்பிள் நிறுவனம் புதிய போனை வெளியிட்டாலும் அதனை வரிசையில் நின்றும், முன்பதிவு செய்தும் ஆப்பிள் பிரியர்கள் வாங்கி வருகின்றனர். அந்த வகையில், நீண்ட இடை வேளைக்குப் பிறகு ஆப்பிள் நிறுவனம் தனது புதிய ஐபோனை 17 மாடலை அறிமுகம் செய்துள்ளது.



இந்த போனில் எந்தவொரு ஆப்பிள் ஸ்மார்ட் போனிலும் இல்லாத வகையில் மிகக்குறைந்த தடிமனில் இந்த போன் தயாரிக்கப்பட்டுள்ளது. பல்வேறு சிறப்பு அம்சங்களைக் கொண்ட ஐபோன் 17ன் விலை ரூ.82,900 முதல் ஆரம்பமாகிறது. ஐபோன் 17 ப்ரோவின் விலை ரூ.1,49,900 முதல் ஆரம்பமாகிறது. ஐபோன் 17 மிக மெல்லிய  ஸ்லாப்-ஸ்டைல் போனாகும். ஐபோன் 17 ஏர் ஸ்பேஸ் பிளாக், கிளொட் ஒயிட், லைட் கோல்ட், ஸ்கை ப்ளூ என்ற 4 கலர்களில் கிடைக்கின்றன.

இந்த போன் வருவதற்கு முன்போ, பலரும் முன் பதிவு செய்திருந்தனர். இன்று விற்பனைக்கு வரும் இந்த போனை வாங்குவதற்காக ஐபோன் பிரியர்கள் நேற்று இரவு 12 மணி முதல் காத்திருந்தனர். டெல்லி, மும்பை, பெங்களூரு உள்ளிட்ட நகரங்களில் உள்ள ஆப்பிள் ஸ்டோர்களில் மக்கள் வரிசையில்  காத்திருந்து முன்டியடித்து வாங்கிச்செல்கின்றனர். புதிய ஐபோன் மாடலை முதலில் பெற வேண்டும் என்ற வாடிக்கையாளர்களின் ஆர்வமே இந்த நீண்ட வரிசைக்கு காரணம் என்று வாடிக்கையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

ரோபோ சங்கரோட மறைவு வேதனையா இருக்கு.. தவெக தலைவர் விஜய் இரங்கல்

news

மத்திய அரசு ஊழியர்களுக்கு டபுள் சந்தோஷம்.. டிஏ உயர்வு மற்றும் 8வது ஊதியக் குழு!

news

வானிலை முன்னறிவிப்பு: தமிழகத்தில் 2 நாட்களுக்கு இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு!

news

ஒருவர் மயங்கி விழுந்தால் உடனடியாக என்ன செய்யணும்னு உங்களுக்குத் தெரியுமா?

news

பாமக.,வின் மாம்பழச் சின்னம்...அன்புமணிக்கு கிடைத்தது எப்படி? வெளியான பகீர் தகவல்

news

விஜய் வாகனத்தைப் பின் தொடர்ந்து வரக் கூடாது.. மரங்களில் ஏறக் கூடாது.. தவெக கோரிக்கை

news

புதிய ஆப்பிள் ஐபோன் வாங்க நீண்ட வரிசையில் காத்திருந்த வாடிக்கையாளர்கள்!

news

மர்ம நபரால் பரபரப்பு... தவெக தலைவர் விஜய் வீட்டில் வெடிகுண்டு சோதனை!

news

நாகையில் நாளை விஜய் பிரச்சாரம் செய்யவுள்ள இடம் மாற்றம்

அதிகம் பார்க்கும் செய்திகள்