- வே.ஜெயந்தி
தன்னைத் தானே
தூக்கிப் பேசான் தமிழன்,
தாழ்மை தாங்கி
தலைநிமிர்வான் தமிழன்.
இனிய மொழி பேசி
இரக்கம் விதைப்பான்,
இனிமை நெஞ்சில்
இயல்பு பதிப்பான்.
பண்பால் பெருமை,
பாசத்தால் புகழ்,
போராடும் வேளையில்
புயலாய் எழும் விழி நெருப்பு!
செம்மை சிந்தை,
சேர்ந்த மனம்,
செல்வம் அல்ல
பண்பே செல்வம்!
அம்மா மொழியை
அமுதெனக் காக்கும்,
அருமை மரபை
ஆன்மாவில் தாங்கும்.
உலகம் எங்கும்
உழைப்பால் உயர்ந்தாலும்,
உறுதி முழக்கமாய்
“உயிரே தமிழ்!” என ஒலிக்கும் தமிழன்!
(வே.ஜெயந்தி, பட்டதாரி ஆசிரியர், செங்கல்பட்டு மாவட்டம்)
70 வயதிற்கு மேற்பட்ட நிர்வாகிகளுக்கு பதவி கிடையாது: திமுக தலைமை அதிரடி
Short Story: "யாரும்மா அது? ஞாயிற்றுக்கிழமைல!
சிந்தனைச் சிதறல்.. நமக்கு மறுக்கப்பட்டது.. அவர்களுக்கு வழங்கப்படுகிறது!
Egypt Tour Diary: பேசும் சிலை!
தினம் தினம் கொண்டாட்டமா?
கொசுவின் அங்கலாய்ப்பு!
மறைந்தாலும் நன்று...!
உனைப் போற்றி வாழ்கின்ற என்னை வாழ வைக்கிறாய்!
வட்ட நிலா பொட்டுக்காரி வாழைப்பூக் கொண்டக்காரி
{{comments.comment}}