ஆரூத்ரா தரிசனம் 2026.. மரகத நடராஜர் தரிசனம் குறித்து அறிவோம்!

Jan 03, 2026,02:35 PM IST

- ஸ்வர்ணலட்சுமி


விசுவாவசு வருடம் 20 26 ஜனவரி 3 ஆம் தேதி சனிக்கிழமை மார்கழி மாதம் 19ஆம் நாள் ஆருத்ரா தரிசனம் அனுஷ்டிக்கப்படுகிறது. மார்கழி மாதம் வரும் சிவபெருமானுக்குரிய திருவாதிரை நட்சத்திரம் அன்று நடராஜப் பெருமானுக்கு நடத்தப்படும் சிறப்பு அபிஷேக, ஆராதனைகளை "ஆருத்ரா தரிசனம்" என்று அழைப்பார்கள். ஒவ்வொரு வருடமும் நடராஜப் பெருமானுக்கு ஆறு முறை மட்டுமே திருமஞ்சனம் நடத்தப்படுகிறது. அவற்றில் மிக முக்கியமான திருநாள் அனைத்து சிவாலயங்களிலும் நடத்தப்படும் ஆருத்ரா தரிசனம் ஆகும்.


ராமநாதபுரம் மாவட்டம் திரு உத்தரகோசமங்கை அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற ஒரே கல்லிலால் ஆன மரகத நடராஜர் சிலை அமைந்துள்ளது. இக்கோவிலில் மங்களநாதர் சுவாமி சமேத மங்களேஸ்வரி தாயார் உடன் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.மூர்த்தி, தீர்த்தம்,ஸ்தலம் எனும்  சிறப்பிற்குரியது இக்கோவில். புராணங்களில் இலந்தை மரத்தின் அடியில் சுயம்புவாய் தோன்றியவர் இக்கோவிலில் அமைந்துள்ள மங்களநாதர் என்று கூறப்பட்டுள்ளது. இங்கு அருள்பாளிக்கும் அம்மன் மங்களநாயகி பெண்களுக்கு மாங்கல்ய பாக்கியம் தந்து அருள் பாலிக்கிறார்.


உலகின் முதல் சிவன் கோவில் என்றும் உலகிலேயே மிகப்பெரிய மரகத நடராஜர் இருக்கும் கோவில் என்றும் சிறப்பு வாய்ந்தது திரு உத்திரகோசமங்கை திருத்தலத்தில் அமைந்திருக்கும் மங்களநாதர் திருக்கோவில். நடராஜர் பெருமான் சிதம்பரத்தில் அம்பலத்தில் ஆடியதாகவும்,மதுரையில் கால் மாறி ஆடியதாகவும் திரு உத்தரகோசமங்கையில் அறையில் ஆடியதாகவும் வரலாறுகள் கூறுகின்றன. பிற கோவில்களில் நடராஜர் சிலைகள் கற்சிலை, பஞ்சலோக சிலைகளையே காண முடியும்.ஆனால் இங்கு பச்சை மரகத கல்லால் உருவாக்கப்பட்ட சிலை இருப்பது இக்கோவிலின் சிறப்பம்சம் ஆகும்.




இத்திருத்தலத்தில் மார்கழி மாதம் ஆருத்ரா தரிசனம் மிகச் சிறப்பான முறையில் நடைபெறுகிறது. வருடம் முழுவதும் அனைத்து நாட்களும் சந்தன காப்புடன் தரிசனம் தந்து அருள் பாலிக்கும்  நடராஜ பெருமான் ஆருத்ரா தரிசனம் அன்று மட்டுமே பச்சை மரகத திருமேனியாக தரிசனம் தந்து அருள்பாலிக்கிறார். ராமநாதபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோவிலில்  ஆருத்ரா தரிசன நாளில், இக்கோவிலின் வடக்கு பகுதியில் தனி சன்னதியில் அமைந்துள்ள, அபூர்வ பச்சை மரகத நடராஜரை தரிசனம் செய்ய ஏராளமான பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.


இந்த ஆண்டு ஆருத்ரா தரிசனம் ஜனவரி 03ஆம் தேதி சனிக்கிழமை நடைபெறுவதை தொடர்ந்து, ஜனவரி 2ஆம் தேதி காலை 8:00 மணி முதல் 9:00 மணிக்குள் மரகத நடராஜரின் சந்தனம்  படி களையப்பட்டு மரகத திருமேனியாக காட்சி தருகிறார். பின்னர் அன்று நள்ளிரவு 12 மணி முதல் ஜனவரி 3ஆம் தேதி அதிகாலை 2 மணி வரை நடராஜருக்கு 32 வகையான சிறப்பு அபிஷேகங்கள, அலங்கார தீபாராதனைகள்  நடைபெறுகிறது.


மீண்டும் சந்தனம் சாற்றப்பட்டு ஜனவரி 3ஆம் தேதி அன்று அதிகாலை 4.30 மணி முதல் 5 மணிக்குள் தீபாராதனை நடைபெறும். நடராஜ பெருமானின் சிலைக்கு ஒலி, ஒளியால் பாதிப்பு ஏற்படக்கூடாது என்பதற்காக ஆண்டு முழுவதும் சந்தனத்தால் காப்பிடப்பட்ட அலங்காரத்தில் தரிசனம் தருகிறார். ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே  ஆருத்ரா தரிசன விழாவின்போது சந்தனம் களையப்பட்டு புதிய சந்தன காப்பு சாற்றப்படுகிறது.


தமிழகம் மட்டுமல்லாமல் வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான ஆன்மீக பக்தர்கள் விடிய விடிய இரவு முழுவதும் நடராஜப்பெருமானை அரோகரா கோஷத்துடன் தரிசனம் செய்கின்றனர். நடராஜர் பெருமான் அருளால்  அனைவரும்  அனைத்து வளங்களும், நலங்களும் பெற்று வாழ்வோமாக. மேலும் இது போன்ற சுவாரசியமான ஆன்மீக தகவல்களுக்கு தொடர்ந்து இணைந்திருங்கள் தென் தமிழுடன்.எழுதியவர் உங்கள்  ஸ்வர்ணலட்சுமி.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

கோவை கொடூரம்.. கடுமையான நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு உத்தரவு.. முதல்வர் விஜய்

news

அரசுப் பள்ளிகளில் கணினி அறிவியல் பாடம்: அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையனிடம் கோரிக்கை!

news

South West Monsoon: தீவிரமடையும் தென்மேற்கு பருவமழை: சென்னையில் சட்டென மாறிய வானிலை

news

Chettinadu Recipe: தேன் போல தித்திக்கும்.. மாம்பழ குல்ஃபி ஐஸ்!

news

கோவை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்.. அதிர்ச்சியில் தமிழ்நாடு.. அனைத்துக் கட்சிகளும் கடும் கண்டனம்

news

தவெக அரசில் சேர முடியாமல் போச்சே.. தனிச் சின்னத்தில் போட்டியிடாததால் வருந்தும் கட்சிகள்?

news

மே 23 ஆமைகள் தினம்.. மாணவர்களுக்கான நீதி கதை.. "கடைசியாக வந்த கோமதி"

news

Kalaimani: சிந்தனை.. எப்போது வெற்றி கிட்டும்!

news

Tamil Poem by Sasikala Viswanathan: அவலம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்