சென்னை: விஜய் நடிப்பில் வெளியாகி பட்டையைக் கிளப்பிக் கொண்டுள்ள லியோ படம் நான்கு நாட்களில் ரூ. 400 கோடி வசூலை உலகம் முழுவதும் ஈட்டியுள்ளதாம்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் முற்றிலும் வித்தியாசமான வேடத்தில் விஜய் நடித்துள்ள படம்தான் லியோ. படத்திற்கு எதிராக பலரும் விமர்சனங்கள் கொடுத்தாலும் கூட அதையும் தாண்டி ரசிகர்களைக் கவர்ந்து விட்டது லியோ. குறிப்பாக தெலுங்கில் இப்படத்தை விழுந்து விழுந்து மக்கள் ரசிக்கிறார்கள்.
விஜய்யின் நடிப்பை பலரும் பாராட்டுகிறார்கள். மேலும் விஜய்யை வித்தியாசமான முறையில் காட்டியுள்ளதாக லோகேஷுக்கும் பாராட்டுகள் குவிகின்றன. ஏற்கனவே வசூலில் ஆந்திரா, தெலங்கானா, கேரளா, கர்நாடகாவில் சாதனை படைத்துள்ள லியோ, தமிழ்நாட்டிலும் தொடர்ந்து அரங்கு நிறைந்த காட்சிகளுடன் ஓடிக் கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் லியோ படம் வெளியாகி நான்கு நாட்களில் ரூ. 400 கோடி வசூலைத் தாண்டியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மேலும் முதல் முறையாக காம்ஸ்கோர் தளத்திலும் லியோ படம் இடம் பிடித்து புதிய சாதனை படைத்துள்ளது. காம்ஸ்கோர் பட்டியலில் 3வது இடத்தில் லியோ உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
காம்ஸ்கோர் பட்டியலில் குறிப்பிட்டுள்ளபடி பார்த்தால் உலகம் முழுவதும் மொத்தம் 48.5 மில்லியன் வசூலை செய்துள்ளது லியோ. அதாவது இந்திய மதிப்பில் இது ரூ. 400 கோடியாகும். காம்ஸ்கோரின் டாப் 10 படங்கள் பட்டியலில் இந்தியாவிலிருந்து லியோ மட்டுமே இடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஜெம் கிரானைட் வீரமணி வழக்கு: அடுத்தடுத்து சிக்கும் நபர்கள்... தீவிரமடையும் விசாரணை
பிரே பண்ணிட்டு சாப்பிடுவோமா?.. நீட்டிக்கப்பட்ட காலை உணவுத் திட்டம்.. தொடங்கி வைத்தார் முதல்வர் விஜய்
திமுக.,வுக்கும் ஜெம் கிரானைட்ஸ் வீரமணிக்கும் தொடர்பு இல்லை: முன்னாள் அமைச்சர் ரகுபதி
அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் "கை சுத்தமில்லை"...கோர்ட்டில் மு.க.ஸ்டாலின் பதில் மனு தாக்கல்
ஆசிய விளையாட்டு போட்டி 2026: இந்திய மகளிர் கிரிக்கெட் அணி தங்கப் பதக்கம் வென்று சாதனை
Short story by Joseph Samraj: செதுக்குமுத்து!
ஜப்பானுக்கு எதிரான டி20 போட்டி: 2 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி த்ரில் வெற்றி
சொத்துக்குவிப்பு வழக்கு: முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வத்தின் மனு தள்ளுபடி
போலி நம்பர் பிளேட் காரில் பயணித்தாரா திருமாவளவன்? - இணையத்தில் வைரலாகும் சர்ச்சைச் வீடியோ
{{comments.comment}}