டெல்லி முதல்வர் ரேகா குப்தா.. சொந்தமாக கார் கிடையாது.. ரூ.48 லட்சம் கடன் உள்ளது.. முழு சொத்து விவரம்

Feb 20, 2025,05:55 PM IST

சென்னை: டெல்லி முதல்வராகப் பதவியேற்றுள்ள ரேகா குப்தாவுக்கு சொந்தமாக எந்த வாகனமும் இல்லை. அதேபோல அவரது பெயரில் ரூ. 48 லட்சம் அளவுக்கு கடன் உள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.


பாஜகவைச் சேர்ந்த முதல் முறை எம்எல்ஏவான ரேகா குப்தா இன்று டெல்லியின் புதிய முதல்வராக பதவியேற்றுக்கொண்டார். அவருடன், ஆறு அமைச்சர்களும் பதவியேற்றனர். ஷாலிமார் பாக் தொகுதியிலிருந்து முதல் முறையாக எம்.எல்.ஏ. ஆன ரேகா குப்தா, ராம்லீலா மைதானத்தில் நடைபெற்ற பிரமாண்டமான விழாவில் முதல்வராகப் பதவியேற்றார். 


பாஜக 26 ஆண்டுகளுக்குப் பிறகு டெல்லியில் ஆட்சியை கைப்பற்றியுள்ள நிலையில் ரேகா குப்தா மீதான எதிர்பார்ப்பு அபரிமிதமாக உள்ளது.  இந்த நிலையில் முதல்வராகியுள்ள ரேகா குப்தாவைப் பற்றி அறிய நாடே ஆர்வம் காட்டுகிறது. காரணம் பாஜக எது செய்தாலும் ஏதாவது ஒரு மெகா பிளானை உள்ளடக்கியே செய்யும் என்பதால் ரேகா குப்தாவை வைத்து என்ன மாஜிக் காட்டப் போகிறது என்ற எதிர்பார்ப்பு உள்ளது.




இந்த நிலையில் முதல்வர் ரேகா குப்தாவின் சொத்து மதிப்பு குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளது. 2025 டெல்லி சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு தேர்தல் ஆணையத்திற்கு தாக்கல் செய்யப்பட்ட அவரது அறிக்கையின் படி அவரது சொத்து மதிப்பு விவரம் இதுதான்:


- 2023-24 நிதியாண்டில் அவரது முழு வருமானம் ரூ. 6,92,050

- மொத்த சொத்து மதிப்பு ₹3.55 கோடி (அசையும் சொத்துகள் ரூ. 1.25 கோடி, அசையா சொத்துகள் ரூ. 2.3 கோடி)

- ரேகா குப்தாவுக்கு ரூ. 48.44 லட்சம் கடன் உள்ளது

- ரேகா குப்தாவின் கணவர் மனிஷ் குப்தாவின் வருமானம் ரூ. 97.33 லட்சம்

- ரேகா  குப்தாவிட் சொந்தமாக எந்த வாகனமும் இல்லை, ஆனால் ரூ. 18 லட்சம் மதிப்புள்ள நகைகள் உள்ளன


ரேகா குப்தா டெல்லியின் நான்காவது பெண் முதல்வராக, பாஜகவின் சுஷ்மா ஸ்வராஜ், காங்கிரசின் ஷீலா தீக்ஷித், மற்றும் ஆம்ஆத்மி கட்சியின் அதிஷி ஆகியோருக்குப் பிறகு பதவி ஏற்றுள்ளார்.




- 1996-97: டெல்லி பல்கலைக்கழக மாணவர் சங்க (DUSU) தலைவராக இருந்தவர் ரேகா குப்தா.

- 2007: டெல்லி மாநகராட்சியில் கவுன்சிலராக செயல்பட்டார்.

- 2007-09: மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு குழுவின் தலைவராக அவர் செயல்பட்டுள்ளார்.

- பாஜகவின் இளைஞர் அணியான BJYM-ல் செயலராகவும் தேசிய செயலராகவும் பதவி வகித்துள்ளார் ரேகா குப்தா.

- சட்டசபைத் தேர்தலில் ரேகா குப்தா போட்டியிட்டது இது 3வது முறையாகும். இதற்கு முன்பு 2015 மற்றும் 2020 தேர்தல்களில் ஆம் ஆத்மி கட்சி சார்பில் போட்டியிட்டு வென்ற வந்தனா குமாரியிடம் மோதி தோல்வியுற்றிருந்தார். 3வது முயற்சியில் அவர் வெற்றி பெற்று தற்போது முதல்வரும் ஆகியுள்ளார்.

- தனது 3வது தேர்தலிலும்  வந்தனா குமாரியுடன்தான் மோதினார் ரேகா குப்தா. இதில் 29,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து வெற்றியடைந்தார்.


இளம் வயதிலேயே அரசியலில் நுழைந்ததால், பாஜகவில் ரேகா குப்தா ஒரு நம்பிக்கையான பெண் தலைவராக திகழ்கிறார். டெல்லியில் ஆம் ஆத்மியின் ஆதிக்கம் இன்னும் வலுவாகவே இருக்கும் நிலையில், ரேகா குப்தாவின் ஆட்சி பாஜகவுக்கு ஸ்திரமான அடித்தளத்தை உருவாக்குமா என்ற எதிர்பார்ப்பு உள்ளது. ஆணாதிக்க அரசியலில் பெண் தலைவர்கள் சாதிப்பது என்பது மிகவும் அரிதானதாகவே உள்ளது. அந்த வகையில் ரேகா குப்தாவின் செயல்பாடுகள் பெரும் எதிர்பார்ப்புக்குள்ளாகியுள்ளது. ஒரு முதல்வராக அவர் சிறப்பாக செயல்படும் பட்சத்தில் தேசிய அரசியலிலும் அவருக்கு முக்கியத்துவம் கிடைக்கும் வாய்ப்பும் பிரகாசமாக உள்ளது என்பதில் சந்தேகம் இல்லை.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தமிழ்நாடு.. இன்று முதல் இடி மின்னலுடன் மழையை அனுபவிக்கத் தயாராகுங்கள்.. வெதர்மேன் அப்டேட்!

news

நிமிஷா பிரியா செய்தது மிகப் பெரிய குற்றம்.. மன்னிப்பே கிடையாது.. ஏமன் நாட்டவரின் சகோதரர்

news

நான் எடுப்பது தான் முடிவு... கூட்டணி ஆட்சி இல்லை: எடப்பாடி பழனிசாமி

news

உங்களுடன் ஸ்டாலின் திட்டம் திமுகவின் தோல்வி பயத்தின் அப்பட்டமான வெளிப்பாடு: டாக்டர் அன்புமணி

news

பட தயாரிப்பு நிறுவனம் தொடர்ந்த வழக்கு... ரூ.9 கோடி இழப்பீடு கேட்டு நடிகர் ரவி மோகன் வழக்கு

news

யூடியூபர்களுக்கு வந்த புது சிக்கல்... இனி ஈஸியா காசு பாக்க முடியாது

news

விஜய் போட்ட சூப்பர் ஸ்கெட்ச்.. மதுரை மாநாட்டு தேதி ஸ்பெஷல்.. விஜயகாந்த் பிறந்த நாள் + கல்யாண நாள்!

news

தங்கம் விலை நேற்று மட்டும் இல்லங்க... இன்றும் குறைவு தான்...மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

news

விசிகவின் வாக்குகள் கொத்துக் கொத்தாக திமுக கூட்டணிக்கு விழும்.. திருமாவளவன் உத்தரவாதம்

அதிகம் பார்க்கும் செய்திகள்