நாங்க கணிச்சதெல்லாம் இப்படி பலிக்காம போயிருச்சே... டிவி லைவ் ஷோவில் கதறிய axis my india ஓனர்!

Jun 04, 2024,05:48 PM IST

டில்லி : லோக்சபா தேர்தல் 2024 முடிவுகள் குறித்து தான் கணித்து கூறிய தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் தவறாகி விட்டதை தாங்கிக் கொள்ள முடியாமல் டிவி லைவ் நிகழ்ச்சியில்  axis my india நிறுவனத்தின் உரிமையாளர் பிரதீப் குப்தா கதறி அழுத வீடியோ சோஷியல் மீடியாவில் செம வைரலாகி வருகிறது.


2024ம் ஆண்டிற்கான லோக்சபா இறுதிக் கட்ட தேர்தல் ஜூன் 01ம் தேதி நிறைவடைந்தது. அன்று மாலை தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளை பல்வேறு மீடியாக்கள் வெளியிட்டன. இதில் பெரும்பாலான மீடியாக்கள் பாஜக கூட்டணி 350 க்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெறும் என தெரிவித்தன. axis my india நிறுவனமும் கருத்து கணிப்பு வெளியிட்டது. 




ஆனால் மற்றவர்களை விட இவர்கள் ஒரு படி மேலே போய், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 361 முதல் 401 இடங்களில் வெற்றி பெறும் என தெரிவித்தது. அதே சமயம் இந்தியா கூட்டணி 131 முதல் 166 இடங்களில் மட்டுமே வெற்றி பெறும் என்றும், மற்ற கட்சிகளுக்கு 8 முதல் 20 இடங்கள் மட்டுமே கிடைக்கும் என்றும் தெரிவித்திருந்தது. 


இந்நிலையில் இன்று லோக்சபா தேர்தல் முடிவுகள் வெளியானது. அதில் பாஜக கூட்டணிக்கு 300க்கும் கீழ்தான் சீட்டுகள் கிடைத்துள்ளன. இந்தியா கூட்டணியே 230ஐத் தாண்டி விட்டது. மற்றவர்களுக்கு 18 சீட் வரை கிடைத்துள்ளது. இந்த நிலையில், தேர்தல் முடிவையொட்டி, இந்தியா டுடே டிவி நடத்திய டிவி லைவ் விவாத நிகழ்ச்சி நடத்தப்பட்டது.




இதில் axis my india நிறுவனத்தின் உரிமையாளர் (நிர்வாக இயக்குநர்) பிரதீப் குப்தா கலந்து கொண்டார். அப்போது தேர்தல் முடிவுகள் குறித்து விவரித்து பேசிக் கொண்டிருந்த அவர், தங்களின் நிறுவனத்தின் கணிப்பு பொய்யாகி விட்டது. தாங்கள் கணித்ததை விட மிக குறைவான அளவிலேயே பாஜக கூட்டணி வென்றுள்ளது என கூறி கதறி அழுதார். 


நேரடி நிகழ்ச்சி ஒன்றில் யாரும் எதிர்பாராத வண்ணம் பிரதீப் குப்தா அழுததை நிகழ்ச்சியில் பதற்றத்தை ஏற்படுத்தியது. விவாத நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சக பேச்சாளர்கள் மற்றும் நிகழ்ச்சி தொகுப்பாளர் அவரை சமாதானப்படுத்தி தேற்றிய வீடியோ காட்சிகள் சோஷியல் மீடியாவில் வேகமாக பகிரப்பட்டு வருகின்றன.

சமீபத்திய செய்திகள்

news

எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!

news

கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!

news

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?

news

உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?

news

விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி

news

கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்

news

Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்

news

ருத்ர தாண்டவம் (சிறுகதை)

news

உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!

அதிகம் பார்க்கும் செய்திகள்