சண்டிகர் : அயோத்தி ராமர் கோவிலை போலவே மாதிரி வடிவம் ஒன்று சண்டிகரில் அமைக்கப்பட்டுள்ளது. இதைக் காண மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து செல்கிறார்கள்.
அயோத்தி ராமர் கோவில் ஜனவரி 22ம் தேதி திறக்கப்பட உள்ளதை அனைவரும் ஆர்வமாக எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். ரூ.1800 கோடி செலவில் பிரம்மாண்டமாக கட்டப்பட்ட அயோத்தி ராமர் கோவில் திறக்கப்படுவதற்கு முன்பாகவே அதே மாதிரி ஒரு மாதிரி வடிவத்தை சண்டிகரில் அமைத்து விட்டார்கள்.

அச்சு அசலாக அயோத்தி ராமர் கோடிலை போலவே அமைக்கப்பட்டுள்ள இந்த மாதிரி வடிவத்தை காண லட்சக்கணக்கில் மக்கள் வந்து கொண்டிருக்கிறார்கள். அயோத்தி ராமர் கோவில் மாதிரியை காண வரும் பக்தர்களுக்கு லட்சக்கணக்கில் லட்டுகள் தயார் செய்யப்பட்டு, பிரசாதமாக கொடுக்கப்பட்டு வருகிறது.
சண்டிகரில் அமைக்கப்பட்டுள்ள அயோத்தி ராமர் கோவிலின் மாதிரி வடிவம் 80 அகலமும், 50 அடி உயரமும் கொண்டதாகும். அயோத்தியில் ராமர் கோவில் திறக்கப்படும் ஜனவரி 22ம் தேதியன்று சண்டிகரின் பல்வேறு பகுதிகளில் பலவிதமாக நிகழ்ச்சிகள் நடத்தவும் ஸ்ரீ ராம கிருபா சேவா டிரஸ்ட் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
500 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு பிரம்மாண்ட தீபாவளியை போன்ற ராமர் கோவில் திறப்பு விழாவை கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளது. ஒட்டுமொத்த சண்டிகரும் கூடி ராமரை போற்றி பாடவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாம்.
இன்னும் 10 ஆண்டுகள் கழித்து கூட இந்த விழாவை மக்கள் நினைவில் வைத்துக் கொள்ளும் அளவிற்கு மிக சிறப்பாக கொண்டாட திட்டமிட்டுள்ளார். நாடு முழுவதிலும் உள்ள மக்களும் அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவை கொண்டாட தயாராகி வருகின்றனர். டில்லி, பெங்களூரு, மும்பை உள்ளிட்ட பல்வேறு நகரங்களுசிலும் அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவில் பெரிய அளவில் கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.
தமிழகத்தில் இன்று முதல் நவம்பர் 7ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம்!
ஸ்ரீகாகுளம் கோவில் நிர்வாகம் அனுமதி வாங்கவில்லை...விசாரணைக்கு ஆந்திர முதல்வர் உத்தரவு
அரசின் தோல்விக்காக.. ஆசிரியர்கள் மற்றும் கல்வி அதிகாரிகளை கையேந்த வைப்பது கண்டிக்கத்தக்கது: அன்புமணி
மத்திய அரசு பள்ளிகளில் இந்தியை திணிக்கிறது...சித்தராமைய்யா காட்டம்
திமுகவிடம் இருந்து தமிழ்நாட்டை மீட்போம்.. 2026ல் உண்மையான மக்களாட்சியை அமைப்போம்: தவெக தலைவர் விஜய்
Aadhar update ஆதாரில் இன்று முதல் புதிதாக நடைமுறைக்கு வரும் மாற்றங்கள் பற்றி தெரியுமா?
டென்னிஸ் விளையாட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக ரோஹன் போபண்ணா அறிவிப்பு
ஸ்ரேயாஸ் ஐயர் சிட்னி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்
தமிழ்நாடு என்றால் தமிழ் என்ற அடையாளத்தை தமிழகம் இழந்து வருகிறது: அன்புமணி ராமதாஸ்!
{{comments.comment}}