கராச்சி: பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியை பாபர் ஆசம் ராஜினாமா செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. உலகக் கோப்பைத் தொடரில் பாகிஸ்தான் அணி மோசமாக விளையாடியதால் இந்த முடிவு என்று தகவல்.
மேலும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியமும், பல முன்னாள் வீரர்களும் தனக்கு எதிராக இருப்பதாகவும் பாபர் ஆசம் கருதுகிறார். இதனால் அவர் உலகக் கோப்பைக் கிரிக்கெட் தொடர் முடிந்து தாயகம் திரும்பியதும் தனது பதவியை ராஜினாமா செய்யத் திட்டமிட்டுள்ளாராம்.
நடப்பு உலகக் கோப்பைத் தொடரில் பாகிஸ்தான் அணிக்கான அரை இறுதி வாய்ப்பு மிக மிக மிக மங்கலாகவே உள்ளது. ஏதாவது அதிசயம், அற்புதம், ஆச்சரியம் நடந்தால்தான் அந்த அணியால் அரை இறுதிக்கு முன்னேற முடியும். தொடர்ந்து பல முக்கியப் போட்டிகளில் பாகிஸ்தான் அணி தோல்வியுற்றதால் இந்த நிலை.
இந்த நிலையில் உலகக் கோப்பைத் தொடருக்குப் பின்னர் கேப்டன் பதவியிலிருந்து விலக பாபர் ஆசம் முடிவு செய்திருப்பதாக தெரிகிறது. இதுதொடர்பாக முன்னாள் கிரிக்கெட் அணி தேர்வாளர் ரமீஸ் ராஜா உள்ளிட்ட சிலருடன் அவர் ஆலோசனை நடத்தியுள்ளாராம்.
கொல்கத்தாவில் நடந்த பயிற்சியின்போது அங்கு வந்த ரமீஸ் ராஜாவிடம் இதுகுறித்து பாபர் ஆசம் தீவிர ஆலோசனை நடத்தியுள்ளார். எந்த முடிவாக இருந்தாலும் நாடு திரும்பிய பின்னர் அறிவிக்க பாபர் ஆசம் திட்டமிட்டுள்ளாராம்.
அதேசமயம், உலகக் கோப்பைக்குப் பின்னர் அனைத்து வகையான கிரிக்கெட் அணிகளின் கேப்டன் பொறுப்பிலிருந்தும் பாபர் விலக வேண்டும் என்று அவரது நெருங்கிய நட்பு வட்டாரம் அறிவுறுத்தியுள்ளதாம். வீரராக மட்டும் தொடருமாறும் அவர்கள் அன்புடன் கோரிக்கை வைத்துள்ளனராம்.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் மிகச் சிறந்த வீரர்களில் ஒருவராக பாபர் ஆசம் இருக்கிறார். கடந்த ஒன்றரை வருடமாக அவர் ஐசிசி ஒரு நாள் பேட்டிங் தர வரிசையில் முதலிடத்தில் இருந்து வந்தார் என்பது நினைவிருக்கலாம். மிகச் சிறந்த பேட்ஸ்மேன் ஆன அவர் கேப்டனாக ஜொலிக்கத் தவறி விட்டார். குறிப்பாக உலகக் கோப்பைத் தொடரில் பாகிஸ்தான் அணி பெரும் தடுமாற்றத்தைச் சந்தித்து விட்டது. இதனால் அவர் விமர்சனத்துக்குள்ளாகியுள்ளார்.
இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?
ருத்ர தாண்டவம் (சிறுகதை)
உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?
உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!
கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!
விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி
தங்கம் விலை நேற்று மட்டுமில்லைங்க இன்றும் குறைவு தான்... மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்!
கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்
Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்
{{comments.comment}}