பேட் பாய்ஸ்.. மீண்டும் ரஹ்மானுடன் இணைந்தது மகிழ்ச்சி.. ஞாபகம் இருக்கா பாபு ஆண்டனியை?

Sep 11, 2024,02:43 PM IST

சென்னை: தமிழ் சினிமாவில் என்றும் எவர்கிரீன் ஹீரோவாக இருக்கும் நடிகர் ரகுமானும், பல படங்களில் வில்லனாக நடித்து புகழ்பெற்ற பாபு ஆண்டனியும் மீண்டும் இணைந்து பேட் பாய்ஸ்  என்ற மலையாள திரைப்படத்தில் நடித்துள்ளனர். இப்படம் ஓணம் பண்டிகையை முன்னிட்டு வரும் செப்டம்பர் 13ஆம் தேதி ரிலீசாக உள்ளது.

தென்னிந்திய தமிழ் சினிமாவில் இன்றும் எவர்கிரீன் ஹீரோவாக வலம் வருபவர் நடிகர் ரகுமான். அதேபோல் மலையாள சினிமாவில் வில்லனாக அறிமுகமாகி பின்பு தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் வில்லனாக நடித்து புகழ்பெற்றவர் தான் பாபு ஆண்டனி. இவர் 90களில் மலையாள சினிமாவில் கடல், பாக்ஸர், சந்தா, பரணகூடம், நெப்போலியன், தாதா, ராஜதானி, உள்ளிட்ட பல வெற்றிப் படங்களில் ஒரு கதாநாயகனாக, ஆக்சன் ஹீரோவாக நடித்து ரசிகர்கள் மத்தியில் புகழ்பெற்றவர். பின்னர் ரசிகர்களால் பவர் ஸ்டார் என செல்லமாக அழைக்கப்பட்டார். இன்று வரை மலையாளத்திலும், பிற மொழிகளிலும் வில்லனாகவும் குணச்சித்திர நடிகராகவும் நடித்துக் கொண்டிருக்கிறார். 



நீண்ட இடைவெளிக்குப் பிறகு எவர்கிரீன் ஸ்டார் ரஹ்மானும், பவர் ஸ்டார் பாபு ஆண்டனியும் நேருக்கு நேர் மோதும் மலையாள படம்தான் பேட் பாய்ஸ் திரைப்படம்.  இப்படத்தில் ரகுமான் மெக்காட்டு குளம் ஆன்டப்பன் என்ற கேரக்டரிலும் வெட்டுக்காடு பென்ஷன் என்ற கேரக்டரில் பாபு ஆண்டனியும் நடித்துள்ளனர். இப்படத்தை ஓமர் லூலூ இயக்கி உள்ளார். இப்படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் ரிலீஸ் ஆகி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை தூண்டியது. இதனைத் தொடர்ந்து பேட் பாய்ஸ் படம் ஓணத்தை முன்னிட்டு வரும் செப்டம்பர் 13ஆம் தேதி வெளிவர தயாராக உள்ளது. 

இந்த நிலையில் ரஹ்மானும் பாபு ஆண்டனியும் ஒன்று சேர்ந்து நடிப்பது மிகவும் சந்தோஷம் அளிப்பதாக கூறி பழைய நினைவுகளை பகிர்ந்து உள்ளார் பாபு ஆண்டனி. அதில் அவர் கூறியுள்ளதாவது:

எண்பதுகளில் நான் சென்னையில் அலைந்த காலம் அன்று இயக்குனர் ஜாம்பவான் பத்மராஜனின் கூடேவிடே படத்தில் மம்மூட்டி, சுஹாசினி ஆகியோருடன் நடித்து சூப்பர் ஸ்டார் நடிகர்களுக்கு இணையாக புகழ் உச்சியில் இருந்தார் ரஹ்மான். நானும் அன்று ரஹ்மானின் ரசிகன். வாய்ப்பு தேடி அலைந்து கொண்டிருந்த எனக்கு ஒரு வாய்ப்பு தேடி வந்தது. இன்னொரு ஜாம்பவானான பரதன் இயக்கத்தில் ரஹ்மான் கதாநாயகனாக நடிக்கும் 'சிலம்பு’ என்ற படத்தில். ஏதோ சைடு ரோல் என்று எண்ணி தான் பரதன் சாரிடம் சென்றேன். ஆனால் அவரோ நீ தான் ரஹ்மானுக்கு வில்லன் என்று சொல்லி இன்ப அதிர்ச்சி தந்தார். 



ரஹ்மான் அன்று பெரிய ஹீரோ. ஆள் பந்தாவாக இருப்பார் என்று நினைத்தேன். ஆனால் புது நடிகரான என்னோடு முதல் நாளே நண்பராக மாறி எனக்கு நடிப்பு டிப்ஸ் கொடுத்தார். தினமும் அவர் காரிலேயே என்னையும் அழைத்து செல்வார். எனது முதல் படமான சிலம்பு மாபெரும் வெற்றி பெற்று நானும் புகழ் பெற்றேன். அந்த நட்பு உணர்வும் மனித நேயமும் இன்று வரை ரஹ்மானுக்கு எள்ளளவும் குறையவில்லை. 

அதன் பின் ' பிளாக் ' என்ற படத்தில் நாங்கள் இணைந்து ஒரு நாள் மட்டும் நடித்தோம். இப்போது பல ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் பேட் பாய்ஸ் ல் அவர் நாயகனாகவும், நான் வில்லனாக  நடிக்கிறேன். இது எனக்கு இரட்டிப்பு மகிழச்சி அளிக்கிறது. நான் இதில் வில்லனா நல்லவனா என்பது படம் வெளியான பின் நீங்களே சொல்லுங்கள். ஓணம் பண்டிகை காலத்தில் மொழி பேதமின்றி எல்லோரும் ரசிக்கும் படியான பொழுது போக்கு படமாக இருக்கும் 'பேட்  பாய்ஸ்’ என கூறியுள்ளார்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

அம்பிகையும், சொக்கரும் கை கோர்த்து அரசாண்ட மதுரை.. மீனாட்சி சுந்தரேஸ்வரர் சிறப்புகள்!

news

சார் மேடம் எங்கே.. அசர வைத்த ஏர்ஹோஸ்டஸ்.. மறக்க முடியாத பாஸ்டன் விமான பயணம்!

news

யானை பூனையாச்சு நீல வானத்தில் வெண்பஞ்சு திரள்.. மூவரி கவிதைகள்!

news

Happay Vinayagar Chaturthi: முழுமுதற் கடவுளே துணை நீயே

news

பட்டிமன்றத்தை பட்டி தொட்டியெங்கும் பயணிக்க வைத்த பண்பாட்டுத் தமிழன்!

news

Tasty Lunch Recipes: கமகமக்கும்.. சுவையான உருண்டை குழம்பு

news

பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும்.. இலக்கியத்தில் விநாயகர்!

news

அசுரனை அழிக்க ஆவணி சதுர்த்தியில் அருளிய விநாயகப் பெருமான்!

news

கருத்து மிகுந்தவளே கருத்துக்காளை மருமகளே உருத்தான சொந்தம் நீ உசுரான பந்தம் நீ!

அதிகம் பார்க்கும் செய்திகள்